நான் சளைத்தவளல்ல பாகம் : 01
இயற்கை எழில் சூழ்ந்த பச்சை பசேலென காட்சியளிக்கும் தேயிலை செடிகளுக்கு மத்தியில், பனிமூட்டம் சூழ, நுவரெலியாவின் குளிர் சாயலுடன் அப்பாதை வழியாக அமையப்பெற்ற ஒரு சின்னம் சிறிய கிராமத்தில் பத்து இரத்த உறவுகளுடன் இத்தரனியில் உதித்தாள் சபாயா.
எத்துன்பத்திலும் கல்வியையும், இறையச்சத்தையும் கைவிடாது தொடர்ததால் அவளுக்கு ஏற்ப அவளுடைய திருமண வயது நெருங்கியதும் ராஸின் என்பவரை திருமணம் செய்துக்கொண்டாள்.
பின் அழகிய உருவில் பூரண சந்திரனைப்போன்ற பூரண சுகத்துடன் முதலாம் நட்சத்திரம் பிரகாசித்தது. அக்களிப்புடன், அவளுக்கு எல்லா வசதிகளுடனும் ஒரு வீடு இருந்தது. அதில் குழந்தையுடன் சந்தோசமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது அந்த வீட்டை அவனுடைய சகோதரன் சண்டையிட்டு பலாத்காரமாக எடுத்துவிட்டு எந்தவித வசதியும் இல்லாத ஒரு இருட்டறை வழங்கப்பட்டது. அவ் ஓலைக் குடிசைக்குள் ஏனைய நட்சத்திரங்களை இறையருளால் வாரிசாகப் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
மாலை ஐந்து மணியானால் இருள் சூழும் அக்கிராமத்தில் குடிக்காரர்களின் தூசன வார்த்தைகளும், சண்டை சச்சரவுகளும் ஊரையே அதிர வைக்கும். தந்தையும் தொழிலுக்காக வெளிப் பிரதேசங்களுக்கு சென்று விடுவார். தன் குழந்தைகளுடன் பயத்துடன் இரவை கழிப்பாள்.
கிணற்று நீரை அள்ளி காலைக்கடன்களை முடித்து சின்னம் சிறுசுகளின் கடமைகளை நிறைவேற்றி, புகை மண்டலக் கிளம்பலுடன், அடுப்பை மூட்டி உள்ளதைக்கொண்டு குழந்தைகளை பசிப்பட்டினி இல்லாமல் பராமரித்து வந்தாள்.
காலங்கள் சுழல்கிறது, மூத்தவளுக்கு நான்கு வயது, இரட்டையர்களுக்கு இரண்டு வயது, மூன்றமவள் பிறக்கிறாள். பிறந்த குழந்தையை கண்ணால் காண முடியாமல் ஒரு நெருக்கடிக்குள் தந்தை பிரச்சனைக்குள்ளாக்கப்பட்டார். என்ன பரிதாபம் குழந்தைகளுடன் அலைமோதிகிறாள்.
குடும்பத்தில் சிலர் கைகொடுத்தனர்.பலர் கைவிரித்தனர்.
மீண்டும் இருட்டறைக்குள் பக்கத்து வீட்டு ஓர் விதவைப் பெண் உதவியாக நிற்பாள். இவ்வாறாக ஒரு நாள் தந்தையின் தாய் போராடி தந்தையை காப்பாற்றி குழந்தைகளுடன் கொண்டு வந்து சேர்த்து விட்டாள். அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறாக தொழிலில் சிக்கல்பட்டதனால் சற்று கடன் பிரச்சினையும் ஏற்பட்டு விட்டது. இதனால் தந்தை சற்று நெருக்கீட்டுக்குள்ளாகிவிட்டார். சற்று ஊரைவிட்டு ஒதுங்கியிருந்தார். மீண்டும் தாய் அலைமோதுகிறாள். என்றாலும் ரப்பை நினைவுபடுத்துவதில் துளி கூட பின்வாங்கவில்லை.
அஸர்வேலை தொழுதுவிடுட்டு இறைவனிடம் மன்றாடிவிட்டு உடைந்த வீட்டின் கதவை மெல்ல சாய்க்கிறாள்.
அழகிய இத்தாயிடம் ஒரு சிங்கள அதிகாரி “உன் வறுமை நிலை அறிந்து வந்தேன். உன்கணவர் சற்று கடன் பிரச்சனையால் அவதிபடுவதனை அறிந்தேன். உன்னுடைய இருள் சூழ்ந்த இக்குடிலுக்கு நான் மின்சார வசதியை செய்து தருகிறேன். நீ ஒரே ஒரு விடயத்துக்கு மட்டும் எனக்கு இடமளித்தாள் போதும். என்னுடன் இன்றைய இரவை கழித்தால் போதும்” என்று கூறியதும் வானம் சுக்கு நூறாகி தலையில் விழுந்தால் போல் இருந்தது.
அல்லாஹ்வுக்கு பயந்தவளாய்,அர்ஷின் நிழலுக்கு சொந்தக்காரியாகவே என் வாழ்நாள் அமையவேண்டும் என்ற எண்ணத்தில், பதறித்துடித்துக் கொண்டு குழந்தைகள் நால்வரையும் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக பாதைக்கு ஓடிச்சென்று சத்தமிட்டு பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தவளாய், இறைவனிடம் உள்ளத்தால் போரடினாள்,
யா ரப்பு! என்வாழ்வின் எவ்வாறான இக்கட்டான கஷ்டங்கள், சோதனைகள் வந்தாலும் இறையச்சம், ஈமான் பாதுகாத்து தந்தருள்வாயாக! அதேபோல எவ்வளவு காலம் சென்றாலும் என்கணவனின் உழைப்பாலே கரன்ட் எடுப்பதற்கு வசதியைத்தா! வறுமை அகோரமானாலும் என்குடும்பத்தை உனக்கு மாறு செய்வோனாக ஆக்கிவிடாதே யாரப்பு!
என்று மன்றாடும்போது, அவளுடைய வயோதிப சிறிய தந்தை வந்தார். உடனே பதுங்கி பயந்தவனாய் அதிகாரி ஓடி விட்டான். அன்றிலிருந்து அவளுடைய சிறிய தந்தை மற்றும் அந்த விதவைப் பெண்ணை தொடர்ந்தும் ஏழைக்குடிலுக்குள் வைத்துக்கொண்டாள்.
முடியுமான அளவுக்கு தையலில் முயற்சி எடுத்து சற்று கடனை இருவரும் நீக்கினர். பின் தந்தையும் வீட்டுக்கு வந்துவிட்டார். இரவு பகல் பாராமல் பெற்றோர் இவ் ஐவரையும் ஈருலகிற்கும் பயனளிக்கும் பிள்ளைகளாக வளர்க்க மிகவும் தியாகத்துடன் செயற்பட்டனர்.
தொடரும்
Ummu Adheeba
I discovered your weblog site on google and verify a number of of your early posts. Proceed to maintain up the superb operate. I just extra up your RSS feed to my MSN Information Reader. Seeking ahead to reading extra from you in a while!…