வாழ்க்கையை நடாத்துதல்

  • 14

வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு வாழ்க்கை நடத்தும் கலையை மனிதன் கற்றுக் கொள்வது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. வாழ்கை நடத்தும் கலை என்றால் தான் யார் தன்னால் என்னவெல்லாம் முடியும் என்பது போன்ற தன்னைப் பற்றிய மதிப்பீடுகளை மனிதன் ஒரு வகையில் புரிந்து கொண்டு மற்றொரு வகையில் தன்னை சுற்றிய உலகை நன்கு அறிந்து கொள்ளுதல் ஆகும். அதன் பின்னர் அவன் தன் வாழ்க்கையை சரியான உண்மையான முறையில் திட்டமிட்டுக் கொள்ளலாம் மேலும் எங்கே எப்பொழுது வேண்டும் என்றாலும் திட்டமிட்ட வாழ்க்கை முறையை மேம்படுத்தி கொள்ளலாம்.

ஒருவர் தனது வாழ்க்கையை நன்றாக திட்டமிட்டு செயல்படுத்தினாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் ஒரே அலகு அதாவது அளவை அவர் வாழ்க்கையினால் ஏற்பட்ட விளைவே ஆகும். எதிர்மறையான விளைவை தரும் திட்டம் சரியானதல்ல நேர்மையான விளைவைத் தரும் திட்டம் சரியானதாகும். ஒரு செயலை அதனைச் செய்யும் இலக்கணப்படி ஆராய்வது அல்லது தேர்வு செய்வது என்பது விவேகமானது அல்ல தௌிவான முறையில் ஆராய்ந்து ஆராய்வது என்பது தான் விவேகமான செயலாகும்.

ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான உறவு என்பது நுட்பமான விவகாரமாகும். ஏனென்றால் அவர்கள் இரத்த பந்த உறவு உடையவர்களாய் இருப்பதில்லை. ஆகவே இந்த உறவுமுறை வெற்றியாம் வெற்றிகரமானதாக்க உணர்ச்சி வயப்பட்ட நிலைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட காரண காரியங்களை சீர்தூக்கி அறியும் அறிவே பயன்படுத்துவது ஒன்றே வழி இரத்த உறவு முறைகளில் உன் ஓர் உணர்வுபூர்வமான பந்தம் இருக்கும் ஆனாலும் கூட விழிப்புணர்வுடன் கூடிய முயற்சிகளை அல்லது செயல்படும் முறைகளை ஒருவர் செய்ய வேண்டும்.

இரத்த பந்தங்கள் இயல்பாகவே உள்ள உறவு வேகம் கணவன் மனைவி என்ற உறவில் இருப்பதில்லை. ஆதலால் இந்த கணவன் மனைவி என்ற உறவு முறை பகுத்தாய்ந்து நிர்வாகிகள் என்பதாக இல்லாமல் வெற்றிகரமாக நிர்வகிப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கின்றது. சுருக்கமாக சொல்வதானால் இயற்கையின் உந்து சக்தியால் இரத்த பந்த உறவு தானாகவே அமைதியில் இரத்த பந்தம் அல்லாத உறவுமுறை விழிப்புணர்வுடன் ஊறிய மனப்பூர்வமான முயற்சி மற்றும் பகுத்தறிவு கொண்ட நிர்வாகிக்கும் தன்மையால் அமையக் கூடியதாகும்.

( மவுலானா வஹிதுத்தின் தான் மற்றும் யூசுப் ராஜா)
நபீஸ் நளீர்
Ibbagamuwa
Kurnagala

வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு வாழ்க்கை நடத்தும் கலையை மனிதன் கற்றுக் கொள்வது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. வாழ்கை நடத்தும் கலை என்றால் தான் யார் தன்னால் என்னவெல்லாம் முடியும் என்பது போன்ற தன்னைப்…

வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு வாழ்க்கை நடத்தும் கலையை மனிதன் கற்றுக் கொள்வது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. வாழ்கை நடத்தும் கலை என்றால் தான் யார் தன்னால் என்னவெல்லாம் முடியும் என்பது போன்ற தன்னைப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *