காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 01

  • 29

அடர்ந்த காடு ஊழிப்பெருவெள்ளத்தில் இருந்து உயிர் தப்பிய மூதாதை நோவாவின் (உத்னாபிஷ் டிமின்) வழிகாட்டல்களை பின்பற்றி குகையில் தவமிருந்து உயிர் ரகசியத்தை அறிந்து கொண்டு 8000 வருடங்களின் பின்னர் வெளியேறுகிறான் கில்கமேஷ்.

தான் எவ்வளவு காலம் குகையில் தரித்து இருந்தான் என்பது அவனுக்கு தெரியாது. அது ஓரிரு வருடங்களாக இருக்கும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

தான் ஆட்சி செய்த நாட்டையும் மக்களையும் பார்க்கும் ஆவலுடனும். எதற்காக இப்படி ஒரு சரித்திர பயணத்தை மேற்கொண்டானோ அதன் பயனை அடையப்போகும் அகங்காரத்துடனும் குகை வாசலை அடைந்தான்.

தனது உயிர் நண்பன் என்கிடுவை கொன்ற கடவுளர்களை எல்லாம் வெறுத்து ஒதுக்கினான். அடர்ந்த நீண்ட முடியையும் நீண்ட தாடியையும் கொண்ட உருவாய் தேவதாரு மரங்களை எல்லாம் கடந்து காட்டை கடக்க முயன்றான்.

அந்த காடே மொத்தமாக மாறிப்போன மாதிரி உணர்ந்தான். இங்குதான் ஹம்பாபா என்ற கொடிய அரக்கனை என்கிடுவும் கில்கமேஷும் சேர்ந்து ஒழித்து கட்டினார்கள். நன்று வளர்ந்து முற்றிப்போய் இருந்த தேவதாரு மரத்தின் மீது கையை வைத்து “தூண்களுக்கு உதவும்”என்று சொல்லிக்கொண்டான். உருக் நகரை அடைந்ததும் இவற்றை கொண்டு நகரை மீள்நிர்மாணிக்க திட்டம் போட்டான். தன்னுடைய இலட்சியத்தை அடைந்ததும் மறுபடியும் சாவுக்கடலை (சாக் கடல்) கடந்து நோவாவை சந்திக்க வேண்டும்.

“இம்முறை என்னோடு நிச்சயம் என்கிடுவும் இருப்பான்.”என்று சொல்லிக்கொண்டான். வெறுமனே காட்டினுள் நடப்பது அவனுக்கு வெறுத்து விட்டது. “இந்த காட்டிற்கு என்னவாயிற்று? ஏன் இவ்வளவு அமைதி…” என்றெண்ணியவன் சத்தமிட்டு

“ஏய், கூறிய பற்களோடு என்னை எப்போதும் கொல்ல காத்திருந்த சிங்கங்கள் எங்கே? பெரிய பெரிய தந்தங்களை சுமந்த யானைகள் எங்கே? எல்லாருக்குக்கும் பயம் பிடித்து கொண்டதா? என்னை தொடக்கூட முடியாது என்பதை புரிந்து கொண்டீர்களா? நான் மீண்டும் வருவேன். இந்த மரங்களை எல்லாம் என் நகரத்தில் கொண்டுபோய் குவிப்பேன்.” என்று சொல்லிக்கொண்டே காட்டை விட்டு வெளியேறி போனான்.

சூரிய வெளிச்சம் அவன் கண்களை கூச கைகளால் தடுப்பு கொடுத்து விட்டு வெளியுலகை பார்த்தான்.

“என்ன……”

**********

தற்போதைய இத்தாலி,

சிசிலி நகரம்.

“அவ ரெடி ஆவிட்டாளா இல்லையா கேட்டு சொல்லு”

“கொஞ்சம் பொறுமையா இரு ஆர்தர். இப்போதானே ஜெனிபர் உள்ளே போனாள்.”

“ஆமா… அவ வர்றதுக்குள்ள அவங்க வண்டிய எடுத்துடுவாங்க…. இப்போ நீ போய் கதவை தட்டுறியா..  இல்லே நானே போகட்டுமா மீரா!.

“இல்லே இல்லே …இரு நானே போறேன்..” என்று சொல்லி கொண்டே மீரா ஹாஸ்டலுக்குள் நுழைந்து அவளது அறைக்கு சென்றாள்.

இன்றைக்கு ஜெனிபரும் அவளது நண்பர்களும் ப்ரொபெஸர் லாரன்ஸ் கூட ஒரு ஆராய்ச்சிக்கு போறாங்க. மத்தவங்க எல்லோரும் ஏற்கனவே பஸ்ஸில் ஏறிவிட்டார்கள். இவள் தான் இன்னும் வெளியாகவில்லை. மீரா கதவை திறக்க முன்னரே ஜெனிபர் தயாராகி வெளியே வந்துவிட்டாள்.

“உன்னால பெரிய ரோதனை அடி… அங்க ஆர்தர் குதி குதி என்னு குதிக்கிறான்.”

“கொஞ்சம் பேசாம வர்றியா…”

கல்லூரியின் வாசலை அடைந்ததும் “அவசரமா வாங்க “என்ற ஆர்த்தரின் குரல் கேட்டு நண்பிக்கள் இருவரும் ஓடோடி சென்று பஸ்ஸில் ஏறிக்கொண்டனர்.

உள்ளே ப்ரொபெஸர் லாரன்ஸ் இருந்ததால் சத்தமின்றி தத்தம் இடங்களில் அமர்ந்து கொள்ள வண்டி புறப்பட்டது.

ஜன்னல் அருகில் அமர்ந்தே ஜெனிபர் தனக்கு பிடித்த மியூசிக் ஒன்றை காதில் போட்டு கொண்டு கையில் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு படிக்க பஸ்ஸும் புறப்பட்டது.

“ஆமா சேர் ! நாம எங்க போறோம் என்னு இன்னும் நீங்க சொல்லவே இல்லியே!”என்றான் விக்கி.

“முதலில் நாம மியூசியம் போறோம் . அப்பறமா இருக்கு உங்க எல்லோருக்கும் அதிர்ச்சி!”என்றார்.

“அதிர்ச்சியா… அப்படி என்னா நீங்க என்ன எங்களுக்கு சாக் வைக்க போறீங்களா?”

“வந்துபாருங்க தெரிஞ்சிக்குவீங்க..”

“சேர்! நீங்க எவ்வளவு சாக் வெச்சாலும் நாங்க சாகமாட்டோம். நாங்கெல்லாம் நோவாவோட பரம்பரை சார்!”

“சும்மா ஒளராதே டா… அதெல்லாம் பொய் கதை….”

“இல்ல அதெல்லாம் உண்மைதா “

“இல்லவே இல்ல சேர் நீங்களே சொல்லுங்க அதெல்லாம் பொய் தானே!”

“எனக்கு தெரியல்ல பா… ஆனா என்னோட அப்பா இதெல்லாம் ரொம்ப நம்புவாரு…. நாம  பொறக்குறதுக்கு எத்தனையோ வருடங்களுக்கு முதலில் நடந்து இருக்க வாய்ப்பு இருக்கே…”என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வண்டி பிரேக் டவுன் ஆகி தடார் என நின்றது.

அந்த கலக்கத்தில் விழித்து கொண்ட ஜெனிபர் அப்போது தான் இவ்வளவு நேரம் தான் தூங்கி கொண்டிருந்ததை உணர்ந்தாள்.

“என்னாச்சு ட்ரைவர்!”

“தெரியல சேர்.. இதோ பார்த்து சொல்லுறேன் “என்றவன் அதை சரிபார்க்க இறங்கி விட்டான்.

“போங்க ரெண்டு மூணு பேர் போய் டிரைவருக்கு உதவி பண்ணுங்க.அதுவரைக்கும் நாம ஏதாவது சாப்பாடு ஆர்டர் பண்ணலாம். பக்கத்துல எங்காவது ஹோட்டல் இருக்கும். என்கூட மத்த பாய்ஸ் வாங்க”என்று கூப்பிட்டார்.

“ஐயையோ சேர்… அப்போ நாங்க 6 பேரும் தனியா இருக்கிறதா?” என்று பயத்தில் ஸ்டெல்லா கேட்டாள்.

“பயப்பட தேவையில்லை.. நம்ம பசங்க முன்னாடி தான் இருக்காங்க… நாங்க வர்றோம்.”என்று விட்டு புறப்பட்டார். அவர் போகும் போது ஏதோ கீழே விழ அதை கையில் எடுத்தாள் ஜெனி.  அது ஒரு பழைய மோதிரம்……

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அடர்ந்த காடு ஊழிப்பெருவெள்ளத்தில் இருந்து உயிர் தப்பிய மூதாதை நோவாவின் (உத்னாபிஷ் டிமின்) வழிகாட்டல்களை பின்பற்றி குகையில் தவமிருந்து உயிர் ரகசியத்தை அறிந்து கொண்டு 8000 வருடங்களின் பின்னர் வெளியேறுகிறான் கில்கமேஷ். தான் எவ்வளவு…

அடர்ந்த காடு ஊழிப்பெருவெள்ளத்தில் இருந்து உயிர் தப்பிய மூதாதை நோவாவின் (உத்னாபிஷ் டிமின்) வழிகாட்டல்களை பின்பற்றி குகையில் தவமிருந்து உயிர் ரகசியத்தை அறிந்து கொண்டு 8000 வருடங்களின் பின்னர் வெளியேறுகிறான் கில்கமேஷ். தான் எவ்வளவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *