காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 03

  • 15

ப்ரொபெஸர் லாரன்ஸ் உள்ளே சென்று ஒவ்வொரு பொருளாக விளக்க ஆரம்பித்தார். என்னதான் அவர் விடயங்களை சொல்லித்தருவது போல நடித்தாலும் யார் கையில் ஆவது மோதிரம் தென் படுகிறதா என்பதை அவதானித்து கொண்டே இருந்தார்.

“இதுதான் மன்னர் நீரோவோட தலைக்கவசம்…. தனி பிளாட்டினத்தால செஞ்சது ..பல லட்சம் தேறும். இது ரோமின் பழங்கால பொக்கிஷம் கொலோசியம் கட்டுவதற்கு பயன்படுத்தி இருக்காங்க. இந்த சுத்தியல் தூய இரும்பால செஞ்சது. அவ்வளவு உறுதி.”என்கிறார்.

“அப்போது ஒருவன் சார் இதென்ன ?”என்று கேட்க எல்லோரும் அந்த பக்கம் திரும்ப கண்ணாடி பெட்டிக்குள் ஒரு கைக்கடிகாரம் இருந்தது. அதை பார்த்ததும் ஆவல் பொங்க அதை பார்த்த ப்ரொபோசரை ஜெனி மற்றும் நண்பர்கள் கவனிக்க தவறவில்லை.

“இதுவா… இது…..முழுவதும் வைரம் வைரம் ….”என்று பித்துப்பிடித்தவர் போலவே சொன்னவர் தன்னை சுதாரித்து கொண்டு ,தொண்டையை செருமி கொண்டு மேலும் பேச ஆரம்பித்தார். “இது நம்ம நாட்டு பிரஸிடெண்ட் இந்த மியூசியத்துக்கு அன்பளிப்பா கொடுத்தது.”

“ஒஹ்ஹ் ..பாக்குறதுக்கு கண்ணை பறிக்குதா சே….ர்?”என்று வேண்டுமென்றே ஆர்தர் கேட்டான்.

“சரி ,நீங்கெல்லாம் போய் ரிப்போர்ட் ரெடி பண்ண நோட்ஸ் எடுங்க.”என்றவர் அங்கேயே நின்று திருட்டு சாவி மூலம் பெட்டியை திறப்பதை மூவரும் பார்த்து விட்டனர்.

“பார்த்தியா ..நான் அப்பவே சொன்னேன் இல்ல… இந்த ஆளு பயங்கர கில்லாடி…. இப்படி தான் ஒவ்வொரு மியூசியமா திருடுறான் போல….. சே…”என்றாள் மீரா.

“இதை இப்படியே விடக்கூடாது டி …ஆர்தர் இதை உடனே உன்னோட கேமராவில் சூட் பண்ணு.. நமக்கும் ஆதாரம் வேணும் இல்ல.”

“சரி ஜெனி.”என்றவன் ப்ரொபெஸர் திருடுவதை படம் பிடித்தனர். அதை அவர் எடுத்துவிட்டார்.. ஆனா மியூசியம் வந்த ஒரு குழந்தை அடம்பிடித்து கொண்டு ஓடிவந்ததில் ஆர்தரின் போன் எங்கோ கொண்டுபோய் விழுந்தது. அந்த குழந்தையின் பெற்றோரும், வேலை செய்யும் ஆட்களும் ஓடிவந்ததால் குழப்பத்தில் அது எங்கு விழுந்தது என தெரியவில்லை.

“எங்க போச்சு…??”

“தெரியல்லியே… தேடுங்க…”

அங்குவந்த வேலையாட்கள் கண்ணாடி பெட்டி திறந்து இருப்பதை பார்த்துவிட்டு உடனே ரெட் அலர்ட் எழுப்பினர். உடனே மியூசியம் கதவு பூட்டப்பட்டது. பலருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ப்ரொபோசருக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பித்தது… அப்போது மைக்கில் பேசுவது எல்லோருக்கும் கேட்டது.

“அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பா வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான கடிகாரம் திருடப்பட்டு இருக்கு. இங்கு இருக்குற எல்லாரையும் செக் பண்ணி திருடனை கண்டுபிடிக்கும் வரைக்கும் யாரும் இங்கிருந்து வெளியேற முடியாது.”என்று அறிவிக்க மாணவர்களும் ப்ரொபோசரும் ஓரிடத்தில் சேர்ந்து கொண்டனர். போலீசார் வந்து ஒவ்வொருவராக செக் பண்ணி கொண்டிருந்தனர்.

அப்போது மீரா ஜெனியிடம். “அடச்சே இந்த போன் வேற எங்க போய் விழுந்ததோ தெரியல….” என ஜெனி பதற்றப்பட

“இங்க பாரு ஜெனி…அதான் போலீஸ் கண்ணால பார்த்து குற்றவாளிய தெரிஞ்சிக்க போகுதே… போனை பற்றி கவலைப்படாதே!”என்றான் ஆர்தர்.

“அடி.. அந்த மோதிரம் …அது இப்போ நம்ம கிட்ட இருக்க கூடாது… அப்படியே போய் அவர் பாக்கெட்ல போட்டுட்டு வா.” என்று மீரா சொல்ல அதன்படியே ப்ரொபோசரிடம் பேச்சு கொடுப்பது போல ஜெனி அவர் அருகில் சென்றாள்.

“என்ன சேர் இப்படி ஆச்சு… யாரு திருடி இருப்பாங்க….?”என்று பேச்சு கொடுத்தே அங்கும் இங்கும் பார்த்து கொண்டே மோதிரத்தை போட்டுவிட்டாள்.பின்னர் மீரா அருகில் வந்து நின்று கொண்டாள்.

போலீஸ் ஒவ்வொரு ஆட்களாக சோதனையிட்டு கொண்டுவர எப்படியும் ப்ரொபெஸர் மாட்டுவார் என்ற நம்பிக்கையோடு மூவரும் பொலிஸாரின் சோதனைக்கு ஒத்துழைக்க யாரும் எதிர்பாராத வகையில் அந்த கடிகாரத்தை ஜெனியின் ஹாண்ட் பேக்கில் இருந்து எடுத்தனர் பொலிஸார்.

“என்ன?????”

குழப்பத்தில் ஜெனிபர்க்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

“இது எப்படி நடந்தது.. இதெப்ப…”

“மீரா… எனக்கு ஒன்னும் தெரியாது..”

“அரேஸ்ட் பண்ணுங்க இந்த பொண்ணை..”என்னு போலீஸ் அவளை பிடிக்க முயல மீராவும் ஆர்தரும் குறுக்கே வந்து அவர்களை தடுத்தனர்.

“சேர் …நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. உண்மையான குற்றவாளி.. அதோ அங்க  நிக்குறாரு…” என்று ப்ரொபோசரை காட்ட அவர்கள் கேட்பதாக இல்லை.

திடீரென ப்ரொபோசரும் பயந்துதான் போனார். எதேச்சையாக கோர்ட்டுக்குள் கையை போட்டவர் மோதிரம் பிடிபட எப்படியோ அதையும் எப்படியோ ஒளித்து விட்டார்.

“சேர்.. என்னை விடுங்க..அவரு திருடினத்துக்கு ஆதாரம் எங்க கிட்ட இருக்கு “என்றதும் கொஞ்ச நேரம் எல்லோரும் அமைதியாக

“அப்படியா அப்போ ஆதாரத்தை காட்டுங்க”என்றார் போலீஸ்.

ப்ரொபோஸருக்கு வியர்த்து கொட்டியது… இவர்களுக்கும் என்ன செய்வதன புரியவில்லை. இப்போது ஜெனி என்ன செய்வதென தெரியாமல் முழித்தாள்.

மீண்டும் வருவான்…….

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ப்ரொபெஸர் லாரன்ஸ் உள்ளே சென்று ஒவ்வொரு பொருளாக விளக்க ஆரம்பித்தார். என்னதான் அவர் விடயங்களை சொல்லித்தருவது போல நடித்தாலும் யார் கையில் ஆவது மோதிரம் தென் படுகிறதா என்பதை அவதானித்து கொண்டே இருந்தார். “இதுதான்…

ப்ரொபெஸர் லாரன்ஸ் உள்ளே சென்று ஒவ்வொரு பொருளாக விளக்க ஆரம்பித்தார். என்னதான் அவர் விடயங்களை சொல்லித்தருவது போல நடித்தாலும் யார் கையில் ஆவது மோதிரம் தென் படுகிறதா என்பதை அவதானித்து கொண்டே இருந்தார். “இதுதான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *