காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 04

  • 10

“அர்ரெஸ்ட் ஹேர்!” என்ற பெரிய சத்தத்தில் தான் குற்றவாளியாக்கப்படுவதை ஜெனிபரால் தாங்கி கொள்ள முடியவில்லை. கையும் களவுமாக பிடிப்பட்டதால் போன், ஆதாரம் என்று கத்தியது எல்லாம் போலீசாருக்கு ஏதோ தப்பிப்பதற்காக சொன்ன வெற்று வார்த்தகளாகவே தெரிந்தன. குற்றவாளிக்கு உடந்தையாக இருந்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும், போலீசாரை அவர்களது கடமையை செய்யவிடாது தடுத்தார்கள் என்ற வகையிலும் மீராவும் ஆர்தரும் கூட விலங்கிடப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டனர்.

நல்லவேளை நாம தப்பித்தோம் என்கிற திருப்தியில் ப்ரொபெஸர் இருந்தாலும் தன்னைப்பற்றிய ஆதாரம் இருக்கும் அந்த போனை பற்றிய கவலை அவரை ஆட்கொண்டது. கூடவந்த மாணவர்கள் எல்லாம் இவர்களை தவறாக பேச ஆரம்பித்து விடவே கண்ணீருடன் ஜெனி ஜீப்பில் ஏறிக்கொண்டாள்.

வண்டி புறப்பட்டதும் மூவரும் எதுவுமே பேசாமல் மௌனமாகவே வந்தனர். ஆர்தருக்கு அந்த ப்ரொபோசரை கொல்லும் அளவுக்கு கோபம் இருந்தது. கொஞ்ச தூரம் போய் இருப்பார்கள். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. சட்டென ஆளுக்காள் கண்களால் பேசிக்கொண்டனர் .அந்த ஜீப்பில் இருந்தது இரண்டு போலீசும் ஒரு டிரைவரும் தான். கைவிலங்குகளோடவே அவர்களை தாக்கி தள்ளி விட்டு அருகில் இருந்த சரிவான கட்டுக்குள் குதித்தனர் மூவரும். பாதையில் இருந்து நன்கு சரிந்து பள்ளமாக இருந்த காட்டிற்குள் மூவரும் உருண்டு விழுந்தனர். சுதாரித்து கொண்டு எழுந்து வந்து போலீசார் பார்த்த போது மூவரும் காட்டின் அடர்ந்த பகுதிக்குள் காணாமல் போய் இருந்தனர்.

“சேர் இப்போ என்ன பண்ணுறது?”என்று கான்ஸ்டபிள் கேட்க அதற்கு இன்ஸ்பெக்டர்,

“நாம முதலில் ஸ்டேஷனுக்கு போய் இன்போர்ம் பண்ணிட்டு போர்ஸோட வருவோம்.”என்று சொல்லி தொப்பியை சரி செய்தார்.

********

“ஆஹ்…..ஆஹ்…”

கொஞ்சம் தள்ளி தள்ளி மூவரும் விழுந்து கிடந்தனர். உடம்பெல்லாம் பயங்கர காயங்கள். மீரா கைவிலங்கின் சாவியை அப்போதே எடுத்து விட்டதால் அதனை கொண்டு ஆர்தர் மற்றும் ஜெனியின் கைவிலங்குகளை திறந்து விட்டாள். ஜெனி இன்னும் மயக்கத்தில் இருந்து எழும்பவில்லை.

“இப்போ என்ன பண்ணுறது?”

“நான் ஜெனியை தூக்கிட்டு வர்றேன். பக்கத்துல ஏதோ அருவி சத்தம் கேக்குது.”என்றவன் அவளை தோளில் போட்டு கொண்டான். இருவரும் அருவி ஓசை கேட்ட திசையில் நடந்தனர்.

“நான் அந்த ப்ரொபோசரை கொல்லாம விடமாட்டேன்.”என்று ஆத்திரத்தில் கத்தினான் ஆர்தர்.

“எனக்கு ஒண்ணு மட்டும் புரியல்ல எப்படி அது ஜெனி பேக்கில் வந்து இருக்கும்?”என மீரா சந்தேகத்தில் கேட்டாள்.

“மோதிரத்தை போடுவதற்காக ஜெனி அந்த திருடன் கிட்ட போனாளே, அப்போதான் போட்டிருப்பான் போல இருக்கு.”

“சே.. கடைசியா. நம்ம மேல பழி விழுந்திடுச்சே!”என வருத்தப்பட்டாள் மீரா.

“ஏய் அங்க பாரு நீர்வீழ்ச்சி!”என்றவன்  வேகமாக நடந்து அதன் அருகில் சென்று ஜெனியை ஓரிடத்தில் கிடத்தி விட்டு ஆற்றில் கொஞ்சம் தண்ணீரை கையில் எடுத்து வந்து அவளுக்கு தெளித்தான்.

“ஜெனி…ஜெனி..”என மீரா அவளை எழுப்ப மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்தது. அவளை உட்கார வைத்தனர்..

“மீரா,…. ஆர்தர்….”என இருவரையும் அருகில் கண்டவள் சந்தோஷத்தில் அவர்களை சேர்த்து அணைத்து கொண்டாள். சில நிமிடங்கள் மறைந்தன.

“போலீஸை அடிச்சிட்டு தப்பி வந்து இருக்கோம் ..இது தப்பு இல்லியா?” என மீரா கேட்டாள்

“என்ன பெரிய தப்பு.. அப்போ அவங்க பண்ணது மட்டும் சரியா, உண்மையான திருடனை விட்டுட்டு நம்மள அரேஸ்ட் பண்ணாங்களே அதை விடவா?”என கொதித்தான் ஆர்தர்.

“தப்புதான்… ஆனா நாம அதை சரிபண்ணியே ஆகணும். மறுபடியும் அவங்க நம்மளை தேடி வருவாங்க. பிடிச்சிட்டாங்க என்னா அவ்வளவு தான் .நாம படிச்ச படிப்புக்கே அர்த்தம் இல்லாம போய்டும். ஒரு ஸ்டுடெண்ட் ஜெயில்ல இருந்தா அவனோட கரியர் நாசமாயிடும்.”என்றாள் ஜெனி.

“இப்போ என்ன பண்ணலாம் எங்குறே? எப்படி இதை சரிபண்ண போறோம்?”என மீரா கேட்டாள்.

“நமக்கு அந்த ஆதாரம் கிடைச்சா போதும்… எல்லாமே மாறிடும்.”என்றாள் ஜெனி.

“என்னோட போன் தான் மியூசியம்ல எங்கோ விழுந்திடுச்சே… நாம அங்க போகவும் முடியாது. நம்மளை போலீஸ் எப்போவேனாலும் அரேஸ்ட் பண்ண காத்திருக்காங்க.”என்றான் ஆர்தர்.

“இல்ல ஆர்தர்… நாம எப்படியாவது உன்னோட போனை எடுத்தே ஆகணும்.. மியூசியத்துக்குள்ள போனால் தான் அது முடியும்.”

“என்ன சொல்ற ஜெனி.. அது ஒன்னும் சாதாரண வேலை இல்லை… ரொம்ப ரிஸ்க்… மறுபடியும் மாட்டினா அவ்வளவு தான்.”

“ஊர்ல இருக்குற நம்ம பேரன்ஸுக்கு இந்நேரம் தகவல் போய் இருக்கும். நம்மள பிடிக்க போலீஸ் அங்கேயும் இருப்பாங்க.. அதனால வீட்டுக்கு இப்போதைக்கு போக முடியாது… மம்ஹ்… என்ன பண்ணலாம்…..” என யோசித்து கொண்டிருக்கும் போது அருகில் இருந்த புதருக்குள் சத்தம் கேட்டது.

“அதென்ன சத்தம்?”

“ஏதோ காட்டு விலங்கா இருக்குமோ?”என மீரா பயத்துடன் கேட்க புதர்களை விலக்கி கொண்டு வந்து நின்றான் கில்கமேஷ்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“அர்ரெஸ்ட் ஹேர்!” என்ற பெரிய சத்தத்தில் தான் குற்றவாளியாக்கப்படுவதை ஜெனிபரால் தாங்கி கொள்ள முடியவில்லை. கையும் களவுமாக பிடிப்பட்டதால் போன், ஆதாரம் என்று கத்தியது எல்லாம் போலீசாருக்கு ஏதோ தப்பிப்பதற்காக சொன்ன வெற்று வார்த்தகளாகவே…

“அர்ரெஸ்ட் ஹேர்!” என்ற பெரிய சத்தத்தில் தான் குற்றவாளியாக்கப்படுவதை ஜெனிபரால் தாங்கி கொள்ள முடியவில்லை. கையும் களவுமாக பிடிப்பட்டதால் போன், ஆதாரம் என்று கத்தியது எல்லாம் போலீசாருக்கு ஏதோ தப்பிப்பதற்காக சொன்ன வெற்று வார்த்தகளாகவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *