வில்பத்து வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தல்
-
by admin
- 1
2017.03.24ம் திகதி ஜனாதிபதியின் ரஷ்யாவுக்கான விஜயத்தின் மத்தியில் வில்பத்து சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள நான்கு பிரதேசங்களை உள்ளடக்கி அவற்றை பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.
வில்பத்து வனப்பகுதி தொடர்பாக வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
Tamil
Sinhala
English
வில்பத்து வனப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40030.25 ஹெக்டேயர் நிலம் அரச பாதுகாப்பு வனமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மவில்லு, வெப்பல், கரடிக்குழி மறிச்சுக்கட்டி பிரதேசங்கள் காட்டுப் பெரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப் பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.
வில்பத்து பிரதேசமானது முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசமாகும். மேலும் இப்பகுதியில் கடந்த அரசின் இறுதிக் காலம் தொடக்கம் இன்று வரை பல பிரச்சினைகளையும் சட்ட சிக்கல்களையும் எதிர் நோக்கிய பெரதேசமாகும். மேலும் இறுதி வர்த்தமானி அறிவித்தலை தொடர்ந்து பொது மக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஹுனைஸ் நகர், கொண்டச்சி, அகத்திமுறிப்பு, பொற்கேணி, வேப்பங்குளம் ஆகிய கிராம மக்களும் இணைந்துகொண்டனர்.
அத்துடன் விஷ்ணு அமைப்பு, சிவம் பவுண்டேஷன் மற்றும் பிரதேச கிறிஸ்தவ பாதிரிமார்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
முசலி பிரதேச அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் இதற்கு பூரண ஆதரவு வழங்கினர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில்,
பல வருடகாலமாக நாங்கள் வாழ்ந்த காணிகளை வில்பத்து பிரதேசமாக பிரகடனப்படுத்தியதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எமது பூர்வீக நிலத்தை பறிப்பதற்கு பதிலாக பாதாள குழியொன்றை தோண்டி எம்மை அதற்கு புதைத்து விடுங்கள். இல்லையேல் எமக்கு வாழ்வதற்கான உரிமைகளை தாருங்கள். இது எமது பூர்வீகம். இங்கு வாழ்ந்து மடிவதற்கே நாம் விரும்புகிறோம். ஜனாதிபதிதான் இங்கு நாம் வாழ்வதா? அல்லது எங்களை அழிக்கப்போகறீரா என்பதை தீர்மானிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.
அத்துடன், கடந்த ஆட்சிக் காலத்தில் எங்களுக்கு அநியாயம் இடம்பெற்றதாகத் தெரிவித்து தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம்.
ஆனால் இந்த அரசாங்கம் எங்களுக்கு நல்லதை செய்யாமல் எங்கள் உறவுகள் பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சூழ்ச்சி வேலைகளை செய்துள்ளது. எங்கள் போராட்டத்திற்கு கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.
பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் பயன்படுத்திய வாசகங்கள்.
“நல்லாட்சி அரசே முசலி மக்களை பூர்விக இடத்தில் வாழவிடு”
நல்லாட்சி அரசே வில்பத்துக்குள் வீடு வரவில்லை. வீட்டுக்குள்தான் வில்பத்து வந்ததுள்ளது.”
மிருகங்களுக்கு வாழவிடும் அரசே எமது மக்களின் வல்விடத்தை பறிக்காதே.”
இக்கருத்தை உறுதி செய்யும் விதத்தில் அமைச்சர்களும் தமது கருத்தை வெளியிட்டனர்.
வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்த கருத்து.
முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியே இது : ரிஷாட்: வில்பத்து வனத்தை விரிவுபடுத்துமாறும், அதனை வனஜீவிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை மறிச்சுக்கட்டியில் வாழும் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் அபகரிப்பதற்காகவாகும். இது ஜனாதிபதியின் தவறான முடிவாகும். ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் என்னும் இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மேற்கொள்ளும் இச்செயல் திட்டமிட்ட சதியாகும்.
ஜனாதிபதி தனது பிழையான முடிவினை மாற்றிக்கொள்ளாவிட்டால் முஸ்லிம்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்பதற்கு தயாராக இருக்கிறேன்.”
நாட்டின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பங்களிப்புச்செய்த முஸ்லிம்களின் இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகளுக்கு ஜனாதிபதி துரோகம் செய்ய எத்தனித்துள்ளமை மக்களை கவலையடையச் செய்துள்ளது. நாட்டின் தலைவராக, ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியிலமர்த்த பங்களிப்பு செய்த முஸ்லிம்களை அவர் கறிவேப்பிலையாக கருதியிருக்கின்றார்.
ஜனாதிபதியின் கூற்றுப்படி மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலக்குழி, கொண்டச்சி, முள்ளிக்குளம் பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாகவுள்ளனர். இதேவேளை 1938 ஆம் ஆண்டு வன பரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமானதென வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்ட கலாபோகஸ்வெவ எனும் பிரதேச காணிகளே காணிக் கச்சேரி நடத்தப்படாது எவ்வித சட்ட ஏற்பாடுகளுமின்றி தென் இலங்கை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் சுமார் 40 பிரதேச செயலகங்களில் முசலி பிரதேச செயலகப் பிரிவிலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனவே முஸ்லிம்களுக்கு எதிரான சதித் திட்டமாகவே நாங்கள் இதைக் கருதுகிறோம்.”
வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்த கருத்து.
“வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம் தரப்பின் நியாயத்தையும் பிரச்சினைகளையும் காதுதாழ்த்தாது ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்திருக்கின்றமை தெளிவாகின்றது. அண்மையில் சைட்டம் விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது அனைத்து தரப்புடனும் பேசி சமரசத்துக்கு வரலாம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏன் இவ்விடயத்தில் முஸ்லிம்களின் கருத்துக்களை ஆராயவில்லை என கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.
மறிச்சிக்கட்டி, மாவில்லு, வெப்பல், விளாத்திக்குளம் மற்றும் பெரிய முறிப்பு உள்ளடங்கிய பகுதிகள் பாதுகாப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தியமை பெரும் தவறாகும். இதில் ஜனாதிபதி பேரினவாதிகளின் கருத்துக்களுக்கே முன்னுரிமையளித்து அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கின்றார்.
மறிச்சிக்கட்டி உள்ளிட்ட பகுதிகள் முஸ்லிம் மக்களின் பூர்வீக காணிகள் என அண்மையில் அங்கு சென்று கள ஆய்வை மேற்கொண்டு வந்த சூழலியலாளர்கள் குறிப்பிட்டும் ஜனாதிபதி இவ்வாறு வர்த்தமானி அறிவித்தலில் ஒப்பமிட்டிருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது முஸ்லிம் மக்களின் உரிமைகளில் கைவைக்கும் செயற்பாடாகும். மக்களின் சொந்த காணிகளை திட்டமிட்டு அபகரிக்கும் செயற்பாடாகும்.
இந்த அரசாங்கம் மக்களின் உரிமைகளை கொடுப்பதற்கு பதிலாக பறிக்கிறது. இவர்களிடம் எவ்வாறு சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனும் கேள்வி எழுந்திருக்கிறது.
இதேவேளை, இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பெரும் தவறினை இழைத்திருக்கின்றனர். வில்பத்து விடயத்தில் அவர்களால் வெறும் விளம்பரத்திற்காக ஹோட்டல்களில் கலந்துரையாடல்களை நடத்தவே முடிந்தது. ஆனால், முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க முடியாது போனது.
இது இரண்டாவது வர்த்தமானி பிரகடனமாகும். 2012 ஆம் ஆண்டு இதே போன்றதொரு வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்பட்டது. எனினும் அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட பகுதி ஒப்பீட்டளவில் தற்போது பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை விடச் சிறியதாகும். இந்நிலையில் முதலாவது பிரகடனம் வெளியிடப்பட்டமை 2015 ஆம் ஆண்டுவரை தனக்குத் தெரியாது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அப்போதும் அவர் அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.
அச்சமயம் முசலி பிரதேச சபை அமைச்சர் ரிஷாத் தலைமையிலான கட்சியின் ஆட்சியிலேயே இருந்தது. அவ்வாறிருந்தும் அன்று அதனை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித முயற்சியையும் அவர்கள் செய்யவில்லை. அதன் பிற்பாடு பல தேர்தல்கள், சந்தர்ப்பங்கள் வாய்த்த போதிலும் 2012 இன் வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்வதற்கான எந்த முயற்சிகளையும் அமைச்சர் ரிஷாடோ ஏனைய முஸ்லிம் தலைவர்களோ மேற்கொள்ளவில்லை.
அதற்கான எதிர்ப்புகளைக் கூட கூட்டாக வெளியிடவில்லை. இன்றும் அமைச்சர் ரிஷாடும் ஏனையோரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நிலையில்தான் மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் 2012 இல் வனப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை விட பெரும் பரப்பு 2017 இல் உள்வாங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மிகவும் தந்திரமாக செயற்பட்டே இந்த விடயத்தை மேற்கொண்டுள்ளார். இவ்விடயத்தில் பிரதமர் தொடர்ந்தும் மெளனமாகவே இருக்கின்றார். நாட்டின் நிர்வாகத்தை முழுமையாக முன்னெடுக்கும் அவர் எதுவும் தெரியாதது போல இருக்கின்றார். எங்களை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றுகின்றது. நாம் ஓர் அபாயகமான நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறோம்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பங்களில் ஒன்றுபட்டு தமது எதிர்ப்பை வெ ளிப்படுத்த வேண்டும். ஜனாதிபதியை கூட்டாகச் சென்று சந்தித்து இந்த அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோர வேண்டும். ஆனால் அவ்வாறு எதனையும் இவர்கள் செய்யவில்லை. இக்கட்டான சமயங்களில் முஸ்லிம் எம்.பி.க்கள் இவ்வாறு கையாலாகாத்தனமாக நடந்து கொள்வது இதுவே முதல்முறை அல்ல. அளுத்கம சம்பவத்தின் போதும் முஸ்லிம்கள் சந்தித்த ஏனைய கஷ்டமான சூழல்களின் போதும் சமூக நலன்கருதி இவர்கள் ஒன்றுபட்டு போராடவில்லை என்பதையும் இந்த இடத்தில் கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மஹிந்த அரசாங்கம் ஆரவாரமாகவும் வெளிப்படையாகவும் இனவாதிகளுக்கு சார்பாக செயற்பட்டு அவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற துணை போனது. ஆனால் இந்த அரசாங்கம் மிகவும் அமைதியாகவும் சூட்சுமமான முறையிலும் இனவாதிகளுக்கு உதவுகிறதுமஹிந்த அரசாங்கம் ஆரவாரமாகவும் வெளிப்படையாகவும் இனவாதிகளுக்கு சார்பாக செயற்பட்டு அவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற துணை போனது. ஆனால் இந்த அரசாங்கம் மிகவும் அமைதியாகவும் சூட்சுமமான முறையிலும் இனவாதிகளுக்கு உதவுகிறது.”
என்றாலும் மேற்படி கருத்துக்கள் தவறானது. இவ் அறிவித்தலின்படி பொதுமக்களது காணிகளோ பள்ளிவாசல்களோ அரச உரிமை ஆக வில்லை என கருத்தை முன்வைத்தோர்.
வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்த கருத்து.
“எமது சரணாலயப் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவோ, முஸ்லிம் மக்களின் பூர்வீகக் காணிகளை இல்லாமல் செய்வதற்காகவோ இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். வனப்பாதுகாப்பை ஏற்படுத்துவதன் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் எவ்வித எண்ணமும் இல்லை. எவருக்கேனும் தமது பூர்வீகக் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், வர்த்தமானியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.”
வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்து.
சரணாலயத்திற்கு சொந்தமான பகுதிகளே கோடுகளின் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளன. மஞ்சள் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலேயே முஸ்லிம் மக்களின் வீடுகள் உள்ளன. முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் பள்ளிவாசல் அதனுள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது தவறானதொன்றாகும். வன பாதுகாப்பிற்கு சொந்தமான காணிகளை சரணாலய பாதுகாப்பு பகுதிகளாகவும் மக்கள் வாழும் பகுதிகளை வனப்பாதுகாப்பில் இருந்து வேறுபடுத்தவுமே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை நாட்டிற்குள் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் இதனூடாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மிகவும் அதிருப்தியடைந்துள்ளார்.
இறுதியாக வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து
“இந்த வர்த்தமானியின் மூலம் தற்போது மக்கள் வாழ்ந்துவரும் கிராமங்கள் காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் என்பன அரசிற்கும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் கையகப்படுத்தப்பட்டுள்ளது என தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுடன் சிலர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அண்மித்ததாக காணப்படும் வனப் பகுதியினதும் பிரதேச மக்களினதும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இந்த வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகையினால் குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது வாழ்ந்து வரும் மற்றும் மக்களுக்கு சட்டபூர்வமான உரிமை காணப்படும் கிராமங்கள், காணிகள் வீடுகள் மற்றும் இஸ்லாமிய வணக்க ஸ்தலங்கள் ஆகிய எதுவுமே இந்த வர்த்தமானியின் ஊடாக அரசிற்கு கையகப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றேன்.”
இதன்படி பொதுமக்களின் வாழ்விடத்தை அரசு கைப்பற்றவில்லை என அரசு தெரிவிக்கின்றது.
Ibnu Asad
2017.03.24ம் திகதி ஜனாதிபதியின் ரஷ்யாவுக்கான விஜயத்தின் மத்தியில் வில்பத்து சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள நான்கு பிரதேசங்களை உள்ளடக்கி அவற்றை பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். வில்பத்து வனப்பகுதி தொடர்பாக வெளியான அதிவிசேட வர்த்தமானி…
2017.03.24ம் திகதி ஜனாதிபதியின் ரஷ்யாவுக்கான விஜயத்தின் மத்தியில் வில்பத்து சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள நான்கு பிரதேசங்களை உள்ளடக்கி அவற்றை பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். வில்பத்து வனப்பகுதி தொடர்பாக வெளியான அதிவிசேட வர்த்தமானி…
519510 868369superb post. Neer knew this, appreciate it for letting me know. 544753
138355 283852I was suggested this weblog by way of my cousin. Im no longer confident whether or not this put up is written by him as nobody else realize such detailed about my trouble. Youre fantastic! Thanks! 268536
142203 837382Totally pent topic matter, appreciate it for selective info . 571638
518754 266998I actually like your writing style, great details, appreciate it for posting : D. 713780
Thank you great post. Hello Administ .
I really love to read such an excellent article. Helpful article. Hello Administ .
Nice article inspiring thanks. Hello Administ . Cami Halısı ve Cami Halıları Firmasi. Göbekli Cami Halısı