ISIS ஐ அழிக்க இனவாதம், மதவாதம் பாராமல் ஒன்றிணைவோம்

  • 13

கடந்த காலங்களில் ரமழானுக்கு முன்னால் வானத்தில் பிறைகளை தேடிய சமூகம் இன்று நிலத்தில் குண்டுகளை தேடிய வண்ணமுள்ளது.​ இவ்வாறு சமூக அமைப்பு மாறுவதற்கு காரணம் இலங்கையில் 21.04.2019 அன்று ஏற்பட்ட தொடர் தொடர் குண்டுவெடிப்புக்களாகும்.

இதனால் ஏற்பட்ட தாக்கம் பற்றி சுருக்கமாக கூறுவதென்றால், தான் தனது வெளியூர் நண்பனுடன் உள்ளூர் பள்ளிவாசலுக்கு சென்றால் உள்ளூர்வாசிகளால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த குண்டுத்தாக்குதலுக்கு ISIS அமைப்பு உரிமை கோரினாலும் இத்தாக்குதலுக்கான காரணம் என்னவென்று அவ்வமைப்பினால் தெளிவாக முன்வைக்கவில்லை. என்றாலும் இது சர்வதேச சதி என்றும் அமேரிக்கா இலங்கையில் உள்நுழைந்து இந்தியா, சீனா போன்ற நாடுகளை  உளவு பார்ப்பதற்கும், சீனாவின் பட்டுப்பாதையை கைப்பற்றுவதற்குமான நடவடிக்கை எனக் கூறுகிறது.

ஆனால் புலனாய்வுத்துறை மற்றும் அரசியல்வாதிகளின் கருத்தை அவதானிக்கையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடு காரணமாக இருவருக்குமிடையில் உரிய முறையில் தொடர்பாடல் இடம்பெறாமையினால் இக் குண்டுத்தாக்குதலை தடுக்க முடியாமைக்கான பிரதான காரணமாக உள்ளது. அதாவது இங்கு ஒற்றுமையின்மை காணரமாகத்தான் 250ற்கும் மேற்பட்ட உயிர்கள் பழியாகியது. இலங்கை இறுதி 500 ஆண்டுகளில் வெளிநாட்டு சக்திகளிடம் சிக்குவதற்கும் இதுதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பல்லின மக்கள் வாழும் இலங்கையில் ஒற்றுமையானது பாராளுமன்றம் முதல் பாடசாலை வரை சீர் கு​ழைந்துள்ளது. தற்போது கட்சிகளுக்கிடையில் முரண்பாடு, மதங்களுக்கிடையில் முரண்பாடு, பாடசாலைகளுக்கிடையில் முரண்பாடு என்று தொடங்கி ஒற்றுமை பற்றி பேசும் முஸ்லிம்களிடமும் ஜமாத் என்ற பெயரில் பிரிவினைவாதம் வளர்ந்துள்ளது.

குறித்த தாக்குதலும் முதல் மூன்று நாட்களில் இனவாதம் போல் சித்தரிக்கப்பட்டாலும், இறுதியாக முஸ்லிம்களின் இரு முரண்பட்ட அழைப்பு (தஃவா) முறைகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு என்பதை இன்னும் இனவாதம், இயக்கவாதம், கட்சிவாதம் பேசும் இலங்கையார்கள் புரிந்துகொள்ளவில்லை.

2009ம் ஆண்டு நாம் உள்நாட்டில் இடம்பெற்ற பாரிய யுத்தமொன்றை முடிவுக்கு கொண்டுவந்த நமக்கு அடுத்ததாக இருந்த பணி நாட்டை நாட்டை அபிவிருத்தி செய்வாதாகும். ஆனால் நாம் கட்சிவாதம், இனவாதம், இயக்கவாதம் பேசி பொதுமக்களிடம் பகையை வளர்த்து இன்று வெளிநாட்டு தீவிரவாத அமைப்பான ISIS இடம் சிக்கியுள்ளோம். இதனால் நமது மாணவர்களின் கல்வித்துறை, உயர் கல்வித்துறை, சுற்றுலாத்துறை என்பன  முற்றாக பாதித்துள்ளது.

இன்று தொடர்ந்தும்  இத்தாக்குதல் இனவாத, மதவாத கண்கொண்டு பார்க்கப்படுகிறது. ஆனால் இது இனவாதமோ, மதவாதமோ அல்ல. இலங்கையை கைப்பற்ற வந்துள்ள தீவிரவாதம். எனவே இதனை ஒழிக்க இனவாதம், இயக்கவாதம் பார்க்காமல் ஒன்றிணைவோம்.

Ibnuasad

கடந்த காலங்களில் ரமழானுக்கு முன்னால் வானத்தில் பிறைகளை தேடிய சமூகம் இன்று நிலத்தில் குண்டுகளை தேடிய வண்ணமுள்ளது.​ இவ்வாறு சமூக அமைப்பு மாறுவதற்கு காரணம் இலங்கையில் 21.04.2019 அன்று ஏற்பட்ட தொடர் தொடர் குண்டுவெடிப்புக்களாகும்.…

கடந்த காலங்களில் ரமழானுக்கு முன்னால் வானத்தில் பிறைகளை தேடிய சமூகம் இன்று நிலத்தில் குண்டுகளை தேடிய வண்ணமுள்ளது.​ இவ்வாறு சமூக அமைப்பு மாறுவதற்கு காரணம் இலங்கையில் 21.04.2019 அன்று ஏற்பட்ட தொடர் தொடர் குண்டுவெடிப்புக்களாகும்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *