காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 07

விடிந்தது….. முதலில் விழித்து கொண்ட ஆர்தர் நீண்ட சோம்பல் முறிவுடன் சுற்றுமுற்றும் பார்த்தான்….

“ஆஹ்ஹ்…ஜெனி மீரா… எழும்புங்க… சீக்கிரம்”என அலறினான்.

“என்னாச்சு… ஏன் இப்படி கத்துறே?” என கேட்டுக்கொண்டே இருவரும் விழித்து கொண்டனர். ஆர்தர் இருவரிடமும் கில்கமேஷ் படுத்து கொண்டிருந்த மரத்தை காட்டினான்.

“என்ன????”

“அவன்… எங்க… எங்க போய்ட்டான்…” என ஜெனியும் பதறிப்போனாள்.

“போச்சு போ… அவன் நம்மள ஏமாத்திட்டு ஓடிட்டான்….. எல்லாம் போச்சு.. இப்போ எப்படி இங்கிருந்து இறங்குறது…??”

ஜெனிக்கு பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்தது.. என்னவோ செய்து மூவரும் இறங்கிவிட்டனர்.

“சரி வா கொஞ்ச தூரம் போய் பாக்கலாம்…”என்று விட்டு ஜெனி முன்னாடி நடக்க இவர்கள் பின்னால் சென்றனர். கொஞ்ச தூரத்தில் ஒரு ஆறு தென்பட அங்கு பார்க்கும் போது கில்கமேஷ் முகம் கை கால் கழுவி கொண்டிருந்தான்.

“அவன் எங்கேயும் ஓடிப்போகல… அங்க பாரு…”என்று காட்டிவிட்டு அவர்களும் சென்று கை முகம் கழுவினார்கள். அதன்பின்னர் அங்கிருந்த பாறையில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

“சரி சொல்லு ஜெனி.. இனி என்ன பிளான்?”

“சொல்றேன்… ஆர்தர் உன்கிட்ட பணம் இருக்குல்ல…”என ஆர்தரிடம் கேட்டாள் ஜெனி. பாக்கட்டில் கையை விட்ட ஆர்தர் பர்ஸை எடுத்தான்..

“ட்ரிப் செலவுக்காக கொண்டுவந்த பணம் எல்லாம் அப்படியே இருக்கு.”

“என்னோட பணம் ஜெனியோட பணம் எல்லாம் மியூசியம்ல எங்க பையிலதான் இருக்கு.” என்றாள் மீரா.

“இங்க பாருங்க… நீயும் மீராவும்  காட்டை விட்டு வெளியே போய் கில்கமேஷ்ஷுக்கு ட்ரெஸ்,ஷூ, சலூன் டூல்ஸ் வாங்கிட்டு வாங்க.  பார்த்து பத்திரமா போங்க… “என்றாள்.

“என்ன?? உன்னை இவனோட தனியா விட்டுட்டு நாங்க போறதா…. என்ன பேசுரே நீ?” என கத்தினான் ஆர்தர்.

“எனக்கு ஒன்னும் ஆகாது… ஐ வில் பி ஓகே… நீங்க போய் நான் சொன்ன திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க. அதுக்குள்ள இவருக்கு நம்ம பிளானை நான் விளக்கி வைக்கிறேன்.”என்றாள்.

அவர்களும் சரி என்று விட்டு ஜெனி சொன்னது போல காட்டை விட்டு வெளியேறினர். அதன்பின் ஜெனி கில்கமேஷ் கிட்ட பேசினாள்.

“நீங்க பண்ண போற வேலைக்கு நாம வேற மொழி ஒன்னை கத்துக்கணும்…. புது மொழியை கத்துகிறது எவ்வளவு கஷ்டம் என்னு எனக்கு தெரியும்.. இருந்தும்….”

“அதெல்லாம் பெரிய விஷயம் இல்ல எனக்கு மொழிகளை கற்றுக்கொள்வது ஒண்ணுமே சிரமம் இல்லை. நான் ஒரே நாளில் 30 மொழிகளை கற்றுத்தேறியவன்.”என்றான்.

“வாவ்.. அப்படின்னா இந்த வேலையும் இலகுவாக போய்ட்டு” என்றவள் அவனுக்கு மண்ணில் எழுதியும் ஒப்புவித்தும் அவர்கள் பேசும் மொழியை கற்றுக்கொடுத்தாள்.

**************

ஆர்தரும் மீராவும், எப்படியோ காட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த நகரத்தில் நுழைந்தனர். ஜெனி சொன்னது போலவே  தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வெளியேறிய போது ஆங்காங்கு இவர்கள் மூவரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு தேடப்படுகிறார்கள் என போலீஸால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

“ஐயையோ.. இங்க பாரு, ஆர்தர்… யாராச்சும் நம்மள அடையாளம் கண்டுபிடிச்சிட்டா.. அப்பறம் அவ்வளவு தான்…”

“கவலைப்படாதே… அப்படியெல்லாம் நடக்காது… ஆனா நம்மள இந்த நிலைமைக்கு கொண்டுவந்த அந்த ப்ரொபெஸர் மட்டும் என் கைல கிடைச்சான்…. அவனை உண்டு இல்லை என்னு பண்ணிடுவேன். வா நாம காட்டுக்குள்ள போயிடலாம்”

“இப்போ எனக்கு பயங்கரமா பசிக்குதே…”என்றாள் மீரா.

“சரி இங்கேயே நில்லு நான் போய் அந்த ஹோட்டலில் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்.”என்றவன்.

மீராவின் கைக்குட்டையை குறுக்கே கட்டிக்கொண்டு  ஹோட்டலுக்கு சென்றான் .நால்வருக்குமாக சாப்பாடு வாங்கிவிட்டு காசு கொடுக்கும் போது ஹோட்டல் உரிமையாளர் ஒரு மாதிரியாக பார்த்தார்.

“என்ன தம்பி முகத்தை மூடி இருக்கீங்க?”

“அது ஒன்னுமில்ல எனக்கு ஜலதோஷம்… அதான் இன்பெக்சன் ஆகாம இருக்க கட்டி இருக்கேன்.”என்று விட்டு உடனே வெளியேறினான்.

“என்னாச்சு…”

“அந்த ஆளுக்கு சந்தேகம் வந்திடுச்சு என்னு நினைக்குறேன் வா… போயிடலாம்.” என்று விட்டு இருவரும் காட்டை நோக்கி விரைந்தனர்.

காட்டுப்பாதையில் 2,3 ஜீப்பில் போலீசார் வேட்டை நாயுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை மோப்பம் பிடிக்க மியூசியத்தில் இருந்து மீரா, ஜெனியின் பைகளை கொண்டுவந்திருந்தனர். ஒளிந்து இருந்து இவற்றை பார்த்து கொண்டிருந்த ஆர்தரும் மீராவும் வேறுவழியாக காட்டுக்குள் நுழைந்தனர்.

“உடனே நாம அந்த ஆத்தோரத்துக்கு போகணும். ஜெனி கிட்ட விஷயத்தை சொல்லணும்.”என்றாள் மீரா.

“ம்ம்…”என்று விட்டு வேகமாக நடக்க போலீசாரும் காட்டுக்குள் நுழைந்தனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

விடிந்தது….. முதலில் விழித்து கொண்ட ஆர்தர் நீண்ட சோம்பல் முறிவுடன் சுற்றுமுற்றும் பார்த்தான்…. “ஆஹ்ஹ்…ஜெனி மீரா… எழும்புங்க… சீக்கிரம்”என அலறினான். “என்னாச்சு… ஏன் இப்படி கத்துறே?” என கேட்டுக்கொண்டே இருவரும் விழித்து கொண்டனர். ஆர்தர்…

விடிந்தது….. முதலில் விழித்து கொண்ட ஆர்தர் நீண்ட சோம்பல் முறிவுடன் சுற்றுமுற்றும் பார்த்தான்…. “ஆஹ்ஹ்…ஜெனி மீரா… எழும்புங்க… சீக்கிரம்”என அலறினான். “என்னாச்சு… ஏன் இப்படி கத்துறே?” என கேட்டுக்கொண்டே இருவரும் விழித்து கொண்டனர். ஆர்தர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *