காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 10

உள்ளே சென்ற கில்கமேஷ் ஒவ்வொரு பொருளாக பார்க்க ஆரம்பித்தான். எல்லாமே புதுமையாக இருந்தது. பழங்காலத்து பொருட்கள் எல்லாமே கண்ணாடிப்பெட்டிகளிலுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் சில உருக் நகரத்துக்கு சொந்தமான களிமண் தட்டுக்கள், மற்றும் பாத்திரங்கள்… அவற்றின் கீழ் எழுதப்பட்டிருந்தவற்றை அவனால் வாசிக்க முடியவில்லை. ஏனெனில் ஜெனிபர் அவனுக்கு பேசுவதற்கான பயிற்சியை மட்டுமே கொடுத்து இருந்தாள். அதனால் ஆங்கில மற்றும் தமிழில் இருந்த விபரக்குறிப்புக்களை அவனால் படிக்க முடியவில்லை. அசூர்பனிபாலின் அழிந்த நூலகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கில்கமேஷ் கதை எழுதப்பட்ட களிமண் தட்டுகளில் சில அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை என்கிடு இறந்தபின்னர் கில்கமேஷ் பயணம் மேற்கொண்டபோது சுமேரியர்களால் எழுதப்பட்ட ஏடுகளாகும்.

அதனை நின்று வாசித்தவன் அதில் தெரிந்த என்கிடுவின் பெயரை கண்டதும் அப்படியே நிறுத்தி கண்ணாடி பெட்டியில் கைவைத்து தொட்டுப்பார்த்தான். இவற்றை எல்லாம் அந்த ரிசப்ஷனிஸ்ட் பெண் பார்த்துக்கொண்டே தான் இருந்தால். திருட்டு சம்பவத்திற்கு பின்னர் அந்த பகுதியில் கேமரா பூட்டி இருந்தார்கள். அன்று திங்கள் கிழமை என்பதால் மியூசித்திற்கு பெரிய அளவில் ஒன்றும் ஆட்கள் வரவில்லை. ஓரிரு நபர்களே வந்திருந்தனர்.

“என்கிடுவை மீட்க மோதிரம் வேண்டும், அதனை எடுக்க அந்த போன் வேண்டும்.” என்று எண்ணியவன் அடுத்து போனை தேட ஆரம்பித்தான்.

“ஹா இவன் என்ன தேடுறான்.. ஒருவேளை திருடனா இருப்பானோ? இல்ல அவனோட பொருள் எதுவாச்சும் விழுந்து அதை தேடுறானா??” என்றெண்ணியவள் அவனையே கண்காணித்து கொண்டிருந்தாள்.

மேசைக்கு அடியிலும் அலமாறிகளுக்கு அடியிலும் குனிந்து தேட ஆரம்பித்தான். அப்போது தவழ்ந்துகொண்டே போகும் போது எதிர்பாராத விதமாக யாரோ ஒருவனின் தலையில் முட்டிக்கொண்டான்.

“ஆவ்…”

கில்கமேஷ் நிமிர்ந்து பார்த்தான். அவனை போலவே யாரோ கீழே தவழ்ந்து வந்திருந்தனர். அது வேறு யாருமில்லை லாரன்ஸ் தான். இருவரும் எழுந்து நின்றனர்.

“என்ன தேடுறீங்க?”என்று லாரன்ஸ் அவனிடம் கேட்டான்.

“என்னோட பொருள் ஒன்னு கீழே விழுந்திடுச்சு அதுதான்… ஆமா நீங்க என்ன பண்ணுறீங்க ?”என்றான்.

“அ..ஆ..அத்துவந்து என்னோட ஒரு பொருளும் கீழே விழுந்திடுச்சு அது தான்…”என்றார் ப்ரொபெஸர்.

இருவரும் வெவ்வேறு பக்கமாக ஒரே விடயத்தை மறுபடியும் தேட ஆரம்பித்தனர். எங்கு தேடியும் போனை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் இருவரின் செயல்களையும் பார்த்து கொண்டே இருந்த ரிசப்ஷனிஸ்ட் பெண் உள்ளே வந்தாள். இருவரும் பயந்துவிட்டனர்.

“ஹெலோ மிஸ்டர்ஸ்…என்ன பண்ணுறீங்க?” என கேட்க இருவரும் ஒருமித்து

“என்னோட போனை தேடுறேன் “என்றனர். சொல்லி முடித்ததும் இருவரும் ஆச்சர்யத்தில் ஆளுக்காள் முகத்தை பார்க்க அந்த பெண்ணோ இருவரையும் வியப்புடன் பார்த்து கொண்டே இருந்தாள்.

“என்ன?? நீங்களும் உங்க போனை தொலைச்சிடீங்களா?” என கில்கமேஷ் கேட்டான்.

“ஆமா.”என்ற லாரன்ஸ் யோசித்தான்.

“யாரிவன் …இவன் உண்மையிலேயே அவனோட போனை தான் தேடுறானா.. இல்ல நம்ம தேடுற அதே போனை தான் தேடுறானா…” என யோசிக்க அந்த பெண்ணின் குரல் கேட்டு திரும்பினர்.

“ஒஹ்ஹ்… போன் என்கிட்ட தான் இருக்கு. ஆனா ஒரே ஒரு போன் தான். வாங்க யாருதுன்னு பார்த்து எடுத்துகொங்க.”என்றாள்.

ப்ரொபெஸர் முண்டியடித்து கொண்டு “அதை என்கிட்ட கொடுங்க என்னோடதா தான் இருக்கும்.” என்றார்.

“முதலில் வாங்க சேர் .”

இருவரும் ரிசப்ஷனுக்கு சென்றனர். கீழே லாக்கரில் இருந்து போனை வெளியே எடுக்க முயன்றவள். திடீரென உள்ளே வைத்து விட்டு.

“சொல்லுங்க போன் எப்போ தொலைஞ்சி போனது?”என கேட்டாள்.

உடனே ப்ரொபெஸர் “ரெண்டு நாளைக்கு முன்னாடி “என்றார்.

கில்கமேஷ் ஜெனியை சந்திச்சது முந்தைய நாள் நேத்து மறுநாள்.. என்று கணக்கு போட்டு விட்டு அவனும்

“ரெண்டு நாளுக்கு முதல்” என்றான். மறுபடியும் அவள் குழம்பி போனாள். ப்ரொபோசருக்கு எப்படியாவது போனை அவர் கொண்டுபோய்விட வேண்டும் என்றே எண்ணினார்.

“வேணும் என்னா செக் பண்ணி பாருங்க.. நான் ரெண்டு நாளைக்கு முதல் வந்திருக்கேன். என்னோட பேரு ப்ரொபெஸர் லாரன்ஸ்” என்றதும் கில்கமேஷ்ஷுக்கு புரிந்து விட்டது .ஆத்திரம் அதிகரித்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போதே அவனை கொன்றுவிட மனம் துடித்தது. இருந்தாலும் ஜெனி நிரபராதி என நிரூபிக்க அந்த போன் அவசியம் தேவை என்பதால் பொறுமையாக இருந்தான்.

“ஆமா,சேர் உங்க பேர் இருக்கு ..”என்றவள். கில்கமேஷ்ஷை பார்த்து

“ஆனா மிஸ்டர் கே. கே.. உங்க பேரு.. எங்க லிஸ்டில் இல்லியே.” என்றதும் அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

ப்ரொபெசரோ எப்படியோ போனை அடையப்போகும் எண்ணத்தில் அவனை நக்கலாக பார்த்தார். அவனோ அந்த போனை மீட்க என்ன வழி என யோசித்தான். அந்த பெண் மறுபடியும் லாக்கரை திறந்து எடுக்க முயன்ற போது திடீரென கில்கமேஷ்

“நிறுத்துங்க… அதை வெளியில் எடுக்காதீங்க என்றான்.”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

உள்ளே சென்ற கில்கமேஷ் ஒவ்வொரு பொருளாக பார்க்க ஆரம்பித்தான். எல்லாமே புதுமையாக இருந்தது. பழங்காலத்து பொருட்கள் எல்லாமே கண்ணாடிப்பெட்டிகளிலுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் சில உருக் நகரத்துக்கு சொந்தமான களிமண் தட்டுக்கள், மற்றும்…

உள்ளே சென்ற கில்கமேஷ் ஒவ்வொரு பொருளாக பார்க்க ஆரம்பித்தான். எல்லாமே புதுமையாக இருந்தது. பழங்காலத்து பொருட்கள் எல்லாமே கண்ணாடிப்பெட்டிகளிலுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் சில உருக் நகரத்துக்கு சொந்தமான களிமண் தட்டுக்கள், மற்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *