காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 11

  • 37

லாக்கரில் கையைவிட்டவள் அதை வெளியில் எடுக்கவில்லை.

“இப்போ  உங்க பிரச்சினை தான் என்ன? அதான் அது உங்களோடது இல்லன்னு நல்லாவே தெரியுதே! ரெண்டுநாளைக்கு முன்னாடி இங்க வந்து போனை தொலைச்சது இவர்… இனி என்ன?”

“அவசரப்படாதீங்க!  ரெண்டு நாளைக்கு முதல் என்னோட போன் காணாம போனது உண்மைதான். அதுவும்  இங்கே தான் தொலைஞ்சது. ஆனா அன்னிக்கு நான் இங்கே வரல.”

“என்ன சொல்லுறீங்க?”என அந்த பெண் ஆச்சர்யமாக கேட்டாள்.

“என்ன விளையாடுறியா? நீ வராம உன்னோட போன் பறந்து வந்திச்சா இங்க” என ப்ரொபெஸர் குதித்தார்.

“அதானே எப்படி?”

“என்னோட பக்கத்து வீட்டு பையன்  அதை எடுத்து வந்து இருந்தான்.. அவனோட பெயர் கூட ஆர்தர்..” என்றதும் ப்ரொபெசருக்கு சாக் அடித்தது போல இருந்தது.

“ஆக இவனை அந்த ஆர்தர் தான் அனுப்பி இருக்கானா?  இல்ல உண்மையிலேயே ஆர்தர் இவன் போனை தான் வாங்கிட்டு வந்தானா?” என யோசிக்கும் போது கில்கமேஷே அந்த பெண்ணிடம் இன்னொரு ரீல் விட்டான்.

“ஏதோ மியூசியத்தை சுத்திப்பாக்கணும், போட்டோ எடுக்கணும் போன் ரிப்பயார் ஆயிடுச்சு. என்னு வாங்கிட்டு போனான். இப்போ ஆளும் இல்ல போனும் இல்ல. அவன் நண்பர்களிடம் விசாரிச்சப்போ.. அன்னிக்கு போனை கீழே தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருந்ததா சொன்னாங்க. அதனால தான் நான் இங்க வந்தேன்.”என்றான்.

அவள் பதிவுகளை பார்த்த போது ஆர்த்தரின் பெயர் அதில் இருந்தது. இப்போது யாருக்கிட்ட இதை கொடுப்பது என அவள் குழப்பத்தில் இருக்க மீண்டும் கில்கமேஷ்,

“நீங்க வேணும் என்னா இவர்கிட்ட அவரோட போன் என்ன மாடல், அதோட நிறம் என்ன என்னு கேட்டுட்டு கொடுங்க. “என்றதும் ப்ரொபெஸர் ஆடிப்போனார்.

“அது நல்ல ஐடியா… ரெண்டு பேரும் உங்க போனை பற்றி எழுதி கொடுங்க.. யாருதுன்னு பார்த்து தர்றேன்.” என்றவள் ஆளுக்கொரு பேப்பரும் பென்னும் கொடுத்தாள்.2

இந்த தடவை கில்கமேஷ் கூட தடுமாறினான்… அவனுக்கு தான் எழுத தெரியாதே…. ப்ரொபெசரோ என்ன எழுதுவது என அறியாமல் முழித்தார்..

“அநேகமாக எல்லா போனும் பிளாக் கலர்ல தான் இருக்கும்.. அதையே போட்டு கொடுப்போம்” என்றெண்ணி போனின் கலரை மட்டும் எழுத.

கில்கமேஷ் மிகுந்த சிரமப்பட்டு யோசித்து ஜெனி போனில் காட்டும் போது தோன்றிய இலக்கங்களை எழுத்துக்களை கண்முன்னே கொண்டு வந்து ஒப்பித்து எழுதினான். கையெழுத்து படு மோசமாக இருந்தாலும் போனின் மாடல் நம்பரையும் போனின் பெயரையும் சரியாக எழுதிவிட்டதால் சிரித்து கொண்டே அந்த போனை கில்கமேஷ் கிட்ட கொடுத்தாள் அந்தப்பெண் மீண்டும் ப்ரொபெஸர் அதிர்ச்சி அடைந்துபோய் நிற்க அவரிடம்

“சாரி சேர், இது உங்க போன் கிடையாது.. உங்க போன் பிளாக் கலர் என்னு சொல்லி இருக்கீங்க… இது வைட் கலர்.. அதோட அவரோட போனை பற்றி அவர் சரியான விடயங்களை தந்து இருக்காரு… சோ ..நீங்க வேணா இன்னொரு முறை தேடிப்பாருங்க.. கண்டிப்பாக கிடைக்கும்.”என்றாள். அதோடு கில்கமேஷை பார்த்து,

“இப்போ சந்தோசமா சேர்… எப்படியோ உங்க பொருள் உங்களுக்கு கிடைச்சிடுச்சு.. ஆனா சேர் தயவு பண்ணி இதை சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்க… உங்க கையெழுத்து ..அதை கொஞ்சம் சரிபண்ணிக்க பாருங்க…” என்று சிரித்து கொண்டே சொல்லிவிட்டு அவன் எழுதியதை அவனுக்கே காட்டினாள்.

ப்ரொபெஸர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறி இருந்தார். ஆனால் அவர் வேறு ஒரு திட்டத்துடன் மறைந்து இருந்தார்.

“இவனை பின்தொடந்து போய் எப்படியாவது அந்த போனை எடுத்துடனும்.” என்றபடியே காத்திருந்தார்.

கில்காமேஷ் வெளியே வந்ததும் போனை பாக்கெட்டில் போட்டுகொண்டு மீண்டும் காட்டை நோக்கி நகர்ந்தான். அவன் பின்னாடியே ப்ரொபெஸர் பின்தொடர சற்று நேரத்தில் சட்டென கில்கமேஷ் அவர் பார்வையில் இருந்து மறைந்தான்.

“என்ன எங்க போய்ட்டான் அவன்.. இங்கதான் இருந்தான்… அதுக்குள்ள எங்க போனான்.” என தடுமாறி கொண்டு அங்கும் இங்கும் தேட திடீரென அவர் தோளினை யாரோ பிடித்து இழுத்தார்கள். திரும்பி பார்த்தால் அது வேறு யாரும் இல்லை .கில்கமேஷ் தான்.

“ஏண்டா, என்னையே பின்தொடர்ந்து வர்றியா..” என்று ஒரு குத்துவிட்டவன். கீழே கிடைந்தவனின் சட்டைக்கோலரை பிடித்து தூக்கி

“அந்த மோதிரம் எங்கே?”என்று கேட்டான்.

“ஏ…எந்த மோதிரம்…”

“டேய்…. என்கிடுவின் மோதிரம் எங்க.. மரியாதையா அதை என்கிட்ட கொடுத்துடு..” என்றான்.

“அந்த மோதிரத்தை தேடி எத்துனை பேர்தான் வருவீங்க… அதை என்கிட்ட இருந்து நேத்துத்தான் அவங்க புடுங்கிட்டு போனாங்க.” என்றதும் கில்கமேஷ்.

“நான் ஏற்கனவே உன்மேல கொலை வெறியில் இருக்கேன்.. இதுல பொய் வேற சொல்லுரியா?”

“இல்ல.. இல்ல என்னை ஒன்னும் பண்ணிடாதே… நான் நிஜமாதான் சொல்லுறேன். அவங்க நேத்துத்தான் வந்து என்னை மிரட்டி என்கிடுவின் மோதிரத்தை புடுங்கிட்டு போனாங்க… அவங்க கைல கூட ஏதோ கழுகு அடையாளம் பச்சை குத்தி இருந்தது.”என்றதும் அதிர்ச்சி அடைந்த கில்கமேஷ் ப்ரொபெசரை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் வேகமாக காட்டை நோக்கி ஓடினான்.

**********

ஒரு இருண்ட குகையில் மூவரும் கட்டப்பட்டு கிடந்தனர். யாராலும் பேசிக்கொள்ளவும் முடியாதவாறு வாயும் கட்டப்பட்டு இருந்தது. குகையில் வெளிச்சம் விழுந்த பகுதியில் வந்து நின்றான் ஒருவன். அவனை சுற்றி இன்னும் சிலர் நின்றனர் .எல்லோர் கையிலும் கழுகின் அடையாளம் பச்சை குத்தி இருந்தது. அதில் நடுவில் நின்றவன் கையில் என்கிடுவின் மோதிரத்தை பார்த்ததும் ஜெனி அதிர்ச்சி அடைந்தாள்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

லாக்கரில் கையைவிட்டவள் அதை வெளியில் எடுக்கவில்லை. “இப்போ  உங்க பிரச்சினை தான் என்ன? அதான் அது உங்களோடது இல்லன்னு நல்லாவே தெரியுதே! ரெண்டுநாளைக்கு முன்னாடி இங்க வந்து போனை தொலைச்சது இவர்… இனி என்ன?”…

லாக்கரில் கையைவிட்டவள் அதை வெளியில் எடுக்கவில்லை. “இப்போ  உங்க பிரச்சினை தான் என்ன? அதான் அது உங்களோடது இல்லன்னு நல்லாவே தெரியுதே! ரெண்டுநாளைக்கு முன்னாடி இங்க வந்து போனை தொலைச்சது இவர்… இனி என்ன?”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *