கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களும்

  • 13

கடந்த மூன்று வாரங்களை பொறுத்தவரையில் இலங்கை வரலாற்றின் சுருக்கம் இதுதான். இங்கு இலங்கை வரலாற்றில் திருப்பு முனையாக அமைவது தொடர் குண்டு வெடிப்புகளாகும்.

இது இடம்பெற்று இரண்டு நாட்களில் இதற்கான உரிமையை ISIS அமைப்பு கோருகின்றது. அதற்கடுத்த கட்டமாக முஸ்லிம்களின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் தீவிரவாதத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அவ்வாறே ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் முஸ்லிம் வீடுகள் பரிசிலிக்கப்பட்டு முஸ்லிம்களிடம் ஆயுதம் இல்லை என நிறுபிக்கப்படுகிறது. இவ்வாறு முஸ்லிம் சமுகம் ரமழானுக்கு தயாராகி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர்.

இவ்வாறு கடந்த ஆண்டுகளை விட சோதனைகள் நிறைந்த ஆண்டகவே (2019) இவ்வாண்டு அமைகிறது. இன்றைய சிந்தனைப் பந்தியில் இவ்வாறான சோதனைகளின் போது

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களும்

என்ன என்பதை அல்குர்ஆனின் ஸூரா ஆல இம்ரானின் ஒளியில் அவதானிப்போம்.

இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களே, அத்தகையோருக்கு (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் (விசுவாசிகளால்) வெற்றி கொள்ளப்படுவீர்கள். (மறுமையில்) நரகத்தின் பாலும் நீங்கள் (எழுப்பி) ஒன்று திரட்டப்படுவீர்கள். இன்னும், தங்குமிடமான (அ)து மிகக்கெட்டதாகும். (3:12)

சோதனையின் ஆரம்பத்தி​லேயே அல்லாஹ் முஸ்லிம்க​ளை உற்சாக மூட்டுகிறான்.

நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும். மேலும், வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கிடையே உள்ள (பிடிவாதம்) பொறாமையால் (இதுதான் உண்மையான மார்க்கம் என்ற) அறிவு அவர்களுக்கு வந்ததன் பின்னரே தவிர மாறுபடவில்லை. இன்னும், எவர் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றாரோ-(அவரைப் பற்றி) நிச்சயமாக, அல்லாஹ் கணக்கெடுப்பதில் துரிதமானவன்.(3:19)

விசுவாசிகள் (தங்களைப்போன்ற) விவசுவாசிகளையன்றி, நிராகரிப்போரை(த் தங்களுக்கு)ப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து (தங்களைக்) காப்பாற்றிக் கொள்வதை நீங்கள் பயந்தாலன்றி, எவரேனும் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை; மேலும் அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான்; அல்லாஹ்விடமே மீளுதலும் இருக்கின்றது.(3:28)

இறைவன் 19ம் வசனத்தில் இஸ்லாம் மாத்திரமே அவனிடம் அங்கிகரிக்கப்பட்ட மார்க்கம் என கூறிவிட்டு அதனை பின்பற்றும் முஸ்லிம்கள், மூஃமின்களை நோக்கி கூறுகின்ற கட்ளையே தமது பாதுகாவளர்களாக முஸ்லிம்ளை எடுத்துக்கொள்ளுமாறு கூறுகின்றான். ஆனால் நமது அன்றாட வாழ்க்கையை அவதானித்தால் முஸ்லிம்கள் தங்களுக்குள் அற்ப விடயங்களுக்கெல்லாம் முரண்பட்டு பொலிஸ், நீதிமன்றம் என நாடுவதையும் தமது பாதுகாவளர்களாக நிராகரிப்போரை எடுத்துள்ளதை அவதானிக்கலாம். நாங்கள் வெற்றியடைய வேண்டுமென்றால் முதலாவது மாற்றம் இங்கு ஏற்பட வேண்டும்.

இரண்டாவதாக நாம் வெற்றியடைய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்பதை 31,32ம் வசனங்களில் குறித்துக்காட்டுகிறான்.

(நபியே! மனிதர்களிடம்,) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்துவிடுவான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.(3:31)

(நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள். பின்னர் அவர்கள் புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை நேசிக்கமாட்டான்.(3:32)

அதாவது எமது அன்றாட வாழ்க்கையானது அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கட்டளைக்கேற்ப அமைய வேண்டும். இதில் குறிப்பாக நாம் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகள் (தொழுகை,நோன்பு, ஏனைய இபாதத்கள்) மனிதருக்கு செய்ய வேண்டிய கடமைகள் (வியாபாரம்,பெற்றோர் பிள்ளை, அயலவருக்கு செய்ய வேண்டிய கடமைகள்) என்பவற்றில் நாம் எவ்வாறு உள்ளோம் என மீள்பரிசீலனை செய்து திருத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், அவர்கள்,  சதிசெய்தார்கள். அல்லாஹ்வும், (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களின் சதியை முறியடித்துக் கூலி கொடுப்பவர்களில் மிகச்சிறந்தவன். (3:54)

இவ்வாறு நாம் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலும் இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எமக்கு எதிராக சதிசெய்வார்கள். அதாவது முஸ்லிம்கள் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசுடன் இணைந்து செயற்பட்ட நிலையில் சில அரசியல்வாதிகள் இரகசியமான முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்தார்கள். இவ்வாறு அவர்கள் செயற்படலாம் என்பதாலே முஸ்லிம்களின் பாதுகாவலர்களாக முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க வேண்டாம் எனக் கூறினான்.

அதேவசனத்தில் இறைவன் அவர்களுக்கெதிராக சதி செய்கிறான் எனக் கூறியுள்ளான். அது எவ்வாறு அமையும் என்பதை காலம் பதில் சொல்லும். என்றாலும் 2014ம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிராக சதி செய்து தமது ஆட்சியை நிலைத்து நிற்க முயற்சித்தோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னறே ஆட்சி இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் எமக்கு ஏற்படும் கஷ்டங்கள், போலிக் குற்றச்சாட்டுகளால் முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு தூரமாகக்கூடாது. என்பதால்,

விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை-அவனைப் பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படுங்கள், மேலும், நிச்சயமாக (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (3:102)

இந்தப் பிரச்சினைகளின் போது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வேதக்கட்டளை பின்பற்றுவதுடன் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள், (உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம், மேலும், உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் (ஒருவர் மற்றவருக்கு) விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான், ஆகவே., அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள், (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள், அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச்செய்தான், நீங்கள் நேர்வழிப் பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்.(3:103)

இன்னும், (விசுவாசங்கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார்-அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும், அவர்களே தாம் வெற்றி பெற்றோர்.(3:104)

அதேபோல் நமக்குள் ஒரு குழு மக்களுக்கு நன்மையை ஏவுபவர்களாகவும் தீமையை தடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் நாம்  இதற்கேன நமக்குள் பல பிரிவுகளை இலங்கையில் உருவாக்கி நமக்குள் பிளவு பட்டு மானங்களை போக்கி  முஸ்லிம் சமுக சகோதரர்களுக்கு எதிராக சதிசெய்து 103, 104ம் வசனங்களுக்கு மாறு செய்து கொண்டிருந்தோம். முக்கியமாக நமது ஆன்மீக தலைவர்கள் இவ்விடத்தில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும், நமது முஸ்லிம் சமூகம் சிறந்த சமூகமாக மாறுவதற்குஇந்த அழைப்புப்பணிதான் காரணமென குறிப்பிடுகிறான்.

(விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள், மேலும், (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் விசுவாசித்து நடந்தால் அது அவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும், விசுவாசிப்போரும் அவர்களில் (சிலா்) இருக்கின்றனர்; இன்னும், அவர்களில் அதிகமானவர்கள், (அல்லாஹ்வின் கட்டளையை மீறும்) பாவிகளாவர் (3:110)

அவ்வாறே நமக்கு எதிராக சதி செய்பவர்களால் சிறிய தொல்லைகள்தான் வழங்க முடியும்.

(விசுவாசிகளே! இத்தகையோர்) உங்களுக்குச் சிறிது தொல்லையிழைப்பதைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்துவிடவே முடியாது, மேலும், உங்களுடன் அவர்கள் யுத்தம் புரிய முற்பட்டாலோ, அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டியே ஓடுவார்கள், பின்னர் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படமாட்டார்கள்.(3:111)

இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் தமது அந்தரங்க நண்பர்களை எவ்வாறு தெரிவுசெய்ய வேண்டும் என்பதை 118ம் வசனத்தில் தெளிவு படுத்துகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்) (3:118)

மேலும் நாம் நேசிக்கின்ற மாற்று மதத்தவர்களின் மனநிலை பற்றி 119,120ம் வசனங்களில் தெளிவுபடுத்தி பயபக்தி உடையோராக இருந்தால் அவர்களின் சூழ்ச்சி பயனளிக்காது என்றும் கூறியுள்ளான்.

விசுவாசங்கொண்டோரே! தெரிந்து கொள்ளுங்கள்) நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள், அவர்களோ, உங்களை நேசிப்பதில்லை, நீங்கள் வேதங்கள் யாவற்றையும் விசுவாசிக்கிறீர்கள். இன்னும், அவர்கள் உங்களைச் சந்தித்தால், “நாங்கள் விசுவாசிக்கிறோம்”, என்று கூறுகின்றனர், இன்னும் (உங்களிலிருந்து விலகி) அவர்கள் தனித்துவிட்டாலோ (உங்கள் மீதுள்ள) ஆத்திரத்தினால் (தங்கள் கை) விரல்களின் நுனிகளை கடித்துக் கொள்கின்றனர், ஆகவே, (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! “உங்கள் ஆத்திரத்திலேயே நீங்கள் இறந்து விடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிகிறவன்”(3:119)

உங்களுக்கு யாதொரு நன்மை ஏற்படின் (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு யாதொரு தீங்கு ஏற்பட்டாலோ, அதற்காக அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர், ஆகவே, நீங்கள் பொறுமையுடனிருந்து (அல்லாஹ்வை) பயந்தும் கொள்வீர்களாயின் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு யாதொரு தீங்கையும் விளைவித்து விடாது, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றைச் சூழ்ந்து அறிகிறவன்.(3:120)

மேலும் எமது வணிக நடவடிக்கைகளில் வெற்றியடைய வட்டியை தவிர்த்துக் கொள்ளுமாறு  கூறியுள்ளான்.

விசுவாசங்கொண்டோரே! அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டியாகவும் இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டியை உண்ணாதீர்கள், இன்னும் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், (இதனைத் தவிர்த்துக்கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.(3:130)

அவ்வாறே பயபக்தியுடைய இறை  நம்பிக்கையாளர்களின் பண்புகள் பற்றி 134, 135ம் வசனங்களில் தெளிவு படுத்துகிறான்.

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர் (கள் செய்யும் பிழை) களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)

தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். (3:135)

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. (3:138)

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (3:139)

உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை. (3:140)

நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.(3:141)

மேற்படி வசனங்கள் மூலம் இறைவன்  மீண்டும் முஸ்லிம் சமுகத்தை ஊக்குவித்து இவ்வாறு ஏற்படக் காரணம் என்ன என்பதை விளக்குகிறான். இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு பிரார்திக்க வேண்டும் என்பதை 147ம் வசனத்தில் தெளிவு படுத்துகிறான்.

மேலும், “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக” என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை. (3:147)

இவ்வாறான சோதனைகளின்போது நீங்கள் காஃபிர்களுக்கு கட்டுப்பட்டால் என்ன நடக்கும் என்பதை 149,150ம் வசனத்தில் தெளிவு படுத்துகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள். (3:149)

(இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன். (3:150)

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.( 3:160)

மேற்படி வசனத்தில் அல்லாஹ்வைத்தவிர உதவி செய்ய வேறுயாருமில்லை என்பதைபெருமையுடன் கூறுகிறான். இது மறுக்க முடியாத உண்மையாகும். ஏனேனில் 2018 திகன கலவரத்தில் முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடையொன்று முற்றாகசேதமுற்றிருந்தது. ஆனால் அக்கடை மீண்டும் இவ்வாண்டு (2019) இறைவனின் உதவியால் புதுப்பொளிவுடன் திறக்கப்பட்டதை அவதானிக்கலாம்.

முஸ்லிம்கள் இவ்வாறு இருந்தால் உதவி செய்வான் என்பதை  186ம் வசனத்தின் மூலம் உறுதியளிக்கின்றான்.

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.( 3:186)

காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.( 3:196)

(அது) மிகவும் அற்ப சுகம்; பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும். (3:197)

ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.( 3:198)

காஃபிர்கள் உலகில் உல்லாசமாக வாழ்ந்தாலும் அவர்களுக்கு நரகமும் முஸ்லிம்களுக்கு சுவனமும் மறுமையில் உண்டென்பதை 196,197, 198ம் வசனங்களின் மூலம் தெளிவுபடித்திய இறைவன் இறுதியாக முஸ்லிம் சமுகத்தை இன்னொரு கட்டளையிடுகிறான். அதுதான்

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (3:200)

இங்கு இறைவன் முஸ்லிம்களை பலப்படுத்திக் கொள்ளுமாறு கூறுகிறான் இது யுத்தமொன்றுக்கு தயாராகுதல் அல்ல ஆனால் எம்மை தாக்கவந்தால் தற்காப்புக்காக திருப்பித் தாக்கலாம். ஆனால் அதனுடன் சுருக்காமல் நாம் வெற்றியடைய ஊடகத்துறை, அரசதொழிற்தறை, சர்வதேச அரசியல்துறை, உள்ளக அரசியல்துறை என பலதுறைகளில் நம்மை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

உலக முஸ்லிம்களுக்கு ஏற்படும் இன்னல்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம். எனவே அதிகம் அல்லாஹ்வை புகழுங்கள்.

கடந்த மூன்று வாரங்களை பொறுத்தவரையில் இலங்கை வரலாற்றின் சுருக்கம் இதுதான். இங்கு இலங்கை வரலாற்றில் திருப்பு முனையாக அமைவது தொடர் குண்டு வெடிப்புகளாகும். இது இடம்பெற்று இரண்டு நாட்களில் இதற்கான உரிமையை ISIS அமைப்பு…

கடந்த மூன்று வாரங்களை பொறுத்தவரையில் இலங்கை வரலாற்றின் சுருக்கம் இதுதான். இங்கு இலங்கை வரலாற்றில் திருப்பு முனையாக அமைவது தொடர் குண்டு வெடிப்புகளாகும். இது இடம்பெற்று இரண்டு நாட்களில் இதற்கான உரிமையை ISIS அமைப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *