காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 15

  • 12

” ஐயோ!  அவனை யாராச்சும் தடுத்து நிறுத்துங்க… ஜெனியை யாராச்சும் அவன்கிட்ட இருந்து காப்பாத்துங்க.” என்று மீரா கத்தினாள்.

“ஹெல்ப்… ஹெல்ப்… கில்கமேஷ்… பிலீஸ் என்னை கீழே இறக்கி விடு….” என்று ஜெனியும் கத்தினாள்.

ஆர்தரும் ராபர்ட்டும் ஓடிப்போவதற்கிடையில் வீட்டின் கதவு அடைக்கப்பட்டது. வெளியில் இருந்து கொண்டு மூவரும் கதவை பலமாக தட்டினார்கள்.

“ஐயையோ… அவன் வேற செம்ம போதையில இருக்கானே…” என ஆர்தர் புலம்ப மீரா கோபத்தில்..

“இது எல்லாத்துக்கும் நீதான் காரணம்… நீங்கதானேடா விஸ்கியை கொண்டுவந்து வெச்சீங்க… பாரு இப்போ அந்த காட்டுப்பையன் நம்ம ஜெனியை உள்ளே தூக்கிட்டு போய்ட்டான்… என்ன பண்ணப்போறானோ…” என மீரா அழாத குறையாக பேசினாள்.

உள்ளே சென்ற கில்கமேஷ் ஜெனியை தூக்கி கட்டிலில் போட்டுவிட்டு தட்டு தடுமாறி கொண்டே தான் அணிந்து இருந்த சேர்ட்டினை கழற்றினான்.ஜெனிக்கு பயத்தில் உடல் விறைத்து விட்டது…

“இன்னிக்கி நம்மள இவன் ரேப் பண்ண போறான்… கடவுளே என்னை காப்பாத்து…”

“ரொம்ப ரொம்ப வருசங்களாகி விட்டது… உன்னை பார்த்த உடனே எனக்கு தோணிச்சு… உன்னை ஒரு வழி பண்ணனும் என்னு…”

“என்ன…. இல்ல இல்ல கில்கமேஷ்.. நீ நீ இப்போ போதையில இருக்கே…. “

“ஆனா… நானே என்னை கட்டுப்படுத்தி கிட்டேன்… இன்னிக்கி நீயே வந்து என்னை கட்டிப்பிடித்து உனக்கும் இஷ்டம் என்னு சொல்லிட்டே…” என்றான்.

“ஐயையோ.. நாம இவனை ஹக் பண்ணிகிட்டத இவன்தப்பா நினைச்சிட்டான் போல இருக்கே… இவன்  கிட்ட இருந்து இப்போ எப்படி தப்பிக்கிறது?” என ஜெனி அல்லாடிக்கொண்டு இருக்க வெளியில் இருந்து நண்பர்கள் கதவை திறக்க அல்லது உடைக்க முயற்சித்து கொண்டிருந்தனர். ஆனால் அந்த கதவோ அவ்வளவு சீக்கிரத்தில் உடைவதாக தெரியவில்லை.

“சீக்கிரம் ஏதாச்சும் பண்ணி கதவை உடைங்க…. அவளை காப்பாற்றி ஆகணும்…” என மீராவும் சொல்லிக்கொண்டே இருந்தாள். உள்ளே..

“நீ… நீ என்னை தப்பா புரிஞ்சிகிட்டே கில்கமேஷ் நான்.. நான்… உன்னை ஒரு நண்பனாக நினைச்சி தான் அப்படி பண்ணேன்… வே…வேற ஒன்னும் இல்ல..”

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நான் பயங்கர பசியில இருக்கேன்.. வா.. வா.” என்று நாய்க்குட்டியை அழைப்பது போலவே கூப்பிட்டான்

எல்லாவற்றையும் விளையாட்டு போலவே எண்ணிக்கொள்பவள்  இன்று நடக்க போவதை எண்ணி கவலைப்பட்டாள். கில்கமேஷ் மிக அருகில் வந்து விட்டான். ஜெனிக்கு  அவளுடைய இதயத்துடிப்பே கேட்க  ஆரம்பித்து விட்டது.. இவ்வளவு நெருக்கத்தில் எந்த ஆணும் இதுவரை அவள் அருகில் இருந்தது இல்லை. அவளும் அனுமதித்ததும் இல்லை. இன்று… கில்கமேஷ்ஷை தள்ளி விட்டு வெளியே செல்ல முயற்சித்தாள். இருந்தும் அவனது கட்டுமஸ்தான உடலை அசைக்க கூட அவளால் முடியவில்லை..

தன்வாழ்க்கை இத்தோடு முடிந்து விடப்போகிறது… தனக்கு பேருதவி புரிந்த அவனே தன் வாழ்க்கையை நாசமாக்க போகிறான் என்று எண்ணும் போது நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது.

கில்கமேஷ் பெண்களை திருமணம் செய்தது இல்லை.. எல்லோரையும் அவனது ஆசை நாயகிகளாக ஆக்கி வைத்து இருந்தான். ஒரு பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்றால் மணமகன் அவளை தொடுமுன் அவன் வேட்டையாடிவிடுவான்… என்கிடுவின் வருகைக்கு பின் இந்த கெட்ட பழக்கங்கள் பலவற்றை மறந்தே போய் இருந்தான்…

இப்போது தன்னுடைய தவறால் தான் மீண்டும் இவனுக்கு இப்படி ஒரு சிந்தனை உருவாகிவிட்டது என்று எண்ணுகையில் ஜெனி தன்னை தானே நொந்து கொண்டாள். ஒட்டுமொத்த சக்தியை இழந்து கையறு நிலையில் அவனுக்கு அடங்கிப்போவதென தீர்மானித்தாள்.

கில்கமேஷ் ஜெனியின் ஆடையில் இருந்த பட்டன் எல்லாவற்றையும் பிய்த்து எறிந்து விட்டான்… அவளை முத்தமடுவதற்காக குனிந்த போது  ஜெனி கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள் அதிலிருந்து விழுந்த கண்ணீர் துளியானது கில்கமேஷ் முகத்தில் விழுந்து சிதற… ஒருகணம் திடுக்கிட்டான் கில்கமேஷ்.

மனதில் என்ன எண்ணிக்கொண்டானோ.. அவளை ஒன்றுமே செய்யவில்லை… எதையோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்த மாதிரியே கட்டிலில் விழுந்தான்… ஏதோ வித்தியாசமாக இருக்கிறதை எண்ணி கண்களை திறந்த ஜெனி அவன் தன்னை எதுவும் செய்யவில்லை என்பதை உணர்ந்து சட்டென விலகி சட்டையை சரி செய்து கொண்டு கதவை ஓடிப்போய் திறந்தாள்.. முன்னாடி மூவரும் மூச்சு வாங்க நிற்க ஜெனி மீராவை கட்டி அணைத்து கொண்டு அழுதாள். சற்று ஏதோ தவறு நடந்துவிட்டதாக எண்ணி ஆர்தர்.. கோபப்பட்டு உள்ளே செல்ல முனைந்த போது ஜெனி அவளை தடுத்து நிறுத்தினாள். கண்ணீரை துடைத்து கொண்டு

“எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்… அவனை விட்டுடுங்க… போதை தெளியட்டும்…”என்றாள்.

“ஸீட்…” என்றபடியே ஆர்தரும் ராபர்ட்டும் சென்றுவிட்டனர்.

“உள்ளே என்னடி ஆச்சு.. ஏன் கிட்ட சொல்லு.. அவன் உன்னை… எதுவும்…” என மீரா கேட்டாள்.

“இல்லடி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல… சரி நான் வாஷ் ரூம் போய்ட்டு வர்றேன்..” என்றவன் மறுபடியும் குளிப்பதற்கு சென்றாள். ஷவரில் தண்ணியை திறந்து விட்டு நடந்தவற்றை மீண்டும் எண்ணிகொண்டாள்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

” ஐயோ!  அவனை யாராச்சும் தடுத்து நிறுத்துங்க… ஜெனியை யாராச்சும் அவன்கிட்ட இருந்து காப்பாத்துங்க.” என்று மீரா கத்தினாள். “ஹெல்ப்… ஹெல்ப்… கில்கமேஷ்… பிலீஸ் என்னை கீழே இறக்கி விடு….” என்று ஜெனியும் கத்தினாள்.…

” ஐயோ!  அவனை யாராச்சும் தடுத்து நிறுத்துங்க… ஜெனியை யாராச்சும் அவன்கிட்ட இருந்து காப்பாத்துங்க.” என்று மீரா கத்தினாள். “ஹெல்ப்… ஹெல்ப்… கில்கமேஷ்… பிலீஸ் என்னை கீழே இறக்கி விடு….” என்று ஜெனியும் கத்தினாள்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *