காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 17

  • 27

“இவனே தான்… கே. கே.. நான் சொன்னேனே.. எங்களுக்கு சுமேரியன் சொல்லித்தந்த சேர் என்னு…” இவன் தான் அது.. என்று டீவியில் ஒருத்தனை காட்டினாள் ஜெனி.

கில்கமேஷ்க்கு அவனை எல்லாம்  ஒன்றும் தெரியாது. ஜெனி சொல்லித்தான் தற்போது மோதிரம் வைத்திருப்பவன் இவன் தான் என அவனுக்கே தெரிந்தது.

“இவன் இப்போ எங்க இருக்கான்?”என கே. கே கேட்டான்.

கொஞ்ச நேரம் அந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ஜெனி. தீவிரமாக யோசித்தாள்.

“இதென்ன அநியாயம் பார்த்தியா ஜெனி.. இந்த திருட்டு பயலுக்கு கொடுக்குற மதிப்பையும் மரியாதையும்.”என்றான் ஆர்தர்.

அங்கிருந்த ராபர்டுக்கு இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. அவர்கள் கில்கமேஷ் பற்றி எதையும் சொல்லி இருக்கவில்லை. இப்போது அவன் ஒன்றும் புரியாமல் முழிப்பதை பார்க்க சகிக்காமல் ஆர்தர் விடயத்தை சொல்லிவிட்டான்…

“என்னாது…8000 வருஷமா…?”என்று அதிர்ச்சியில் வாயைப்பிளந்தவன் அப்படியே உறைந்து விட்டான்.

“இப்போ இதுல என்ன சொன்னாங்க… எனக்கு ஒன்னும் புரியல்ல…”என்றான் கில்கமேஷ். அது இங்கிலீஷ் ப்ரோக்ராம் என்பதால் அவனுக்கு புரியவில்லை.

“எங்களை கடத்தியவன் தான் இது. நல்லா தெரியுது.. இவன் மூளை எப்படி எல்லாம் வேலை பண்ணுது பார்த்தியா?”என்றான் ஆர்தர்.

“இவன் பேரு மித்ரத்.. பெரிய பணக்காரன். அதோட சுமேரிய மொழி தெரிஞ்ச ஒரே ஒரு ப்ரொபெஸர்.. அதனால தான் இவனை விசிட்டிங் லெக்சரா கூப்பிட்டு எங்களுக்கு பாடம் நடத்தினாங்க.

“இப்போதைக்கு அவனோட திட்டம் என்ன என்னு சரியா புரியல.. ஆனா இவன் பெரிசா ஏதோ பிளான் போடுறான்.”

கில்கமேஷ்! திரும்பி வந்தது இவனுக்கு எப்படியோ தெரிஞ்சி இருக்கணும்… அதனால் தான் நம்மள கடத்திட்டு வேற ஏதோ காரணத்தால சும்மா விட்டுட்டு போய் இருக்கான்.  இவன் உண்மையிலேயே யாரு… தனியாளா இல்ல இவன் கூட யாரெல்லாம் இருக்காங்க? இன்னும் என்னென்ன பண்ணப்போறான் எதுவுமே புரியல்லியே” என்றாள் ஜெனி.

அதற்கு மீரா,”இவன் ஒன்னும் தனியாளாக இருக்கவும் முடியாது. அன்னிக்கி நம்மள கடத்தினப்போ அதே டாட்டோ போட்ட இன்னும் கொஞ்சம் பேரும் இருந்தாங்களே!”என்றாள்.

“மீரா சொல்றது சரி..இப்போ இவன் பண்ணப்போறே ஸ்போன்ஸர்ஷிப்ல புகழ்பெற்ற ஆர்க்கியொலிஸ்ட் எல்லாம் சேர்ந்து அழிஞ்சு போன புதையுண்டு போய் இருக்குற விடயங்களை எல்லாம் தோண்டி எடுக்க போறாங்க… இதுல இவனுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கணும்.” என்றான் ஆர்தர்.

“ம்ம்….பின்னே… இல்லாமலா இதெல்லாம் பண்ணுவான்…” என மீரா சொன்னாள்.

“அப்படி என்னா என்னோட நாடு அழிஞ்சு போச்சு என்கிறீர்களா?”

இங்கப்பாரு கே கே.. உருக் நகரம் ஒன்னும் அழிஞ்சி போய்டல்ல.. ஆனா பாதுகாக்கப்பட்ட சில பொருட்களை எல்லாம் வெச்சிருந்த பெரிய மாளிகை ஒண்ணு யூப்ரதீஸ் நதி பெருக்கெடுத்து ஓடியபோது ஏற்பட்ட ஆற்றுப்படுக்கைல புதையுண்டு போய்விட்டது…

பிற்பட்ட காலங்களில் அதில் ஒரு சிறு பகுதி மட்டும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட போது தான் உன்னை பத்தி எழுதி இருந்த களிமண் தட்டுக்களும் அசூர் பனிபாலின் நூலகமும் கண்டறிய பட்டது…

அடிக்கடி வெள்ளம் வந்ததால் அந்த பகுதி ரெஸ்டிக்டட் ஏரியாவா அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டு அதுக்கு மேலே ஆராய்ச்சிகள் தொடராம போய்ட்டு…

அங்கு கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் பல நாடுகளில் இருக்கும் மியூசியம்களுக்கும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

அப்படித்தான் என்கிடுவோட மோதிரம் எங்க நாடான இத்தாலிக்கு வந்து இருக்கு.

என்றாள் ஜெனி.

“இப்போ அந்த ஏரியாவ இவன் பல கோடி செலவளிச்சு மறுபடியும் அகழ்வாராய்ச்சிக்கு வழி பண்ணி இருக்கான். இதுக்காக அரசாங்கத்துக்கு பல லட்சம் வரியும் கொடுத்து இருக்கான்.. உயர் நீதி மன்றத்தில் வழக்கு போட்டு அரசாங்கம் விடுத்த தடையை தகர்த்து இருக்கான்.”என்றான் ஆர்தர்.

“சரி… இப்போ மித்ரத் திட்டம் தான் என்ன…” என்று கேட்டான் கே. கே.

அதற்கு ராபர்ட் திடீரென “ஒருவேளை அவன் வேற ஏதாவது முக்கியமான பொருளை தேட இப்படி பன்றானோ என்னவோ” என்று சொல்ல எல்லோருக்கும் ஒரு விடயம் சட்டென உதித்தது.

அதே தான்.. நீ ஜீனியஸ் ராபர்ட்… என்கிடுவோட பிரேதத்தை அவன் தேடப்போறான். என்னு நினைக்குறேன்.

என்றாள் ஜெனி.

இல்ல… இதை நடக்க விடமாட்டேன்… என்கிடு எனக்கு சொந்தமானவன்… அவனை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.. அந்த மோதிரத்தை கைப்பற்றி என்கிடுவுக்கு மறுபடியும் உயிர் கொடுப்பேன்.

என்றான் கே கே.

“இனி என்ன பிளான்.. அவன் ஆல்ரெடி அங்க தான் இருக்கான்… இந்த முயற்சிக்கு தான் இவனுக்கு பாராட்டு விழா நடத்துறாங்க.”

“தயாராகுங்க எல்லோரும் நாம ஈராக் போறோம்.”என்றாள் ஜெனி எல்லோரும் அவளையே பார்த்து கொண்டிருந்தனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“இவனே தான்… கே. கே.. நான் சொன்னேனே.. எங்களுக்கு சுமேரியன் சொல்லித்தந்த சேர் என்னு…” இவன் தான் அது.. என்று டீவியில் ஒருத்தனை காட்டினாள் ஜெனி. கில்கமேஷ்க்கு அவனை எல்லாம்  ஒன்றும் தெரியாது. ஜெனி…

“இவனே தான்… கே. கே.. நான் சொன்னேனே.. எங்களுக்கு சுமேரியன் சொல்லித்தந்த சேர் என்னு…” இவன் தான் அது.. என்று டீவியில் ஒருத்தனை காட்டினாள் ஜெனி. கில்கமேஷ்க்கு அவனை எல்லாம்  ஒன்றும் தெரியாது. ஜெனி…