தாக்கப்பட்டும் இறைவனிடம் மீளாத நம்மவர்கள்..

  • 12

இலங்கை தாய் திருநாட்டில் 10% வாழ்கினற முஸ்லிம் மக்களாகிய நாம் எம்மல் முடிந்த வரை இந் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்நாட்டு முஸ்லிம்கள் தேசிய பாதுகாப்பு, தேசிய ஐக்கியம், பொருளாதார அபிவிருத்தி, நிதி, நீதி மற்றும் நிர்வாகம் ஆகிய அரசின் முக்கிய பகுதிகளுக்கு அன்று முதல் இன்று வரை ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அதனால் எமது நாட்டின் அரசு இறைவன் உதவியுடன் எமக்கு நன்றிக் கடனாக இருக்கின்றன.

ஏதோ ஒரு நாசகார கும்பல் இலங்கையில் நடத்திய தீவிரவாத தாக்குதல் அதனையடுத்து எமது நாட்டுப்பற்று முஸ்லிம்கள் அந்த நாசகார கும்பலை காட்டிக் கொடுத்து அவர்களை முற்றாக அழிக்க உதவினோம். ஆயினும் அப்படி உதவிய எம்மவர்களுக்கு எம் நாட்டில் வாழும் இனவாதிகளால் ஓரிரு தினங்களுக்கு முன் அடி மேல் அடி விழுந்தது. இந்த அடிகள் விழுவதற்கு நாம் முஸ்லிம்கள் என்பதும் இஸ்லாத்தை ஒடுக்க வேண்டும் என்பதுமே தவிர வேறொன்றுமில்லை. எமது இஸ்லாம் மார்க்கம் ஆதம் நபி அவர்களின் காலம் முதல் இன்று வரை பற்பல தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்துக் கொண்டு உலகின் இரண்டாவது பின்பற்றப் படும் மதமாக உள்ளது.

எமது இஸ்லாமியர்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் எமக்கு புதிதல்ல. நபியவர்கள் காலத்தில் அவர்களது தாயிப் பயணமாக இருக்கட்டும் யுத்தங்களாக இருக்கட்டும் அவற்றில் அனுபவித்த சொல்லன்னா தூயரங்களைவிட நாம் குறைந்த அளவான துயரங்களையே அனுபவித்து வருகின்றோம்.

முதலில் நபியவர்கள் சென்றது தாயிபுக்கே. அங்கு மக்களால் அடித்து துரத்தப்பட்டார்கள். நபியவர்களின் புனித மேனியில் இருந்து குருதியும் வரவே ஜிப்ரீல்(அலை) அவர்கள் கேட்டார்கள் இவர்களை அழித்து விடட்டுமா என்று ஆயினும் நபியவர்கள் வேண்டாம் இவர்கள் எதிர்த்தாலும் இவர்களின் சந்ததியினர் இஸ்லாத்தை ஏற்பார்கள் என்று பொறுமையாக இறைவனிடம் முறையிட்டு அக்கால இளைஞர்களையும் இறைவனின்பால் அழைத்ததால் அலப்பெரிய வெற்றி கிடைத்தது.

நாம் இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கையில் ஒல்லாந்தர் காலம் முதல் இன்று வரை தொடர்ந்து தாக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம். அன்று கம்பளையில் முதலில் முஸ்லிம்களுக்கு எதிரான அட்டகாசம் அறங்கேரியது. அதில் நமது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆனால் அன்றைய நம்மவர்கள் ஈமானையும் இஸ்லாத்தையும் விடவில்லை. அவர்கள் நபி அவர்கள் காட்டித்தந்தது போல் பள்ளியின் பக்கம் இறைவனிடம் முறையிட்டனர்.

அதன் பின்னர் படிப்படியாக முஸ்லிம்கள் இலங்கையில் சின்னச்சின்ன காரணங்களுக்காகவும் , நம் முஸ்லிம்களின் சில வேலைகளாலும் அடி வாங்கிக் கொண்டிருக்கின்றோம். அண்மைக் காலமாக பேருவளை, அளுத்கம, தர்கா டவுன் என ஆரம்பித்து பின்னர் ஜின்தொட்ட, அம்பாறை, திகன, கண்டி என சென்று நேற்று நாத்தாண்டி, ஹெட்டிப்பொல, பூவல்ல, கினியம, கொட்டாரமுல்ல, குளியாபிடிய, நிகவெரட்டிய என தொடர்கிறது… அடுத்து எங்கு ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது.

மேலும் இப்படிப்பட்ட தாக்குதல்களின் போது தற்போதைய நம் சமூகம் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய பள்ளி வாயல் பக்கம் செல்ல வேண்டிய நாம் அரசையும், பாதுகாப்புப் படையையும் நம்பியிருக்கிறோம். அதனாலோ அல்லாஹ்வின் சோதனை நமக்கு ஏற்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நமது மார்க்கமோ நமது நபி (ஸல்) அவர்களோ காட்டித்தந்தது எமக்கு ஓர் பிரச்சினை ஏற்படும் போது அது இன்பமோ துன்பமோ எது ஏற்பட்டாலும் நாம் நாட வேண்டியது இறைவனையே தவிர வேறு எவரையும் அல்ல.

சிந்திப்போம்!!! தற்போது பல்வேறு இனவாத தாக்குதல்கள் அதேபோன்று சொத்து சூறையாடல்கள் ஏற்பட்டும் நமது சமூகம் அதிலும் குறிப்பாக பல இளைஞர்கள் இன்னும் இறைவன் பக்கமோ பள்ளிவாசல் பக்கமோ வரவில்லை. இப்படிப்பட்ட சோதனைகளின் போது சாரை சாரையாக இறைவனிடம் முறையிட வேண்டிய நாம் இன்னும் தொழுகையின் பக்கமோ இதர அமல்களின் பக்கமோ மீளவில்லை. ஏன் என்று தான் எமக்கு புரியாத புதிராகவே உள்ளது.

இந்த தாக்குதல்களுக்குப் பயந்தாவது ஏனைய பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பள்ளிவாசல் பக்கம் வருவார்கள் என்று பார்த்தால் இன்னும் இழுத்து போர்த்தி தூங்கிக்கொண்டிருக்கின்றனர். இல்லாமல் இருந்தால் எப்போது இறைவனின் அருள் (உதவி) நமக்கு கிடைக்கும். ஏதோ நேந்து விட்டது போன்று ஊரிலுள்ள முதியவர்களும், சிறார்களும் பள்ளியில் நடக்கும் தொழுகை போன்ற இதர அமல்களில் கலந்து கொண்டாலும் நமது இளைஞர்கள், வாலிபர்கள் உடல் பலமுள்ள சீதேவிகள் இன்னும் மீளவில்லை என்பதனை நினைக்கும் போது மனம் குமுறுகின்றது. கண்கள் குளமாகின்றன.

ஆகவே எமது முஸ்லிம்களின் பொருளாதாரம் மீதும், எமது முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும், எமது பள்ளிவாசல்கள் மீதும், எமது புனித குர்ஆன் மீதும் தாக்குதல் நடத்தும் இவர்களுக்கு இறைவனின் அழிவு நிச்சயமாக ஏற்படும். இவர்களுக்குரிய நடவடிக்கைகளை அரசும், பாதுகாப்புப் படையும், நீதிமன்றமும் பார்த்துக் கொள்ளும். நாம் அல்லாஹ்வின் பக்கமும் இபாதத்களின் பக்கமும் திரும்பி விடவேண்டும்.

இறுதியாக, இந்த தாக்குதல்களின் போது நாம் சட்டத்தை கையில் எடுக்காமல் பொறுமையாகவும், நிதானமாகவும் எமது காரியங்களை நாம் செய்ய வேண்டும். இவர்களால் அழிவுக்குள்ளான சொத்துக்கள் இருந்ததைவிட இரட்டிப்பாக கிடைக்கும். அது நிச்சயமாகும். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதாவது இறைவன் பக்கம் மீளவேண்டும்.

இந்த புனித ரமழானுடைய காலத்திலும் கூட பலர் பள்ளியின் பக்கம் நெருங்கவே மாட்டார்கள். இந்த பிரச்சினைகளின் போது எந்த ஊரிலாவது 100% ஆவது பள்ளிக்கு ஐவேளை பள்ளிக்கு தொழுகைக்கு வருகின்றனரா? இல்லை குறைந்தது ஊரிலே 80% or 90% ஆனவர்களாவது வருகின்றீர்ளா? இன்னும் இளைஞர்கள் பள்ளியின் பக்கம் மீளவே மாட்டார்கள். ஆகவே நாம் இப் பிரச்சினைகளில் பொறுமை காத்து சிறுவர்கள், இளைஞர்கள், வாலிபர்கள், வயோதிபர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் இறைவன் பக்கம் முறையிட்டு மன்றாடி சிறந்த எதிர்காலத்தையும் சுபீட்சத்தையும் வேண்டி பிரார்த்திப்போமாக!!

R.M.Afzal Raza
Kauketiya.
Nikaweratiya.
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

இலங்கை தாய் திருநாட்டில் 10% வாழ்கினற முஸ்லிம் மக்களாகிய நாம் எம்மல் முடிந்த வரை இந் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்நாட்டு முஸ்லிம்கள் தேசிய பாதுகாப்பு, தேசிய ஐக்கியம், பொருளாதார அபிவிருத்தி, நிதி, நீதி…

இலங்கை தாய் திருநாட்டில் 10% வாழ்கினற முஸ்லிம் மக்களாகிய நாம் எம்மல் முடிந்த வரை இந் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்நாட்டு முஸ்லிம்கள் தேசிய பாதுகாப்பு, தேசிய ஐக்கியம், பொருளாதார அபிவிருத்தி, நிதி, நீதி…