காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 18

  • 11

ஜெனிபர் எப்போதுமே அதீத தன்னம்பிக்கை கொண்டவள். எது செய்வதானாலும் ஒரு திட்டம் போட்டு அதிலுள்ள குளறுபடிகளை ஆராய்ந்து சரியான பக்கமே முடிவெடுப்பாள். இந்த தடவை சட்டென ஈராக் செல்ல தயாராகுங்கள் என்றதும் நண்பர்களுக்கு எதுவும் புரியவில்லை.

“ஜெனி இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஓவர் கன்பிடன்ட் இருக்க கூடாது… நாம எல்லாரும் ஈராக் போறோமா என்னடி சொல்றே?” என மீரா குழப்பத்தில் கேட்டாள்.

“நான் முடிவெடுத்துட்டேன்.. என்கூட வர்றவங்க வரலாம். நான் யாரையும் கட்டயப்படுதல்ல…” என்றாள் பதிலுக்கு.

அப்படி இல்லை ஜெனி… நாம ஒன்னும் ஊரு விட்டு ஊரு போற விஷயம் இல்ல இது வேற ஒரு நாட்டுக்கு போகணும்… நாங்க உன்னோட இருப்போம் அது இப்போ பிரச்சினை இல்ல. ஆனா ஈராக் போகணும் என்னா பாஸ்போட் எடுக்கணும்.. விசா எடுக்கணும் பணம் வேற எக்கச்சக்கமாக தேவைப்படும்… இதெல்லாம் பத்தி நீ யோசிக்கவே இல்லியா?

என ஆர்தர் கேட்டான்.

“அதெல்லாம் யோசிக்காமலா இவ்வளவு பெரிய முடிவு எடுத்து இருப்பேன். நமக்கு பணத்தை பற்றியோ விசா, பாஸ்போர்ட் பற்றியோ எந்த பரோப்ளேமும் இல்ல… என்னோட அங்கிள் மார்ட்டின் கிட்ட படிப்பு விஷயமா சின்ன டூர் போகணும் இதெல்லாம் அரேன்ஜ் பண்ணுங்க என்றாலே போதும் அடுத்த நொடி விசா பாஸ்போஸ்ட் எல்லாம் நம்ம கைல.. ஆனா…”

“என்ன ஆனா… என்னு இழுக்குறே?” என்று கேட்டான் ஆர்தர். அவள் கில்கமேஷ்ஷை காட்டி,

“இவனை  அழைச்சிட்டு போறதுல தான் சிக்கலே இருக்கு…”என்றாள்.

ஆர்தர் சிரித்து கொண்டே “ப்பூ..இவ்வளவு தானா  அவன் அங்க இருந்து தானே வந்தான்.. காடு மேடு தாண்டி அப்படியே அனுப்பி வெச்சிடுவோம்… எப்படி என்னோட ஐடியா….” என்று சிரித்து கொண்டே சொல்ல எல்லோரும் அவனை செம்ம கோபத்தில் பார்த்தனர்..

மீரா அவனிடம்

“கொஞ்சமாவது மூளை இருக்கா உனக்கு… அவனை மறுபடியும் காட்டுக்கே அனுப்புறதா… தெரிஞ்சி கிட்டா இத்தாலி வந்தான் இவன்.. வழிமாறி வந்துட்டான்… அவனை போய்….”

“ஆமா ஆர்தர்.. அப்படியே நீ சொல்றமாதிரி மேப்பை கைல கொடுத்து அனுப்பினாலும் இவன் வந்து சேரப்போறே பத்து பதினைந்து நாள் கழிச்சி நாம இவனை சந்திக்கிறது சாத்தியமே இல்லை…

அதோட கில்கமேஷ் நம்ம கூடத்தான் இருக்கணும்.. அதுதான் சரி.” என்றாள் ஜெனி.

“அப்படி என்னா எப்படி இவனை நம்ம கூட கூட்டிட்டு போறது…?” என்று மறுபடியும் ஆர்தர் கேட்க ஜெனி யோசித்தாள்.

அப்போது ராபர்ட் குறுக்கிட்டு,

“என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு இவனுக்கு பாஸ்போர்ட் எடுக்கணும் என்னா நம்ம நாட்டு பிரஜை என்னு நிரூபிக்க நேஷனல் ஐடி வேணும் கொஞ்சம் பணம் செலவளிச்சா ரெண்டு நாள்லே ஐடி கிடைச்சிடும் அப்பறம் பாஸ்போர்ட் எடுக்கிறது ரொம்ப ஈஸி” என்றான்.

“வாவ்.. குட் ஐடியா… அப்படி என்னா பணத்துக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன்… நீ ஐடி எடுக்கிற வேலையை பாரு.” என்றாள் ஜெனி.

பின்னர் ஜெனி அவளுடைய அங்கிள் மார்டினுக்கு போன் பண்ணி பேசினாள்.

“அங்கிள் நாங்க மொத்தம் 5 பேரு சேர்ந்து ஒரு இன்டிவிஜுவல் டூர் போறோம் ஈராக்குக்கு …. படிப்பு விஷயமாதான்… …

ஆமா, அரேன்ஜ் பண்ண முடியுமா???……

ஆஹ்.. ரொம்ப தாங்ஸ் அங்கிள்… நான் அப்பறம் போன் பண்ணுறேன்.” என்று விட்டு போனை கட் பண்ணினாள்.

“என்னவாம்?”என மீரா கேட்டாள்.

“நான் சொல்லல. அங்கிள் ஓகே சொல்லிட்டாரு… எல்லோரோட ஐடி புரூஃபயும் மெயில் பண்ண சொல்லி இருக்காரு. சோ ராபர்ட் நீ கே கே வ கூட்டிகிட்டு போய் ஐடி மேட்டரை பாரு..

ஆர்தர், மீரா நீங்க ரெண்டுபேரும் வாங்க நான் ஏ டி எம் ல பணம் எடுத்து தர்றேன் பயணத்துக்கு வேண்டிய ஷாப்பிங் பண்ணிட்டு வாங்க.

நான் கொஞ்சம் காலேஜ்ல போய் நம்ம மூணுபேரோட லீவு பத்தி டீனை பார்த்து பேசிட்டு வர்றேன்.” என்றாள்.

இதையெல்லாம் பார்த்து கொண்டே இருந்த கில்கமேஷ் ஆச்சர்யப்பட்டான். மிகவும் சாமர்த்தியமாக சிந்தித்து பேசும் திறமையை பார்த்து பிரம்மித்தான்..

இதே புத்திசாலித்தனம் அவனுக்கு என்கிடுவை நியாபகமூட்டியது. அவனும் இப்படித்தான் பேசுவதெல்லாம் சாதுர்யமாகவே இருக்கும். அவனுடைய அந்த பண்புகள்தான் அவர்களுக்குள் நட்பை உண்டுபண்ணியது. கொஞ்ச நேரம் பழைய நியாபகங்களில் மூழ்கிப்போய் இருந்த கில்காமேஷ்ஷை ராபர்ட் உலுக்கினான்.

“ஹலோ.. ஹலோ…சார்..வாங்க உங்களை போட்டோ எடுக்கணும் உங்களுக்கு ஐடி எடுக்கணும்… நடையை கட்டுங்க” என்றான்.

இனி அவர்கள் எல்லோரும் தத்தமது வேலைகளை செய்ய ஆரம்பிக்க…. பம்பரமாக ஒரு மூன்று நாட்கள் உருண்டன. இனி

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ஜெனிபர் எப்போதுமே அதீத தன்னம்பிக்கை கொண்டவள். எது செய்வதானாலும் ஒரு திட்டம் போட்டு அதிலுள்ள குளறுபடிகளை ஆராய்ந்து சரியான பக்கமே முடிவெடுப்பாள். இந்த தடவை சட்டென ஈராக் செல்ல தயாராகுங்கள் என்றதும் நண்பர்களுக்கு எதுவும்…

ஜெனிபர் எப்போதுமே அதீத தன்னம்பிக்கை கொண்டவள். எது செய்வதானாலும் ஒரு திட்டம் போட்டு அதிலுள்ள குளறுபடிகளை ஆராய்ந்து சரியான பக்கமே முடிவெடுப்பாள். இந்த தடவை சட்டென ஈராக் செல்ல தயாராகுங்கள் என்றதும் நண்பர்களுக்கு எதுவும்…