கோடாரிகள்

  • 13

விதைந்த நாள் தொட்டு
முளை விட்டு
கிளை விட்டு
வேராய் நிமிர்ந்த
தோப்பு இது

மரமாயினும்
மாறா குணமாய்
பட்சிகள் இனம் பாராது
இளைப்பார
இருக்கையாய் இருந்து
இருக்க அணைத்த
கைகளிது

ஒரே இனம் என்றறிந்தும்
தான் உருவாகிய
உதிரத்தை மறந்து
கற்ற பாடம் துறந்து
ஈரமற்ற மரக்கட்டைகள்
கோடாரிகள் எனும்
பெயர் தாங்கி
சிதைத்திட்டது
இத்தோப்பை

இன்றுவரை
கதிகலங்கி கண்ணீர்
வடிக்கிறது அடிபட்ட
அம்மரங்கள்

கோடாரிகளுக்கு வேலை
எதுவரை?
அம்மரங்களுக்கு தெரியும்
பின்னால் பிடித்திருக்கும்
விலை போகும் கைகள்
வீழும் வரை
அதுவரை பொறுமை
காக்கும்
இந்தத் தோப்பு…..

கவிச்சாரல் சாரா
புத்தளம்

விதைந்த நாள் தொட்டு முளை விட்டு கிளை விட்டு வேராய் நிமிர்ந்த தோப்பு இது   மரமாயினும் மாறா குணமாய் பட்சிகள் இனம் பாராது இளைப்பார இருக்கையாய் இருந்து இருக்க அணைத்த கைகளிது  …

விதைந்த நாள் தொட்டு முளை விட்டு கிளை விட்டு வேராய் நிமிர்ந்த தோப்பு இது   மரமாயினும் மாறா குணமாய் பட்சிகள் இனம் பாராது இளைப்பார இருக்கையாய் இருந்து இருக்க அணைத்த கைகளிது  …