காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 20

  • 94

ஈராக் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டிருந்தது. ஜெனியை மீரா கைத்தங்கலாக பிடித்து கொண்டே வெளியேறினாள். கில்கமேஷ் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை உதட்டில் விரல் களை தடவி கொண்டே பேயடித்தது போல ஒரு ஜடமென இவர்களை பின்தொடர்ந்து வந்தான்.

“பாவம் டா நம்ம கே கே.. எதிர்பாக்கமா கிடைச்ச முத்தத்தால ஷாக் ஆகிட்டான்…” என்றான் ராபர்ட்.

“அடபோடா நீ வேற சும்மா சும்மா கடுப்பேத்திக்கிட்டு.. ரெண்டு வருசமா லவ் பண்ணுறோம்.. இதுவரைக்கும் ஒரு சிங்கிள் கிஸ் கூட மீரா தந்ததே இல்ல…” என்று கடுப்பில் கூறினான் ஆர்தர்.

“இதென்னடா அநியாயம்… மீரா டச் கூட பண்ணினது இல்லியா?” என ஆச்சர்யத்தில் கேட்டான்.

“ஐயையோ… நிறைய வாட்டி என்னை அடிக்கிறதுக்காகவே டச் பண்ணி இருக்கா….” என்றான் பெருமையாக ஆர்தர்.

“நீ சுத்த வேஸ்டுடா மச்சான்… உனக்கு ஐடியா தர்றதுக்கு ஆள் இல்லாம இருந்து இருக்கே.. இனி பாரேன் ஐயா தர்ற ஐடியால தெறிக்க விடப்போறோம்.” என்றான் ராபர்ட்.

முன்னாடி சென்ற மீரா திரும்பி,

“ஹே காய்ஸ்… நாம தங்கப்போறே இடம் பத்தி ஜெனிக்கு தான் தெரியும்… அவ வேற இப்போ இந்த நிலையில் இருக்கா… எப்படி இப்போ அவளை சரிபண்ணுறது. அதுக்கு ஐடியா சொல்லுங்க.”என்றாள்.

“ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒரு பக்கட் தண்ணியை ஊத்தினா போதை தன்னாலே தெளிஞ்சிடும் என்றான் “ஆர்தர்.

“லூசு மாதிரி பேசாத டா…”என்றாள்.

“நீங்க எல்லோரும் எயார் போர்டில் இருக்குற பேசஞ்சேர் ரூம்ல வெயிட் பண்ணுங்க… நான் போய் லெமன் ஜூஸ் வாங்கிட்டு வர்றேன்.” என்றுவிட்டு ராபர்ட் சென்றான்.

இவர்களும் அவன் சொன்னது போலவே அங்கு காத்திருந்தார்கள். கில்கமேஷை பார்த்து மீரா… ஆர்தரிடம்.

“ஷ்… ஷ்… உன்னை தான்.. அவனை பாரு… ஏதாவது பண்ணி சரி பண்ணு… இல்லேன்னா பாக்குறவங்க தப்பா நினைச்சிக்குவாங்க.”என்றாள்.

“ஹ்ம்ம்…சரி”என்றவன் மறுபுறம் திரும்பி கில்கமேஷை உலுப்பி

“ஹலோ.. ஹெலோ… கே. கே.. நாம ஈராக் வந்துட்டோம்…. கொஞ்சம் நார்மலா இருக்க முயற்சி பண்ணு.”என்றான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை அப்போது மீரா மறுபடியும் ஆர்தரிடம் மெல்ல

“உருக் நகரத்துக்கு வந்திருக்கோம் என்னு சொல்லு அப்போதான் சரியாவான்.” என்றாள். அவள் சொன்னபடியே ஆர்தர் சொல்ல தனது நாட்டின் பெயரை கேட்டதும் ஏனையவற்றை மறந்து விட்டு நிஜ உலகுக்கு மீண்டான்.

“என்ன… இது தான் என்னோட நாடா….” என்று சத்தமாக சொல்ல அங்கிருந்த ஏனைய பேசெஞ்சர் எல்லோரும் அவனை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

அப்போது லெமன் ஜூஸுடன் உள்ளே வந்த ராபர்ட் அவனுக்கு நிலவரம் புரிந்து கே கேவை ஆசுவாசப்படுத்தி கூட்டிக்கொண்டு வந்து அமர வைத்து எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்தான். மீரா மெல்ல மெல்ல அதை ஜெனிக்கு பருக கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக ஜெனி போதை தெளிய ஆரம்பித்தாள். அவளை அப்படியே வாஷ்ரூம் அழைத்து சென்றாள் மீரா. உள்ளே போய் முகமும் கழுவியதும் ஜெனி சரியாகி விட்டாள். உடனே அவளுக்கு கில்காமேஷை குடிக்க விடாது மொத்த விஸ்கியையும் அவளே குடித்தது நியாபகத்திற்கு வர மீராவிடம்,

ஐயையோ என்னாச்சு.. கே. கே விஸ்கி குடிக்கல்ல தானே… அப்பறம் என்னாச்சு.. எனக்கு என்னாச்சு… நாம இப்போ எங்க இருக்கோம்… ஈராக் வந்திடுச்சா… ஏன் எனக்கு எதுவும் நியாபகத்திற்கு வரல..

என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனாள்.

“கூல்..கூல். காம் டவுன்… ..நாம இப்போ ஈராக் எயார் போர்ட்டில் இருக்கோம்.. சேஃபா வந்து சேர்ந்திட்டோம்.”என்றாள் மீரா.

“ஒஹ்ஹ் தாங் கோட்… மத்தவங்க எல்லாம் எங்க…” என்று சர்வ சாதாரணமாக கேட்டாள்.

“ஹேய்.. உனக்கு உண்மையிலேயே என்ன ஆச்சுன்னு நியாபகமில்லியா…” என்று ஆச்சர்யமாக கேட்டாள் மீரா.

“இல்லையே… என்ன…என்ன நடந்தது…”என்று மறுபடியும் ஜெனி கேட்டாள்.

நடந்தது அனைத்தும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள் மீரா…

“வாட்…… நானா…. அவனுக்கா.. ஒஹ்ஹ்.. காட்.. ஓஹ்.. காட்.. இப்போ என்ன பண்ணுவேன்.. ஐ காண்ட் பிலீவ் திஸ்… இப்போ எப்படி நான் கில்காமேஷ் முகத்தை பார்ப்பேன்…” என்று புலம்ப ஆரம்பித்தாள்.

“பேசாம இருடி.. நீ என்ன வேணும் என்னா பண்ணே… ஜஸ்ட் ஒரு ஆக்க்சிடெண்ட்… ஹா….. இப்போ வா என்கூட எல்லோரும் உனக்காக தான் வெயிட்டிங்..” என்று கையை பிடித்து அழைத்து சென்றாள் மீரா.

உள்ளே சென்றதும் ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்தை பார்த்துவிட்டு ஆளுக்காள் தர்மசங்கடமாகி விட்டது. இருந்தும் இருவரும் அதனை வெளிக்காட்டி கொள்ளவில்லை. ஜெனி அவனிடம் சென்று.

“தயவுசெய்து மன்னிச்சிடுங்க… தெரியாம அப்படி நடந்திடுச்சு”என்றாள்.

அவனும் மறுபுறம் திரும்பி “ஹ்ம்ம்.. பரவாயில்லை.”என்றான்.

“க்கும்… மேடம்… நாம எங்க தங்கப்போறோம் என்னு சொல்லுறீங்களா?”என்று கேட்டான் ஆர்தர்.

அவள் அப்போது தான் நியாபகம் வந்தவளாய்,

“ஹா…மறந்தே போய்ட்டேன்.. எங்க அங்கிளோட பிரண்ட் ஒருத்தர் இங்க இருக்காரு.. அவர் விசிட்டிங் கார்ட் இருக்கு…வாங்க அங்க போனா நாம தங்குறதுக்கு அவரே ஏற்பாடு பண்ணி தருவார்…”என்றாள்.

டாக்சி டிரைவர் கிட்ட அட்ரெசை சொல்லி எல்லோரும் அந்த பிரண்ட் வீட்டுக்கு பிரயாணம் செய்தனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ஈராக் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டிருந்தது. ஜெனியை மீரா கைத்தங்கலாக பிடித்து கொண்டே வெளியேறினாள். கில்கமேஷ் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை உதட்டில் விரல் களை தடவி கொண்டே பேயடித்தது போல ஒரு ஜடமென…

ஈராக் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டிருந்தது. ஜெனியை மீரா கைத்தங்கலாக பிடித்து கொண்டே வெளியேறினாள். கில்கமேஷ் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை உதட்டில் விரல் களை தடவி கொண்டே பேயடித்தது போல ஒரு ஜடமென…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *