ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயத்தங்கள்

  • 60

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான அரசியலின் போக்கு அடுத்த ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்‌ஷா அல்லது அவர் சார்ந்த அணியிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கான களத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் அமைந்துள்ளது.

இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் JVP உட்பட சிறுபான்மை கட்சிகளின் உதவியுடன்தான் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்போதைய நிலவரப்படி JVP, TNA என்பவற்றின் ஆதரவு தொடர்ந்தும் எவர்களுக்கு கிடைக்கும் என்பது உறுதியில்லை. இதனால் தற்போது வாக்கு வங்கி சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் மீதமுள்ள வாக்குகளை கைப்பற்ற பிரதான கட்சிகள் தற்போது பயன்படுத்தும் உத்தியே முஸ்லிம் எதிர்ப்புவாதம், ஆதரவாதம் என்பனவாகும். மீதமுள்ள வாக்குகள் JVP உட்பட சிறுபான்மை கட்சிகளுக்கு உரியவையாகும். இதில் பெரும்பான்மை இனமக்களின் வாக்கையுடைய JVPயின் வாக்குகளை பெறுவதற்காக  இங்கு மஹிந்த அணியினரும், ரணில் அணியினரும் முஸ்லிம்களின் விடயத்தில் எதிரும் புதிருமாக செயற்படுகின்றனர. ஆனால் இரு தரப்பின் இலக்கு ஒன்றுதான் அதுதான் அடுத்த ஜனாதிபதி ஆசனத்தில் கோத்தாபய ராஜபக்‌ஷா அமர்த்துவதாகும்.

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பிரதான பேசுபொருள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து அப்புறப்படுத்தல். இதனை​ அடியொட்டி தற்போது அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஆதரவானது, இஸ்லாமிய ஆதரவைவிட பௌத்த எதிர்ப்புவாதத்தை பிரதிபளிப்பதாக உள்ளது. இது  தளம்பல் நிலையில் பௌத்த வாக்காளர்களை கோத்தாபய ராஜபக்ஷா பக்கம் வாக்களிக்க தூண்டுவிதமாக உள்ளது.

இறுதியாக இலங்கை அரச வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்கள் எவர் ஜனாதிபதியாக வந்தாலும், அரசு அஸ்கிரிய பீடத்தின் தேவைக்கும், பிக்குகளின் ஆட்டத்திற்கும் இயங்குவதாகும். அதனால் எதிர்காலத்தில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களுக்கு ஆபத்தாகத்தான் உள்ளது. ஆனால் முஸ்லிம்களின் உதவி இல்லாமல் எந்த அரசுக்கும் இந்த நாட்டை 2025 வரை கொண்டு செல்வது கடினம்​ ஏனேனில் இலங்கையில் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் ஒருவனுக்கு பெரும்பான்மை வாக்கை கொண்டு ஜனாதிபதியாக வரமுடியும். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இல்லாமல் பாராளுமன்றத்தை அமைப்பது கடினம். ஏனெனில் விகிதசார ரீதியாக அவதானிக்கையில் பெரும்பாலான வெளிநாட்டு உதவிகள் முஸ்லிம்களின் ஊடகத்தான் கிடைக்கின்றது.

தற்போது முஸ்லிம்கள் கட்சிவாதம், இயக்கவாதம் மறந்து செயற்பட வேண்டிய காலமிதுவாகும். பொதுவாக இலங்கையில் பதவியேற்கும் ஜனாதிபதி முதல் தடவை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் இரண்டாவது தடவை எதிர்ப்பாகவும் செயற்படும் போக்கு காணப்பட்டாலும் அடுத்த ஜனாதிபதி முஸ்லிம் எதிர்ப்புவாதத்தை முதல் முறையே கைக்கொள்வார்.

ஆனால் முஸ்லிம்களே அச்சம்கொண்டு தளர்ந்து விடாதீர்கள். தற்போது நம்மிடம் பதவிகளுக்கு சோரம்போகாத முஸ்லிம் பாரளூமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாக இவ்வாறு செயற்பட்டால் கோத்தாபய ராஜபக்‌ஷா ஆட்சிக்கு வந்தாலும் பேரம்பேசும் சக்தியாக முஸ்லிம்களை மாற்ற முடியும். ஆனால் உங்களிடம் பிரிவினைவாதம் ஏற்பட்டால் அது உங்களுக்கு பலவீனமாகவும் உங்களின் உதவியால் இயங்கவுள்ள அரசுக்கு தம்மை உறுதிப்படுத்த பலமான காரணியாகவும் அமைந்துவிடும்.

எனவே முஸ்லிம்களே! கட்சிவாதம், இயக்கவாதம் மறந்து ஒற்றுமையாகி முஸ்லிம்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம். ஏனெனில் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுள்ள உங்களை இயக்கரீதியாக பிரிக்க சில ஊடகங்கள் களத்தில் இறங்கியுள்ளது.

Ibnuasad

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான அரசியலின் போக்கு அடுத்த ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்‌ஷா அல்லது அவர் சார்ந்த அணியிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கான களத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் அமைந்துள்ளது. இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி…

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான அரசியலின் போக்கு அடுத்த ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்‌ஷா அல்லது அவர் சார்ந்த அணியிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கான களத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் அமைந்துள்ளது. இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *