காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 21

  • 9

“இதுதான் நீங்க சொன்ன இடம் சேர்…”

“ஆஹ். ரொம்ப நன்றி ..”என்று அவனுக்குரிய பணத்தை கொடுத்து டாக்சியை அனுப்பி வைத்து விட்டு எல்லோரும் அந்த பிரம்மாண்டமான வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தனர்.

“மார்ட்டின் அங்கிளோட பிஸினஸ் பிரண்ட் லூதர் அங்கிளோட வீடு இது.. இங்க பெரிய பிஸ்னஸ் மேன் என்னு சொன்னாரு.” என்றாள் ஜெனி.

“அம்மாடியோவ்… வீடு என்னு சொல்லாதே. பெரிய பங்களா என்னு சொல்லு….”என்றான் ஆர்தர்..

“வாயை மூடு பெருச்சாளி நுழைய போகுது…”என்றாள் மீரா..

“இங்க பாருடா எப்போ பார்த்தாலும் என்னை திட்டிக்கிட்டே இருக்கா..” என்றான் ஆர்தர் ராபர்ட் கிட்ட.

“விடு விடு…மச்சி.. பொண்ணுங்க நம்மள ரொம்ப திட்டுறாங்க என்னா.. அவங்களுக்கு நம்மள ரொம்ப பிடிச்சிருக்கு என்னு அர்த்தம் டா.”

“அப்படியா சொல்றே??”

“ஆமா….”

“அப்போ சரி …மீரா என்னை எவ்வளவு வேணாலும் திட்டிக்க..” என்றான் அவள் காது பட அவள் முறைக்கவும் லூதர் அங்குவரவும் சரியாக இருந்தது.

“ஹாய் அங்கிள் லூதர்!”

“ஹலோ.. ஜெனிபர்.. வா வா உள்ளே வா…. மார்ட்டின் நீங்க வருவீங்கன்னு சொன்னான்.” என்று சொல்லி அழைத்து கொண்டே ஹாலுக்கு சென்றார் போகும் போது

“நான் இத்தாலி வந்தப்போ உன்னை சின்னதில பார்த்து இருக்கேன்… நீ அப்படியே உங்க அம்மாவை போலவே இருக்கே “என்றார். அம்மா என்றதும் ஜெனி முகம் வாடுவதை கில்கமேஷ் காண தவறவில்லை.

எதுக்காக ஜெனி அவங்க அம்மா பத்தி பேசியதும் கவலையாக இருக்கா?

என கில்கமேஷ் ஆர்த்தரிடம் கேட்டான்.

ஒஹ்ஹ் உனக்கு தெரியாதுல்ல.. அவங்க அம்மா ஒரு கார் ஆக்சிடன்ட்ல இறந்துட்டாங்க… அப்பா வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. அவங்க அம்மாவோட தம்பி மார்ட்டின் தான் அவளை அப்போ இருந்து வளர்த்து வர்றார்…

என்றான். அதை கேட்டதில் இருந்து ஜெனிபர் மேல இன்னமும் பரிதாபமாக இருந்தது அவனுக்கு. ஹால் வந்துவிட்டது. எல்லோரும் தத்தமது லக்கேஜ்களுடன் சோபாவில் அமர்ந்தனர்.

“இவங்கதான் உன்னோட கூட படிக்கிற பிரண்ட்ஸா… ஏதோ ப்ரொஜெக்ட் டூர் என்னு சொன்னான்… நான் இப்போ அவசரமா ஒரு மீட்டிங் போய் ஆகணும். அப்பறமா வந்து உங்க கூட பேசுறேன்.” என்னும் போது மாடியில் இருந்து ஒரு பெண் கீழே இறங்கி வந்தாள்.

“ஜெனி… இது என்னோட பொண்ணு டிடானியா… நீங்க தங்க வேண்டிய இடத்தை இவ உங்களுக்கு காட்டுவா..”என்றுவிட்டு அவசர அவசரமாக வாட்சை பார்த்து கொண்டு வெளியேறினார்.

“ஹாய் காய்ஸ்… நைஸ் டூ மீட் யூ ஐ ஆம் டிடானியா” என்று எல்லோருக்கும் தன்னை அறிமுகப்படுத்தினாள்.

“ஹாய்.. என்னோட பேரு ஜெனிபர், ஜெனி என்னு கூப்பிடுவாங்க.. இது…”

“இரு நாங்களே அறிமுகப்படுத்திக்கிறோம்”என்று கூறி மீரா

“என்னோட பேரு மீரா.”

“என்னோட பேரு ஆர்தர்”

“ஹாய்… நான்…. நான் ராபர்ட்.. உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோசம்” என்றான் ராபர்ட் அவளை பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டே.

அவள் கில்கமேஷை பார்த்து “ஹாய், ஹண்சம். நீங்க யாருன்னு இன்னும் சொல்லலியே”என்று கேட்டாள். ஆனால் அதற்கு ஜெனியும் ராபர்ட்டும் சேர்ந்து ஒருமித்து

“அவன் பேரு கே கே.”என்றனர்.

“ஏன்… சாரு பேசமாட்டாராக்கும்…” என்று கேட்டாள்.

“அதில்ல.. கே கேவுக்கு இந்த பொண்ணுங்க என்னா அலர்ஜி.. கூச்ச சுபாவம் ரொம்பவே அதிகம்”என்று சமாளித்தான் ராபர்ட்.

“ஓஹோ…”என்று டிடானியா சொல்ல ஆர்தர் மனதில்

அடப்பாவி.. இவனுக்கு பொண்ணுங்க என்னா அலர்ஜியா… என்ன கொடுமடா இது. எப்பேர்ப்பட்ட கிங்குக்கு கூச்ச சுபாவம் என்னு நாக்கு கூசாம பொய் சொல்லுறானே…

என்று எண்ணிக்கொண்டான்.

“சரி வாங்க உங்க ரூம் மேல இருக்கு” என்றவள் வேலைக்கரர்களை கூப்பிட்டு லக்கேஜ்களை எடுத்து வர சொல்லிவிட்டு பேசிக்கொண்டே மேலே சென்றாள்.

டிடானியா, ஜெனியை விட ஒரு வயது குறைந்தவள். அழகிலும் யாருக்கும் சளைத்தவள் இல்லை. அதே போல் புலனாய்வுத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவள் என்பதை அவள் பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே எல்லோருக்கும் புரிந்தது.

“நீங்க ரெண்டுபேரும் என்னோட இந்த ரூம்ல தங்க போறீங்க… உள்ள எல்லா வசதியும் இருக்கு இது எங்க அப்பா கெஸ்ட் வந்தா தங்குறதுக்கு என்றே ரெடி பண்ண ரூம்ஸ்.” என்றாள் மீரா மற்றும் ஜெனியை பார்த்து .

“அது எதிரே இருக்குற ரூம்தான் உங்க மூணு பேரோடது. கவலை படாதீர் உள்ளே மூணுபேரும் தூங்க வசதியான பெட் இருக்கு. அதோட எல்லா வசதிகளும் இருக்கு.”என்றாள். அப்போது ராபர்ட் மெல்ல

“கூட நீங்களும் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்.”என்று முணுமுணுத்து கூற டிடானியா

“என்ன ஏதாவது சொன்னீங்களா?”என்று கேட்டாள்.

“அதுவந்து.. நீங்க …ஒன்னுமில்ல..”

“சரி சரி எல்லோரும் பிரஷ் ஆகிட்டு வாங்க பேசுவோம். கீழே வெயிட் பண்ணுறேன்.” என்று விட்டு அவள் போய்விட்டாள்.

“ஹே ஹே… எனக்கு ஒரு ஃபாரின் பொண்ணு கிடைச்சிட்டா… உனக்குத்தான் தான்ங்ஸ் ஜெனி” என்று ராபர்ட் குதித்தான்.

டேய் டேய் அடங்குடா… நாம உனக்கு பொண்ணு பாக்க வரல இங்கே. வந்த வேலைய கவனிப்போம்.

என்றான் ஆர்தர்.. அவரவர் பொருட்களாக எடுத்து கொண்டு வழங்கபட்ட அறைக்குள் சென்றனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“இதுதான் நீங்க சொன்ன இடம் சேர்…” “ஆஹ். ரொம்ப நன்றி ..”என்று அவனுக்குரிய பணத்தை கொடுத்து டாக்சியை அனுப்பி வைத்து விட்டு எல்லோரும் அந்த பிரம்மாண்டமான வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தனர். “மார்ட்டின் அங்கிளோட…

“இதுதான் நீங்க சொன்ன இடம் சேர்…” “ஆஹ். ரொம்ப நன்றி ..”என்று அவனுக்குரிய பணத்தை கொடுத்து டாக்சியை அனுப்பி வைத்து விட்டு எல்லோரும் அந்த பிரம்மாண்டமான வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தனர். “மார்ட்டின் அங்கிளோட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *