காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 23

  • 6

“அடுத்து என்ன பண்ணப்போறோம்?”என மீரா கேட்க ஜெனி தனது நோட் புக்கை எடுத்து வரைந்து கொண்டே பேச ஆரம்பித்தாள்.

காய்ஸ்.. நாம இங்க இருக்கப்போறது மூணே மூணு மாசம் தான். சோ எந்தளவுக்கு நம்ம வேலையை வேகமா செய்ய முடியுமோ அந்த அளவுக்கு வேகமா செயல் படனும்.. முதலில் இந்த மித்ரத் எங்க தங்கி இருக்கான்னு கண்டுபிடிக்கணும். அடுத்து அவன் கிட்ட இருக்குற மோதிரத்தை எடுக்கணும். எல்லாத்தையும் விட முக்கியமான ஒன்று என்கிடு பாடியை கண்டுபிடிக்கணும். அதுவும் அவனுக்கு முன்னரே..சோ இதெல்லாம் தான் மெயின் கோல்.

என்றாள்.

“ஓகே ஜெனி, அப்போ ப்ரொபெஸர் மித்ரத் இருக்குற இடத்துக்கு நாம போய்ட்டாலும் எப்படி ரிங்கை எடுக்கிறது?”என ராபர்ட் கேட்டான்.

“இதென்ன ஜுஜுபி மேட்டர்.. முகத்தை மூடிக்கு போய் கத்தியை காட்டி மிரட்டி கொடு என்னா கொடுத்திட போறான்..” என்றான் ஆர்தர் அசால்ட்டாக…

“அறிவுக்கொழுந்து….. அவன் யாருன்னு தெரியும் தானே.. அந்த ட்ரிக் எல்லாம் அவன் கிட்ட வேலைக்கு ஆகாது… தப்பித்தவறி நம்மள அவன் பார்த்துட்டா அவ்வளவு தான்…” என்றாள் மீரா.

“ஓஹோ… சோ என்ன பண்ணலாம்….”என யோசித்து கொண்டே ஆர்தர் கேட்டான்.

அப்போது கில்கமேஷ் , “நான் அவனை அடித்து உதைத்து மோதிரத்தை கொண்டுவருவேன்” என்றான்.

“நீயும் அவன் கண்ணுல படக்கூடாது… ஒருவேளை நீ யாருன்னு அவன் தெரிஞ்சி கூட இருக்கலாம். யார்க்கண்டது?”என்றாள் ஜெனி.

“அப்போ என்னதான் வழி??”என மீரா கேட்டாள்.அதற்கு ராபர்ட்

“ஐ. ஹேவ் அன் ஐடியா!…. உங்க மூணுபேரையும் மித்ரத்துக்கு ஆல்ரெடி தெரியும்… கேகேவை பற்றி அவனுக்கு தெரியுமா என்னு நமக்கு தெரியாது… ஆனா என்னை அவனுக்கு கண்டிப்பா தெரிஞ்சி இருக்காது… சோ…”

“சோ”

“நான் அவன்கிட்ட எப்படியாவது வேலைல ஜோய்ன் பண்ணி ஏதாவது பண்ண பாக்குறேன்..”

“நல்ல ஐடியா.. இருந்தாலும் நீ மட்டும் தனியா… ஏதும் ஆபத்து வந்தால்…”என்று ஜெனி இழுத்தாள்.

இட்ஸ் ஓகே… ஆபத்தை எல்லாம் பார்த்தா வேலைக்கு ஆகாது… எனக்கு இப்போதைக்கு ஒரே ஒரு குறிக்கோள் தான்… தி கிரேட் என்கிடுவ நான் உயிரோடு பாக்கணும்.

என்றான்.

“அப்போ டிடானியாவ கரெக்ட் பண்ணுறது??” என்று ஆர்தர் நக்கலாக கேட்க

“அது அது……”

“சரி சரி… அப்போ அந்த மேட்டரை ராபர்ட் பார்த்துக்க… நாங்க அவ்வளவு பேரும் அகழ்வாராய்ச்சி நடக்குற இடத்துக்கு போய் என்கிடு பாடியை எடுக்கிற வேலையை பார்ப்போம்.” என்றாள் ஜெனி.

“நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா?…”என்று கில்கமேஷ் கேட்டான்.

“ஓஹ்…ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணா போதும்… தயவுசெய்து சொதப்பிடாதே” என்றாள் ஜெனி.

எல்லோரும் சிரித்துக்கொண்டே திட்டமிட்டது போல் வெளியாகினார்கள். முதலில் ராபர்ட் மித்ரத் தங்கி இருக்கும் ஹோட்டல் நிலவரம் போன்றவற்றை இன்போர்மேசன் பாக்சில் இருந்து பெற்று கொண்டான். அந்த ஹோட்டலுக்கு சென்று அவன் வெளியே வரும் வரை காத்திருந்தான். அடித்தோடு ஒருவனுக்கு பணம் கொடுத்து,

“மித்ரத் வெளியே வந்ததும் நீ அவனை நோக்கி காரை வேகமா எடு… ஆனா அடிச்சிடாதே… ஓகே.” என்றான்.

சற்று நேரத்தில் மித்ரத் அவனுடைய ஆட்கள் இருவருடன் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவனது காருக்குள் ஏற முயற்சித்தான். அப்போது சொல்லி வைத்தாற்போல அந்த ஆள் வேண்டுமென்றே கார் பிரேக் பிடிக்காமல் ஓட்டுவது போல வேகமாக மித்ரத்தை நோக்கி காரை எடுத்து வர சரியான நேரத்தில் ஓடிவந்து மித்ரத்தை தள்ளி விட்டான் ராபர்ட். ராபர்ட்டுக்கு சிறிய அளவில் அடிபட்டு இருந்தது. அந்த கார் டிரைவர் எப்படியோ காரை நிறுத்தி விட்டு ,

“சரியாக பிரேக் பிடிக்கவில்லை மன்னிச்சிடுங்க.” என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

தன்னை காப்பாற்ற வந்து அடிபட்டு கிடந்த ராபர்ட் அருகில் வந்த அவன் அவனை தூக்கி நிறுத்திய போது ராபர்ட் அவன் விரல்களை நோட்டம் விட்டான்.

“வாட்.. இவன் கிட்ட அந்த மோதிரம் இல்லியே…”என்று மனதில் குழப்பத்துடன் நின்றான்.

“ரொம்ப நன்றி பையா… ஒஹ்ஹ் உனக்கு அடிபட்டு இருக்கே..உனக்கு ஏதாச்சும் பண்ணியே ஆகணும்… இந்தா இந்த பணத்தை வெச்சிக்க…” என்று பணத்தை எடுத்தான் மித்ரத்.

“வேணாம் சேர்… அப்படி எனக்கு ஏதாவது பண்ணனும் என்னு நினைச்சா… ஒரு வேலை போட்டு கொடுங்க”என்றான்.

“என்ன வேலையா???”

“ஆமா சேர் உங்களை சந்தித்து வேலை கேட்க தான் இங்கே வந்தேன்.. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு…”

“ஆமா என்ன வேலை தெரியும் உனக்கு….”

“நான் எல்லா வேல யும் பண்ணுவேன் சேர்….எதுவா இருந்தாலும் ஒகே..” என்றான்.

சற்று யோசித்த மித்ரத்…

நான் அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் நம்பமாட்டேன்.. ஆனா நீ இன்னிக்கு என்னோட உயிரை காப்பாற்றி இருக்கே… என்ன வேலை என்னாலும் செய்வேன் எங்குற.. இப்போதைக்கு எனக்கு ஒரு பேர்சனல் அஸிஸ்டண்ட் தான் தேவை… நான் இங்கே வந்த வேலைய முடிக்கும் வரை நீ தான் என்னோட பீ. ஏ… உனக்கு சம்மதமா?”

என்று கேட்டான்.

“சேர்….. தெய்வம் சேர் நீங்க….” என்று கும்பிட்டான்..

“சரி சரி நான் இப்போ சைட் பக்கம் போறேன்… நீ நாளைக்கு வந்தது என்னை ஆபிஸில் சந்திச்சி வேலையில ஜோய்ன் பண்ணிக்க.”என்றான்.

அதன் பிறகு மித்ரத் புறப்பட்டு விட்டான். வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடிந்து விட்டதால் உடனே ஜெனிக்கு போன் பண்ணி விடயத்தை சொன்னான்.

“வாவ்… ராபர்ட் நீ சூப்பர்… நாங்க இப்போதான் அகழ்வாராய்ச்சி நடக்குற இடத்துக்கு வந்து சேர்ந்தோம். நீ வீட்டுக்கு போ.. இங்க என்ன ஏதுன்னு பார்த்துட்டு வர்றோம்” என்றாள் ஜெனி..

“ஐயோ ஜெனி.. இப்போ அந்த மித்ரத் அங்கதான் வரான் போல தெரியுது.. நீங்க அவன் கண்ணுல பாடுடாதீங்க.”என்றான்.

“சரி சரி ஒகே ..நாங்க பார்த்துக்கிறம்.. டேக் கேயர்”என்று சொல்லி போனை கட் பண்ணினாள்.

மணி 7 ஆகிவிட்டது. இவர்களும் இடத்தை பார்த்து விட்டு அதோட ப்ளூ ப்ரிண்ட்டையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வந்தனர்.

********

அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகில்  ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்துக்கு மித்ரத் வந்து இருந்தான். அதே நேரத்தில் முகமூடி அணிந்து மர்ம நபர் ஒன்று அவர்கள் உள்ளே இருந்து பேசுவதை எல்லாம் ஒட்டுக்கேட்டு கொண்டிருந்தான்.

மீண்டும் வருவான்……

“அடுத்து என்ன பண்ணப்போறோம்?”என மீரா கேட்க ஜெனி தனது நோட் புக்கை எடுத்து வரைந்து கொண்டே பேச ஆரம்பித்தாள். காய்ஸ்.. நாம இங்க இருக்கப்போறது மூணே மூணு மாசம் தான். சோ எந்தளவுக்கு நம்ம…

“அடுத்து என்ன பண்ணப்போறோம்?”என மீரா கேட்க ஜெனி தனது நோட் புக்கை எடுத்து வரைந்து கொண்டே பேச ஆரம்பித்தாள். காய்ஸ்.. நாம இங்க இருக்கப்போறது மூணே மூணு மாசம் தான். சோ எந்தளவுக்கு நம்ம…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *