காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 28

  • 25

அன்று நாள் முழுக்க ரெண்டு மூணு ஃபயில்களை தூக்கிக்கொண்டு மித்ரத் பின்னாடியே சுற்றித்திரிந்தான் ராபர்ட்.

காலைல இருந்து இந்த பண்ணாட பின்னாடியே அலையறோம்… ஆனா மோதிரத்தை எங்க வெச்சிருப்பான்னு கெஸ் பண்ண முடியலியே…..ஒரு வேளை வீட்டுல வெச்சிருப்பானோ…. சே சே… அப்படியும் இருக்காது.. இல்லேன்னா ஹோட்டல்ல… என்னன்னு புரியமாட்டேங்குதே… இவன் வேற அடிக்கடி நம்மள வேலை வாங்கிட்டு போன் பேசுறான்.. சம்தின்ங் ராங்….

என தனக்குள் எண்ணிக்கொண்டான் ராபர்ட்

அப்போது மித்ரத்துக்கு ஒரு போன்கால் வந்தது.

“ஹலோ! ……. என்ன புது ஆளுங்களா?” என கேட்டான் மித்ரத்.

“ஆமா சேர் நல்லா வேலை செய்வாங்கன்னு தோணுது “என்றான் மறுபுறம் இருந்தவன்.

“சரி சரி.. நமக்கு வேலை முடியனும்… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கணும்..சரி வை” என்று போனை கட் செய்தவன் ராபர்ட் பக்கம் திரும்பி

“ஆராய்ச்சி பண்ணப்போறே ஆர்க்கியொலிஸ்ட் கூட ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணு”என்றான் .

“ஓகே சார்… சார் நேரம்…???”

“இன்னிக்கி நைட் 9.00 க்கு என்னோட கூடாரத்தில் ஏற்பாடு பண்ணு”என்றான்.

“சரி சேர்.. நீங்க சொன்னமாதிரியே பண்ணிர்றேன்…”என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது கழுகு டாட்டோ போட்ட மற்ற நபர்கள் அங்கு வந்தனர்.. அவர்கள் கூடி ஏதோ பேசப்போவது போல் தெரிந்தது.. அது என்னவென்று கேட்க மித்ரத் பின்னாடியே சென்றான் ராபர்ட். வந்தவர்கள் ராபார்ட்டை முறைக்கவே. .மித்ரத் திரும்பி.

“நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நான் பேசிட்டு வர்றேன்.” என்று விட்டு அவர்களுடன் சென்றான்..

“ஸிட்… இப்படி  வரவேண்டாம் என்னு சொல்லிட்டு போய்ட்டானே.. இப்போ என்ன செய்வது…”என்று யோசித்தவன் சட்டென ஐடியா வந்து அவன் ஆபிஸ் அறைக்குள் சென்றான்.

*********

“மேடம் தயவு பண்ணி எங்க ரிக்குவஸ்டை ஏத்துகொங்க… நீங்க யெஸ் என்னு சொல்லப்போறே ஒரே ஒரு வார்த்தையில தான் எங்க ட்ரைனிங் சக்ஸஸ் ஆக்கப்போகுது…” என்று ஆராய்ச்சி குழுவில் உள்ள ஒரு பெண் ஆர்க்கியொலிஸ்ட் கிட்ட ஜெனி கெஞ்சி கேட்டு கொண்டிருந்தாள்.

“இத பாருங்க மா… இது ரொம்ப காம்ப்ளிகேட் ஆன விஷயம்… இதுக்கு ஸ்பான்சர் பண்ணுறவர் அனுமதிக்காமல் யாரையும் நாங்க வேர்க்கில் சேர்த்துக்க மாட்டோம்..”என்றார்.

“அப்படி சொல்லாதீங்க மேடம்… ரெண்டு மாசம் ட்ரைனிங் இல்லாம எங்களுக்கு ஜாப் அப்ளை பண்ண முடியாது… அதோட நாங்க இதுக்காக இத்தாலியில் இருந்து வந்திருக்கோம்.” என்றாள் மீரா .

சற்று யோசித்த அவர்

“சரி நீங்க இவ்வளவு கேக்குறதால… நான் இதை பத்தி சீஃப் கிட்ட சொல்லுறேன்… இன்னிக்கி நாங்க வேலையை ஆரம்பிக்க இருப்பதால் உங்க நம்பரை கொடுத்துட்டு போங்க… நான் அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு இன்போர்ம் பண்ணுறேன்.”என்றார்.

“ரொம்ப தாங்ஸ் மேம்…நாங்க வர்றோம்…” என்றுவிட்டு இருவரும் அங்கிருந்து வெளியேறினர்.

அடுத்ததாக வரும் வழியில் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிக்கொண்டும் வந்தனர்.

“என்னடி நம்ம ஆளுங்க இதுவரைக்கும் ஒரு போன் கூட பண்ணல..” என்று மீரா கேட்டாள்.

“என்னது.. நம்ம ஆளுங்களா” என்று கொஞ்சம் கடிந்து கொண்டே கேட்டாள்..

“அது… அதானே உண்மை.. நமக்காக வேலை செய்றவங்க நம்ம ஆளுங்க தானே…” என்று கூறி கண்ணடித்தாள்.

“ஓஹ்..நீ அந்த அர்த்தத்தில் சொன்னியா…”

“மேடம் எந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டீர்கள்???” என்று மறுபடியும் சீண்டினாள்.

“ச்சை..இவள் வேற  “.

அப்போது கொஞ்ச தூரத்தில் டிடானியா யாரோ பைக்கில் ஹெல்மெட் போட்டு  வந்த பையனோட பேசிக்கொண்டிருந்தாள்.

அவன் ஏதோ கொடுக்க அதை வாங்கி பையில் போட்டு கொண்டவள். அவனுக்கு கை கொடுத்து அனுப்பி வைத்தாள்.

“ஹே… அது டிடானியா தானே..”

“ஆமாண்டி.. ஆனா இந்த நேரத்தில் இவளுக்கு என்ன வேலை.. “

என சந்தேகத்தோடு ஜெனி கேட்டாள்

“இந்நேரம் காலேஜ் முடிஞ்சி வீட்டுக்கு வர்ர நேரம் தானே.. யாராச்சும் பாய் பிரண்டா இருக்கும். வாவேன் அவளோடயே வீட்டுக்கு போயிடலாம்..” என்றாள் மீரா…

“இல்லே வேணாம்… அப்பறம் நாம எங்க வந்தோம்  என்ன வாங்கிஇருக்கோம் என்னு ஆராய ஆரம்பிச்சிடுவாள். அவளுக்கு முன்னாடியே வீட்டுக்கு போய்டுவோம் வா” என்று கையை பிடித்து இழுத்து கொண்டே ஜெனி நடந்தாள்.

ஜெனி வீட்டுக்கு செல்லும் போது அங்கு லூதர் அங்கிள் மட்டுமே இருந்தார்.

“ஹாய் அங்கிள்… இன்னிக்கி வீட்டில் இருக்கீங்க போல இருக்கு”என்று ஜெனி கேட்டாள்.

“ஆமா மா… இன்னிக்கி வெர்க் எல்லாம் சீக்கிரமே முடிஞ்சது… அதான்… எங்க உன்னோட பிரெண்ட்ஸ் யாரையும் காணும்??”

“அவங்க எல்லோருக்கும் ஆளுக்கொரு வேலை கொடுத்து இருக்கேன்.. வரலேட்டாகும்.” என்றாள்..

“எல்லாரும் வந்ததும் எனக்கு சொல்லு.. உங்க எல்லோர் கிட்டேயும் முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்” என்று விட்டு அவரது அறைக்கு சென்றார்.

இவர் என்ன சொல்லப்போகிறார்??? என புரியாது இவர்களும் அவர்களின் அறைக்கு சென்றனர். சற்று நேரத்தில் டிடானியா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். ஆனால் மாலை 6 மணி ஆகியும் ஆர்தரும் கில்கமேஷ்ஷும் வரவே இல்லை…

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அன்று நாள் முழுக்க ரெண்டு மூணு ஃபயில்களை தூக்கிக்கொண்டு மித்ரத் பின்னாடியே சுற்றித்திரிந்தான் ராபர்ட். காலைல இருந்து இந்த பண்ணாட பின்னாடியே அலையறோம்… ஆனா மோதிரத்தை எங்க வெச்சிருப்பான்னு கெஸ் பண்ண முடியலியே…..ஒரு வேளை…

அன்று நாள் முழுக்க ரெண்டு மூணு ஃபயில்களை தூக்கிக்கொண்டு மித்ரத் பின்னாடியே சுற்றித்திரிந்தான் ராபர்ட். காலைல இருந்து இந்த பண்ணாட பின்னாடியே அலையறோம்… ஆனா மோதிரத்தை எங்க வெச்சிருப்பான்னு கெஸ் பண்ண முடியலியே…..ஒரு வேளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *