காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 29

  • 84

“இப்போதான் ராபர்ட் போன் பண்ணி இருந்தான்.. அவன் வர லேட் ஆகுமாம்… ஏதோ மித்ரத் மீட்டிங் போட சொன்னானாம்..”என்றாள் மீரா

“ஒஹ்ஹ்.  ஆனா என்ன இவ்வளவு நேரமாகியும் அவங்க ரெண்டு பேரையும் காணும். ஒரு போன் கூட பண்ணல .அவங்களுக்கு ஏதும் ஆபத்து வந்திருக்குமோ?”என்று ஜெனி பதறினாள்.

“சும்மா இருடி… நானே டென்ஷன்ல இருக்கேன். ஆர்தர் வரல என்னு சொல்லி..” என நகங்களை வேகமாக கடித்து கொண்டே சொன்னாள். அப்போது அவர்களின் அறைக்கு டிடானியா வந்தாள்.

“ஹாய்… என்ன பண்ணுறீங்க…”என்று துள்ளிக்கொண்டே வந்தாள்.

திடீரென கதவை தட்டாமல் அவள் உள்ளே நுழைந்ததும் அவர்களுக்கும் பக் என்றது.

“ஒஹ்ஹ். நீதானா.. வா…. காலேஜ் எல்லாம் எப்டி போச்சு.. இன்னிக்கி ?”என கேட்டாள் மீரா.

“ஹா..இன்னிக்கி செம்ம ஜாலி…நானும் என்னோட பிரென்ட்டும் கிளாஸ் கட் அடிச்சிட்டு படம் பார்க்க போனோம்.. சூப்பர் படம்…”என்று அளந்தாள்.

ஏனோ ஜெனிக்கு இவள் பொய் சொல்வது போலவே இருந்தது.

“வெறும் பிரென்ட் மட்டும் தானா.. இல்ல  யாராச்சும் பாய் பிரெண்டா..” என்று இழுத்தாள் மீரா.

“என்னது… பாய் பிரெண்டா.. அப்படியெல்லாம் நமக்கு யாரும் இன்னும் செட் ஆகலை..”என்று சொல்ல மீரா அவசரப்பட்டு

“அப்படின்னா இன்னிக்கி…”என்று ஏதோ சொல்லவர அவளின் கையை பிடித்து அழுத்தினாள் ஜெனி.

“என்ன ஏதோ சொல்ல வந்தீங்க…..”

“அது ஒன்னும் இல்ல.. இன்னிக்கு நீ நல்லா ஜாலியாக இருந்தேல்லே.. அதே தான் அவளும் சொன்னாள்..

“ஒஹ்ஹ் அப்படியா? அப்படியே ஒரு ஆளை செட் பண்ணனும் எண்டா.. உங்க பிரென்ட்.. அதான் பாடி பில்டர் கேகேவை தான் செட் பண்ணனும்…”என்றாள் சிரித்து கொண்டே …

அதை கேட்டு ஜெனி சூடாக….அதை மீராவும் கவனிக்க தவறவில்லை. அதன்பின்னர் டிடானியா அங்கிருந்து சென்றுவிட்டாள்.ஜெனி மீராவை பார்த்து

“என்னடி  ஒளர பார்த்தே அவகிட்ட..”என்று கேட்டாள்.

“நான் ஒளறது எல்லாம் இருக்கட்டும்.. அவ ஏதோ கில்கமேஷை செட் பண்ணபோரன் என்கிறதும் அதுக்கு உன்னோட மூஞ்சி சொர்ருன்னு சூடாகுறதும் என்னடி இதெல்லாம்… நீ என்ன அவனை லவ் பண்ணுரியா?”என்று அக்குப்பிசகு இல்லாமல் அப்படியே கேட்டாள் மீரா. அவள் கேட்ட உடனே ஜெனி முகம் வெட்கத்தில் சிவந்து போக.. ஏதேதோ வாய்குளரி

” அப்படியெல்லாம் ஒன்றுமில்லை “என்று சமாளிக்க பார்த்தாள். ஆனால் மீரா விடுவதாக இல்லை…

“அடியே லூசு.. நீ இப்படியே தயங்கி தயங்கி நில்லு. அவனை லவ் பண்ணினா அவன் கிட்ட சொல்லி தொலையேண்டி. அப்பறம் இந்த டிடானியா மாதிரி யாராவது வந்து அவனை கொத்திக்கிட்டு போய்டுவாங்க. யாராவது என்ன அவளே கொத்திக்கிட்டு போனாலும் போய்டுவாள்… அப்பறம் கவலைப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லே சொல்லிட்டேன்.”என்றாள்.

“ஐயையோ அப்படியெல்லாம் சொல்லாதே… டி எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு.”

ஜெனி யோசிக்க ஆரம்பித்தாள்..

அது.. அது அவனை எனக்கு பிடிச்சி இருக்கு தான் .ஆனா அவனுக்கு என்னை பிடிச்சிருக்கு என்னு எனக்கு தெரியாத போது எப்படி டி நான் என்னோட லவ்வ சொல்லுறது….

என தயக்கத்துடன் சொன்னாள்.

“அப்பாடா.. என்கிட்டயாவது சொன்னியே… அவனும் உன்னை விரும்புறான் டி… அவனோட நடவடிக்கைகளை பார்த்தால் அப்படித்தான் தெரியுது..”என்றாள் மீரா.

இல்லடி.. கில்கமேஷ் பத்தி நான் நிறைய படிச்சி இருக்கேன்.. அவனுக்கு இந்த காதல் கல்யாணத்தில் எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்லடி… அதோட பாரு அவன் என்னை தொடக்கூட விரும்பல்ல.. அவனுக்கு என் மேல காதலே இல்ல  என்னு தான் எனக்கு தோணுது

என்றாள்.

“என்னது தொட பிடிக்கலியா… அதான் நேத்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தேனே ஐயாவோட கட்டிப்பிடி வைத்தியத்தை…”என்றதும் மீண்டும் வெட்கத்தில் முகம் சிவந்து போனாள் ஜெனி.

“லூசு மாதிரி சும்மா சம்பந்தம் இல்லாம எது எதையோ  முடிச்சி போடாம தைரியமா சொல்லிடு…”என்றாள் மீரா .

“அப்போ சொல்லிடலாம் என்கிறாயா….”என்று இழுத்த ஜெனி ஏதோ முடிவெடுத்து கொண்டாள்.

அந்த நேரத்தில் கீழே ஆர்தர் மற்றும் கில்கமேஷ் பேசும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு சந்தோஷத்தில் மீரா கீழே ஓட ஜெனி நெஞ்சில் கைவைத்து யோசித்து கொண்டே இருந்தாள்.”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“இப்போதான் ராபர்ட் போன் பண்ணி இருந்தான்.. அவன் வர லேட் ஆகுமாம்… ஏதோ மித்ரத் மீட்டிங் போட சொன்னானாம்..”என்றாள் மீரா “ஒஹ்ஹ்.  ஆனா என்ன இவ்வளவு நேரமாகியும் அவங்க ரெண்டு பேரையும் காணும். ஒரு…

“இப்போதான் ராபர்ட் போன் பண்ணி இருந்தான்.. அவன் வர லேட் ஆகுமாம்… ஏதோ மித்ரத் மீட்டிங் போட சொன்னானாம்..”என்றாள் மீரா “ஒஹ்ஹ்.  ஆனா என்ன இவ்வளவு நேரமாகியும் அவங்க ரெண்டு பேரையும் காணும். ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *