காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 30

துள்ளிக்கொண்டு ஓடிப்போன  மீரா இருவரும் வந்திருந்த தோற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். டிடானியாவோ லூதர் அங்கிளோ பார்க்க முன்னாடியே என்ன ஏதுன்னு கேட்காமலே இருவரையும் தள்ளிக்கொண்டு மாடிக்கு சென்றாள். ஜெனி அறைக்குள் அவர்களை தள்ளிவிட்டு அவளும் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டாள். அவர்களை பார்த்த ஜெனி ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தாலும் சட்டென சிரித்து விட்டாள்…

“ஆமா என்னது இது…. ரெண்டுபேரும் சர்கஸில் இருந்து தப்பிச்சி வந்த ஜோக்கர் போல இருக்குறீங்க..” என்று கேட்டாள்.

“என்னடா ஆச்சு….. சொல்லிதொலைங்களேன்”என்று மீராவும் விடாது கேட்டாள்.

“அதை ஏன் கேக்குறே… நம்ம பிளான் படியே அங்க வேலை செய்ய எங்களுக்கு அனுமதி கிடைச்சிட்டு… ஆனா இவ்வளவு சீக்கிரமா கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை..” என்றான் ஆர்தர்.

“என்ன?”

“போன உடனே எங்க ரெண்டுபேரு கிட்டயும் கொஞ்சம் விசாரிச்சிட்டு. உடனே அந்த மேனஜர் ஆளுக்கொரு மண்வெட்டிய தந்து… வேலை சேய்ய சொல்லிட்டான்.”என்று ஆர்தர் சொன்னான். அப்பறம் கில்கமேஷ்ஷை பார்த்து

“எனக்கு கூட பரவால்ல மீரா.. நம்ம காலேஜில் செய்யாத சிரமதானமா… அப்படி என்று நினைச்சு கிட்டு வேலையை செய்தேன்… ஆனா பாவம் நம்ம கிங்… இப்படியான வேலை எல்லாம் அவருக்கு பழக்கமே இல்லையே.. எவ்வளவு பெரிய பலசாலியா இருந்தாலும் புதுசா ஒரு வேலையை செய்யும் போது ஏற்படும் களைப்பை எல்லாம் சமாளிக்க முடியவில்லை.”என்றான்.

அதை கேட்டு ஜெனியும் மீராவும் வருத்தப்பட்டனர். ஆனால் கில்கமேஷ்

“நீ  அப்படியெல்லாம் நினைக்காதே ஆர்தர்… என்னோட நண்பனை மீட்கப்போற இந்த வேலையை நான் சந்தோசமா செய்வேன். எனக்கு இதெல்லாம் பரவாயில்லை “என்றான்.

ஆனா ஒரு சிக்கல் இருக்கு.. நாம வந்திருக்கிறது டூரிஸ்ட் விசா… அதுல வர்றவங்க வெர்க் பண்ண முடியாது.. போலீசுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்… அதனால கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்… நம்ம பிளான் எதுவும் இங்க இருக்குற யாருக்கும் தெரியக்கூடாது.

என்றாள் ஜெனி.

“சரி ரெண்டுபேரும் ரெடி ஆகிட்டு வாங்க லூதர் அங்கிள் ஏதோ பேசணும் என்றார்.”என்று சொன்ன மீரா அவர்களை அனுப்பிவிட்டு ஜெனி பக்கமாக திரும்பி

“இருந்தாலும் உங்க ஆளு பொறுப்பாக தான் இருக்குறாருடி..” என்று சீண்டினாள்.

மாலை 6:30 மணிக்கு அவர்கள் எல்லோருமே ஹாலுக்கு வந்து சேர்ந்தனர் .அங்கிள் சொன்னது போல ஜெனி அவரை அழைத்து வந்தாள். கூடவே டிடானியாவும் வந்தாள். எல்லோரும் ஹாலில் ஒன்று கூடியதும் அங்கு ராபர்ட் மட்டும் இல்லை என்பதை உணர்ந்த  டிடானியா,

“ஆர்த்தரை காணும்… அவனை மட்டும் பார்க்கவே முடிவதில்லையே.. எங்க போய் இருக்கான்?”என்று கேட்டாள்.

“அது வந்து .ப்ரொஜெக்ட் விஷயமா ப்ரொபெஸர் ஒருத்தரை பார்க்க போய் இருக்கான்… வர கொஞ்சம் லேட் ஆகும்..”என்றாள் ஜெனி.

“அங்கிள் எங்க கிட்ட ஏதோ சொல்லணும். என்று சொன்னீங்களே?” என மீரா கேட்க அவரும் பேச ஆரம்பித்தார்.

“என்னோட கம்பனியோட 25 வருட அணிவெர்சரி இன்றைக்கு..”என்று சொன்னார்.

“வாவ் கன்கிராட்ஸ் அங்கிள்… அதான் நைட் 9:00 க்கு ஒரு பார்ட்டி அரேஞ் பண்ணி இருக்கேன்.. நீங்க எல்லோரும் கண்டிப்பா கலந்து கொள்ளனும்… ராபர்ட்டுக்கும் போன் பண்ணி மேவிஸ் மஹாலுக்கு வர சொல்லிடுங்க..

அதை கேட்டு டிடானியா,

“என்னப்பா… 9:00 க்கா… இல்லை பா.. எனக்கு முக்கியமான வேலை இருக்கு… நான் வரல” என்றாள் டிடானியா.

“என்னம்மா இப்படி சொல்றே.. இது நம்ம நடத்தபோற பார்ட்டி… உன் பிரன்ட்ஸையும் இன்வைட் பண்ணு.. அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு..” என்று கேட்டார். இதே கேள்வி ஜெனி மற்றும் நண்பர்களுக்கும் ஏற்பட்டது.

“காலேஜில் நாளைக்கு சப்மிட் பண்ண வேண்டிய அசைன்மெண்ட் பா…” என்றாள். அப்போது ஜெனி குறுக்கிட்டு.

“பரவாயில்லை டிடானியா. பார்ட்டி முடிஞ்சதும் அதை செய்ய நாங்க உனக்கு உதவுறோம்… நீ கண்டிப்பா பார்ட்டியில் கலந்து கொள்ரே!”என்றாள்.

“அதான் ஜெனியே சொல்லிட்டாளே… உனக்கு ஹெல்ப் பண்ணுறதா… இனி என்ன யோசனை.. போங்க போய் எல்லோரும் தயார் ஆகுங்க… மேவிஸ் மஹாலுக்கு போறதுக்கு.” என்று விட்டு லூதர் சென்றுவிட்டார்.

டிடானியா முகத்தில் மட்டும் சந்தோஷத்தை காணவில்லை. ஏதோ அவள் நினைத்ததை ஜெனி தடுத்து விட்டது போல் அவளை ஒரு கோபப்பார்வை வீசியபடியே அவள் அறைக்கு சென்றாள்.

********************

ராபர்ட் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டிருந்தான். ஆர்க்கியொலிஸ்ட் எல்லோரின் தொலைபேசி இலக்கங்களையும் பெற்று 9:00க்கு நடக்கப்போகும் மீட்டிங் பற்றி கூறிக்கொண்டிருந்தான். இதற்கு முன்னர் மித்ரத் அறைமுழுக்க சல்லடை போட்டு தேடியும் அந்த மோதிரம் கிடைக்காத டென்ஷன் வேறு…

“சே.. இந்நேரம் வீட்டில் இருந்தா டிடானியாவ கரெக்ட் பண்ணுறே வேலையை ஆச்சும் கரெக்ட்டா பண்ணி இருக்கலாம்… என்ன பண்ணுறது…” என்று யோசித்து கொண்டிருக்கும் போதே ஜெனி போன் பண்ணி விஷயத்தை சொல்ல அவனும் வருவதாக கூறிவிட்டு ஆபிஸ் அறையில் மோதிரம் இல்லை என்ற விடயத்தையும் அவளுக்கு கூறினான்.

“சரி பத்திரமா வந்து சேரு..” என்று விட்டு போனை கட் பண்ணவும் ஆபீஸ் அறையை திறந்து கொண்டு மித்ரத் உள்ளே வரவும் சரியாக இருந்தது…

“சேர்!!!”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

52 Replies to “காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 30”

 1. Pingback: blogery_i_dorogi
 2. Pingback: bender na4alo 2021
 3. Pingback: podolsk-region.ru
 4. Pingback: chelovek-iz-90-h
 5. Pingback: top
 6. Pingback: site
 7. Pingback: Ukrainskie-serialy
 8. Pingback: video
 9. Pingback: topvideos
 10. Pingback: kinoteatrzarya.ru
 11. Pingback: projectio-freid
 12. Pingback: psy2022
 13. Pingback: psy
 14. Pingback: news news news
 15. Pingback: 4569987
 16. Pingback: link
 17. Pingback: 777
 18. Pingback: D4
 19. Pingback: 2021
 20. Pingback: 00-tv.com
 21. Pingback: The Revenant
 22. Pingback: 666
 23. Pingback: img1
 24. Pingback: img

Leave a Reply

Your email address will not be published.