மீண்டும் ஒரு அனுபவம்

  • 8

முதல் நாள்பள்ளிக் குழந்தையாய்
உணர்கிறது மனது
நான் முதல் நாள்
ஆசிரியை என்பதை மறந்து

அந்த மணி ஓசையும்
ரீங்காரமிடும் பிள்ளைகளின்
முடியாத பேச்சுக்களும்
இன்னும் மாறாது தொடர்கிறது
என் காலத்திலும்

குழந்தைகள் எழுந்து நின்று
என்னை வரவேற்ற பின்
தான் உணர்ந்தேன்
இந்த வகுப்பறையின்
ஆசிரியை நான் என்பதை
அதுவரை நானும் ஓர்
பள்ளி மாணவிதான் மனதளவில்

கவிதைகள் எழுதிய கரும்பலகை
வெண்கட்டி பேனாக்கள்
நொடிக்கொரு முறை தண்ணீர்
இடைவேளை இன்பம்
இவற்றை எல்லாம்
மீண்டும் தந்த
என் முதல் பள்ளி நாளுக்கு
என்ன வரம் பெற்றேனோ

Yumna manha
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

முதல் நாள்பள்ளிக் குழந்தையாய் உணர்கிறது மனது நான் முதல் நாள் ஆசிரியை என்பதை மறந்து அந்த மணி ஓசையும் ரீங்காரமிடும் பிள்ளைகளின் முடியாத பேச்சுக்களும் இன்னும் மாறாது தொடர்கிறது என் காலத்திலும் குழந்தைகள் எழுந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *