காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 31

  • 62

ராபர்ட்டுக்கு நெஞ்சு திக் திக் என்று அடித்து கொண்டது.

“ஒருவேளை நாம ஜெனியோட பேசினது இவன் காதில் விழுந்து இருக்குமோ?”என்று பயந்தபடியே எழுந்து நின்றான்.

“சேர்!…”

“நான் சொன்ன வேலையை முடிச்சிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்து ஏதோ ஒரு ஃபயிலை கையில் எடுத்தான்.

“அப்பாடா… இவன் எதையும் கேக்கல்ல போல இருக்கு!” என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன் .

“ஆஹ் சேர் எல்லோருக்கும் ஃபோன் பண்ணி சொல்லிட்டேன். கரெக்ட்டா 9.00 க்கு எல்லாம் நம்ம சைட்ல இருக்குற உங்க இடத்துக்கு எல்லோரும் வந்துடுவாங்க.”என்றான்.

“சரி சரி கிளம்பு.. என்னோட வண்டிய நீதான் ஓட்டனும்.” என்றான் மித்ரத்.

“என்ன வண்டி ஓட்டனுமா?”என்று அதிர்ச்சியோட கேட்ட ராபர்ட்டிடம்

“ஏன் ஓட்டமாட்டியா?” என்று அதிகாரமாக கேட்டான்.

“அப்படி இல்லை சேர்.. அதெல்லாம் ஒன்றுமில்லை. நம்ம கூடாரம் தான் இங்க பக்கத்திலேயே இருக்கே.. எதுக்கு வண்டி என்னு யோசிச்சேன்.”என்றான்.

“ஒஹ்ஹ். ஹோட்டல் வரைக்கும் கொஞ்சம் போகணும் அதுக்குத்தான் “என்று மித்ரத் சொல்ல ,

” சரி வாங்க நானே வண்டி ஓட்டுறேன்.” என்று கூறி மித்ரத் பின்னாடியே நடந்தான் ராபர்ட்.

“கடைசில நம்மள ட்ரைவர் ஆக்கிட்டானே!!”என்று முணுமுணுத்து கொண்டே மித்ரத்தை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு சென்றான். அவனை காரில் இருக்க சொல்லி விட்டு மித்ரத் உள்ளே சென்றான். ஹோட்டலை பார்த்ததும் தான் அவனுக்கு இன்னொரு யோசனை பிறந்தது.

“ஆபிஸ் ரூமில் தான் அந்த மோதிரம் இல்ல.. அப்படி என்றால் நிச்சயமாக இங்க தான் இருக்கணும்…. எப்படியாவது ஹோட்டலுக்குள்ள போய்ட்டா அதை எடுக்க முடியும்.” என்று யோசித்து கொண்டிருக்கும் போதே மித்ரத் காரில் ஏறிவிட்டான்.

“சிட் .”

“சரி,இப்போ சைட் பக்கம் போ..” என்று சொல்ல அவனும் ஓட்டினான்.

****************

பார்ட்டிக்கு செல்வதற்காக எல்லோரும் தயாராக இருந்தனர். அவர்கள் அணிந்து கொள்வதற்காக விலை உயர்ந்த ஆடைகளை, அணிகலன்களை எல்லாம் லூதர் அங்கிளின் பணியாட்கள் கொண்டு வந்து கொடுத்திருந்தனர். எல்லோரும் பார்ப்பதற்கு அட்டகாசமான தோற்றத்தில் காட்சி அளித்தனர். ஏனோ தானோ என்று டிடானியாவும்  தயாராகி கொண்டு கீழே வந்தாள். வெளியில் வாகனம் தயார் நிலையில் இருக்க ஜெனி மட்டும் இன்னும் வரவே இல்லை.

“இவள் எப்பவுமே இப்படித்தான்…. ஜெனி… சீக்கிரம் வா!” என்று கீழே நின்று கொண்டு மீரா அழைக்க சற்று நிமிடத்தில் ஜெனி கீழே இறங்கி வந்தாள்.

வெள்ளை மற்றும் பிங்க் கலரில் அவள் அணிந்திருந்த ஆடையில் வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் காட்சி அளித்தாள். அவ்வளவு தான் கொஞ்ச நேரம் கில்கமேஷ் முகத்தில் ஈ ஆடவில்லை. இமைக்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான். அதை கண்டுகொண்ட ஜெனிக்கு வெட்கத்தில் முகம் சிவந்து விட்டது. அதன் பின்னர் அவர்கள் எல்லோரும் மேவிஸ் மஹாலுக்கு வேனில் சென்றனர். போகும் வழி எங்கும் டிடானியா ஒரு வார்த்தை கூட பேசாமல் உம்மென்று மூஞ்சியை வைத்து கொண்டே வந்தாள்.

“மீரா.. இந்த ட்ரெஸ்ஸில் நீ செம்மயா இருக்கே.” என்று அவளை வருகிற வழியெல்லாம் வர்ணித்து கொண்டே வந்தான் ஆர்தர்..

இது ஒரு வகையில் ராபர்ட் கொடுத்த ஐடியா தான்.

டேய் பொண்ணுங்கள எப்பவுமே புகழ்ந்து கிட்டே இருக்கணும்.. அதுதான் அவங்களுக்கு பிடிக்கும்… அதனால என்ன சின்ன சின்ன விஷயம் என்றாலும் மீராவை அவ சந்தோசபர்ரமாதிரி ஏதாச்சும் சொல்லிகிட்டே இரு..

என்று முந்தைய நாள் இரவு ராபர்ட் சொன்னதை மனதில் எண்ணிக்கொண்டே ஆர்தர் மீராவை புகழ்ந்தான். ஒருவாறாக அது வெற்றி அளித்து விட்டது என்றே சொல்லலாம்.

“நிஜமாகவே நான் அழகா இருக்கேனா…” என்று வெட்கத்தோடு அவன் கையை இறுக்கமாக பிடித்து கொண்டாள். அவனுக்கும் கிளு கிளுவென்றிருந்தது.

கில்கமேஷ்ஷிற்கு அதை சொல்லிவிட வேண்டுமென்று மனது துள்ளியது.. தைரியத்தை வரவழைத்து கொண்டு

“ஜெனி!”

“ஆஹ்..”

“நீ.நீ..” என்று தயங்கியவன்.

“நீ .. உனக்கு இந்த ட்ரெஸ் ரொம்ப அழகா இருக்கு.” என்று எப்படியோ சொல்லி முடித்தான்.

“தாங்ஸ்” என்று அவளும் வெட்கத்தோடு சொல்லி முடித்தாள்.

அவனும் பார்க்க பக்காவாக பார்ப்பவரை மயக்கும் ஆணாழகனாக தான்தோற்றமளித்தான். ஆனால் எப்போதும் அவனை புகழ்ந்து கொண்டும் அவனை ஜொள்ளு விட்டுக்கொண்டும் இருக்கிற டிடானியா இன்று அமைதியாக இருந்தது ஜெனிக்கு ஆச்சரியத்தையும் அதே நேரத்தில் சந்தேகத்தையும் உண்டு பண்ணியது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சேந்தனர்.

****************

மித்ரத் அவனுடய நண்பர்கள் மற்றும் ஆர்க்கியொலிஸ்ட்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரானான். அதே நேரத்தில் ராபர்ட்டை வெளியில் இருக்கும் படியும் பணித்தான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ராபர்ட்டுக்கு நெஞ்சு திக் திக் என்று அடித்து கொண்டது. “ஒருவேளை நாம ஜெனியோட பேசினது இவன் காதில் விழுந்து இருக்குமோ?”என்று பயந்தபடியே எழுந்து நின்றான். “சேர்!…” “நான் சொன்ன வேலையை முடிச்சிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே…

ராபர்ட்டுக்கு நெஞ்சு திக் திக் என்று அடித்து கொண்டது. “ஒருவேளை நாம ஜெனியோட பேசினது இவன் காதில் விழுந்து இருக்குமோ?”என்று பயந்தபடியே எழுந்து நின்றான். “சேர்!…” “நான் சொன்ன வேலையை முடிச்சிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே…

13 thoughts on “காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 31

  1. Hey There. I found your blog the use of msn. This is a really well written article. I will make sure to bookmark it and come back to read more of your helpful info. Thank you for the post. I will certainly return.

  2. The very crux of your writing while sounding reasonable originally, did not settle properly with me personally after some time. Somewhere within the sentences you managed to make me a believer but only for a while. I still have got a problem with your leaps in logic and you might do well to help fill in those gaps. When you actually can accomplish that, I will surely end up being amazed.

  3. My husband and i felt excited when Jordan could carry out his basic research by way of the ideas he obtained from your own web pages. It’s not at all simplistic to just happen to be freely giving tips and tricks that some people have been selling. We really understand we have got you to be grateful to because of that. The main explanations you’ve made, the simple web site menu, the relationships you assist to engender – it’s everything astounding, and it’s helping our son in addition to us do think this matter is interesting, which is exceptionally important. Many thanks for the whole lot!

  4. FitSpresso is a natural weight loss supplement that will help you maintain healthy body weight without having to deprive your body of your favorite food or take up exhausting workout routines.

  5. I’m not sure where you are getting your info, but good topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for great information I was looking for this information for my mission.

  6. What Is Sugar Defender? Sugar Defender is a natural blood sugar support formula created by Tom Green. It is based on scientific breakthroughs and clinical studies.

  7. What is Boostaro? Boostaro revolutionizes romantic performance enhancement through its reliance on the wisdom of natural ingredients

  8. As I site possessor I believe the content material here is rattling excellent , appreciate it for your efforts. You should keep it up forever! Good Luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *