பணப்பந்தலில் திருமணம்…

  • 25

சீதனம் என்ற சொல்லிலே
“சீ”… எனக்கூறி
சீற்றமாய் சுறண்டுகின்றனர்
பெண் வீட்டாரின் சொத்தை

பதவிக்கு பத்தும்
படிப்புக்கு பத்தும்
பரம்மரைக்கு பத்தும்
தன் தோற்றத்திற்கு பத்துமாய்
இலட்சத்தில் மதிப்பு போட்டு
தம்மை மாப்பிள்ளை எனும்
பெயரில் விற்கின்றனர்
தனக்கு சொந்தமானவளுக்கு

சீர் கெட்ட
சீதன சொத்தில்
ஆடம்பர திருமணம்
அரங்கேறுகின்றன – அது
ஊமைக் கண்ணீர் துளிகள்
மறைக்கப்ட்டு
திருமணம் எனும் பெயரில்
அரங்கேற்றப்படும் நடகமாகும்

மஹர் கொடுத்து
மணமகள் பெற்றவன்
மனங்களில் இடம்
பிடிக்க பட வேண்டியவனே!!!
சீதனம் பெற்று
சீர்வரிசை சரியாக செய்தாலும்
அவன் தூற்றப்பட வேண்டியவனே!!!

விதியில் எழுதிய
விழாக்கோல வாழ்க்கை
வியாபாரத்தில் முடிகிறது
சீதன திருமணத்தால்

பொன்னை பூவாக
சொரிந்து,
வீட்டை வானுயர கட்டி,
பணத்தால் பந்தல் இட்டு,
மாப்பிள்ளை வீட்டாரை கவர்ந்து
பதவியுள்ளவனை வரனாக பெற
பணம் படைத்தோர்
பட்டன முந்திக்கொள்கின்றனர்

பக்குவப்பட்ட பெண்ணாக இருப்பினும்
பத்துகாசு இல்லாவிட்டால்
வரன் பெறுவது கடினமே என்ற
நிலை ஏழைகளுக்கு தலைவிதியாவிட்டது

சீதனத்தில் சீரழிவுகள் ஏராளம்
இதை ஒழிப்பது எப்போது
முதிர்கன்னிகள் ஒரு புறம்
விவாகரத்து மறுபுறம்
இதன் துயரை சொல்லி முடிக்கும்
முன் சமூகத்தின் சொல்லொண்ணா
துயரங்களின் பட்டியல் நீளுமே!!

சீதனமும் “சீ” வேணாமே எண்று
காத்திருப்பவனுக்கு பெயர் சூட்டுங்கள்
“ஆண்மகன்” என்று!!!
சீதனத்தில் சிறப்புப்பெற
இருப்பவனுக்கு பெயர் சூட்டுங்கள்
“முதுகெலும்பில்லாதவன்” என்று!!!

மருதமுனை நிஜா
( ஹுதாயிய்யா )
தென்கிழக்கு பல்கலைக்கழகம்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

சீதனம் என்ற சொல்லிலே “சீ”… எனக்கூறி சீற்றமாய் சுறண்டுகின்றனர் பெண் வீட்டாரின் சொத்தை பதவிக்கு பத்தும் படிப்புக்கு பத்தும் பரம்மரைக்கு பத்தும் தன் தோற்றத்திற்கு பத்துமாய் இலட்சத்தில் மதிப்பு போட்டு தம்மை மாப்பிள்ளை எனும்…

சீதனம் என்ற சொல்லிலே “சீ”… எனக்கூறி சீற்றமாய் சுறண்டுகின்றனர் பெண் வீட்டாரின் சொத்தை பதவிக்கு பத்தும் படிப்புக்கு பத்தும் பரம்மரைக்கு பத்தும் தன் தோற்றத்திற்கு பத்துமாய் இலட்சத்தில் மதிப்பு போட்டு தம்மை மாப்பிள்ளை எனும்…

2 thoughts on “பணப்பந்தலில் திருமணம்…

  1. Great V I should certainly pronounce, impressed with your website. I had no trouble navigating through all tabs and related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it in the least. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, site theme . a tones way for your customer to communicate. Nice task..

  2. I’ve read some good stuff here. Definitely worth bookmarking for revisiting. I surprise how much effort you put to make such a magnificent informative web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *