பேனா துளியில் அடுக்கப்படும் கதை

  • 12

ஒற்றை நிலவு
ஓராயிரம் நட்சத்திரம்
அத்தனையும் சாட்சிசொல்லும்
பெண்ணின் அழகு
அவளின் பொறுமையே!!!
ஆணுக்கு அழகு
அவன் கோபத்தை அடக்குவதே!!!

அன்பு கொண்டு
இறைநேசத்திற்காய்
இணைந்த ஜோடி
ஒரு போதும்
தலாக் என்னும்
பிரவினைக்கு செல்லாது!!!

காமுகரின்
கைகளில் சிக்கினாள்
அழகிய கோதை!!!
ஆசை காட்டினான்
அடிமையானாள்
பக்குவம் இழந்தாள்
பைத்தியகாறியாய் மாறினாள்
கற்பை இழந்தாள்
விபச்சாரியாய் மாறினாள்

அவனோ ஊருக்கு
நல்லவனாய்
பக்குவப்பட்டவனாய்
காட்டப்பட்டான்
மணமேடை ஏறினான்
மாப்பிள்ளையாய்!!!
பாவம் பைத்தியகாறி
உயிர் துறந்தாள்!!!
இம்மையும் – மறுமையும்
நரகமாய் போனது.

கவர்ச்சிக்கு கண்ணசைக்காமல்
அழகியும் வேண்டாம்
சீதனமும் “சீ” வேணாமே
எ்ன்று காத்திருந்தான்
ஒழுக்கமான பெண்ணுக்கு!!!
இறைவன் வட்டியும்
முதலுமாய் கொடுத்தான்
அழகுடன் சேர்த்து
ஒழுக்கமானவளை!!!

ஊருக்கு எடுப்பார்
கைப்புள்ளயாய் இல்லாமல்
தாய்க்கு சேவகனாய்
இருந்தான் ஒருவன்!!!
சொர்க்கத்தின் சொந்தக்காரன்
ஆனான் இஹ்லாஸினால்!!!

இளமையில் தொழுதான்
நோன்பும் பிடித்தான்
நல்லமலும் நிறைவாகவே செய்தான்!!!
பாவம் அவனது துரதிர்ஷ்டவசம்
படுக்கையில் கிடந்தான் முதுமையில்!!!
கட்டிலோடு போனது காலம்!!!
அவன் இபாதத் செய்தவன் என
இறைவன் கிறீடம் சூட்டுவான் மறுமையில்!!!

பாதையிலே சென்றாலும்
பத்து நன்மையை பெறுவாய்
பாதகம் விளைவிக்கும் கல்லை அகற்றினால்!!!
பாசாங்கு தான் செய்தாலும்
அனாதையை அரவணைத்து பார்
பெற்றோரின் பேறு பெறுவாய்!!!

பேனா துளியில் சொல்லிய கதை
சிறுக சொல்லாத கதை அதிகம்!!!

மருதமுனை நிஜா
(ஹுதாயிய்யா)
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ஒற்றை நிலவு ஓராயிரம் நட்சத்திரம் அத்தனையும் சாட்சிசொல்லும் பெண்ணின் அழகு அவளின் பொறுமையே!!! ஆணுக்கு அழகு அவன் கோபத்தை அடக்குவதே!!! அன்பு கொண்டு இறைநேசத்திற்காய் இணைந்த ஜோடி ஒரு போதும் தலாக் என்னும் பிரவினைக்கு…

ஒற்றை நிலவு ஓராயிரம் நட்சத்திரம் அத்தனையும் சாட்சிசொல்லும் பெண்ணின் அழகு அவளின் பொறுமையே!!! ஆணுக்கு அழகு அவன் கோபத்தை அடக்குவதே!!! அன்பு கொண்டு இறைநேசத்திற்காய் இணைந்த ஜோடி ஒரு போதும் தலாக் என்னும் பிரவினைக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *