பல்கலைக்கழக மாணவர்களின் நிலை

  • 10

இன மொழி பேதம்
இதை எல்லாம் கடந்து
ஒன்று சேரும் இடம் தான்
பல்கலைக்கழகம்

பலதிசைகளிலிருந்து ஒரு
இடம் நோக்கி வந்த
பறவை கூட்டம்
மாணவ பட்டாளம்

சரித்திரம் படைக்க
காத்திருக்கும் இளையோர்
இன்று பல்கலைக்கழகத்தில்
ஏதுமின்றி நடைப்பிணமாக
நடமாடுகிறார்கள்

உயர உயரப் பறக்க
இறக்கை கொடுத்தால்
உயர்வு தேவையில்லை
கால் போன போக்கில்
நடக்கலாம் என்கிறார்கள்

சமூகத்தில் மாற்றத்தை கொண்டு
வருவார்கள் என்று நினைத்தால்
அவர்களின் நடத்தையிலும்
மாற்றத்தை காண
முடியாது உள்ளது

பல்கலைக்கழகம் எனறால்
பல்கலைகள் பயின்ற
மாணவர்கள் உண்டு
அது அன்று
ஆனால்
கூத்துக் கும்மாலம் தான்
வாழ்க்கையென வாழும்
மாணவர்கள் இன்று

ஒரு சமுதாயத்தின்
எதிர்காலமே!
மாணவர் சமுதாயத்தில்
தான் உள்ளது
ஆனால்
அந்த சமூகமே
எதிர்காலம்
இல்லாத நிலை இன்று

பட்டம் பெற்றுவிட்டால்
எல்லாம் முடிந்துவிட்டதென
நினைக்கும் மாணவர்கள்
வாங்கிய பட்டத்தை வைத்து
என்ன சாதிக்கப் போகிறார்கள்
என்பது கேள்விக்குரிதான்?
ஆனால்
வாங்கிய பட்டத்தை வைத்து
போராட்டம் மட்டும்
அங்கங்கே அரங்கேரும்

மாணவர் சமூகமே!!!
இன்று சிதறிக்கிடக்கும்
சில்லரையாய் மாறிவிட்டது

ஏன்???
இந்து அபலம்
மாணவர் சமுதாயமே
எத்தனை காலம் தான்
இவ்வாறு இருக்க
மாற்றம் வேண்டும்
ஒவ்வொரு பட்டதாரியின்
வாழ்க்கையிலும்!

நீங்கள் மாறினால்
முழு உலகமே
மாறிவிடும்
மாற்றம் முதலில்
உங்களிடம் இருந்தே
வர வேண்டும்.

Nushra Aadam.
Akurana.
South eastern university of Sri Lanka.
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

இன மொழி பேதம் இதை எல்லாம் கடந்து ஒன்று சேரும் இடம் தான் பல்கலைக்கழகம் பலதிசைகளிலிருந்து ஒரு இடம் நோக்கி வந்த பறவை கூட்டம் மாணவ பட்டாளம் சரித்திரம் படைக்க காத்திருக்கும் இளையோர் இன்று…

இன மொழி பேதம் இதை எல்லாம் கடந்து ஒன்று சேரும் இடம் தான் பல்கலைக்கழகம் பலதிசைகளிலிருந்து ஒரு இடம் நோக்கி வந்த பறவை கூட்டம் மாணவ பட்டாளம் சரித்திரம் படைக்க காத்திருக்கும் இளையோர் இன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *