கூழாங்கல்லாய் போன மாணிக்கக் கல்!!!

  • 7

அறைகுறை ஆடையில்
கைதட்டல்களை ஏராளம்
சம்பாதிக்கும் நடிகை – அழகு

முழு உடல் போர்த்தி
முக்காடு இட்டவள் பட்டிக்காட்டாள
இது உலகின் இன்றய நியதி

கர்வம் கொண்டு
அகந்தையுடன் நடப்பவள் தங்கம்
கலவரம் இன்றி பொறுமை
காப்பவள் வெறும் செல்லாக்காசு

உன் வாழ்வில் வேண்டாம் என
ஒதிக்கியவர்கள் நீ தொலைக்கும்
பொக்கிஷமாக இருக்கலாம்

நீ யாரிடம் தகுதி பார்த்தாயோ!
யாரிடம் அந்தஸ்து பார்த்தாயோ!
யாரை இழிவாக பேசினாயோ!
யாரை பொய்யான பழியில்
அகப்பட செய்தாயோ!
அவர்கள் உன்னை விட
தரம் பெற்றவராய்
இறைவனிடம் கணிக்கப்படலாம்

உன் வாழ்வின்
தரித்திரியம் என நினைத்தவர்
உன் நலனுக்காய்
இறைவனிடம் மன்றாடுபவராய் இருக்கலாம்

இன்றய உன் வெளிச்சம்
ஒளி பெற பிராத்தித்தவரை
நீ அறியமாட்டாய்
யாரையோ பாராட்டுவாய்!
யாரையோ போற்றுவாய்!
உன் – நலனில் அக்கறை கொண்டவர் என்று

கூழாங்கல்லோடு
மாணிக்கமும் இருந்தால்
இரண்டையும் சேர்த்து
எறிவது தானே வழக்கம்
நீ எறிவதில் தப்பில்லல
வர்கள் இருந்த இடம் தான் தவறானது

மருதமுனை நிஜா(ஹுதாயிய்யா )
SEUSL
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அறைகுறை ஆடையில் கைதட்டல்களை ஏராளம் சம்பாதிக்கும் நடிகை – அழகு முழு உடல் போர்த்தி முக்காடு இட்டவள் பட்டிக்காட்டாள இது உலகின் இன்றய நியதி கர்வம் கொண்டு அகந்தையுடன் நடப்பவள் தங்கம் கலவரம் இன்றி…

அறைகுறை ஆடையில் கைதட்டல்களை ஏராளம் சம்பாதிக்கும் நடிகை – அழகு முழு உடல் போர்த்தி முக்காடு இட்டவள் பட்டிக்காட்டாள இது உலகின் இன்றய நியதி கர்வம் கொண்டு அகந்தையுடன் நடப்பவள் தங்கம் கலவரம் இன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *