காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 32

  • 15

“ச்சே.. இவனுங்க என்ன பேசுறாங்கன்னு கேக்க முடியாம போய்டுச்சே… போன் ரேகாடரை ஆச்சும் வெச்சிட்டு வந்துடலாம்” என்றெண்ணியவன் போனை சைலன்டில் போட்டு ரேகாடரை ஆன் செய்து அங்கிருந்த மறைவான ஓரிடத்தில் போனை வைத்து விட்டு வெளியே வந்து நின்றான்.

“இந்நேரம் நம்ம தோஸ்துங்க எல்லாம் பார்ட்டியை என்ஜோய் பண்ணிக்கிட்டு இருப்பாங்க… நாம இன்னும் ஒரு மணிநேரம் இங்கேயே இருக்கணும் ” என்று அதே கனவில் மூழ்கிப்போனான் ராபர்ட்.

**********************

இரவில் ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டி என்பதால் மேவிஸ் மஹால் முழுக்க அலங்கார ஒளிவிளக்குகளால் அலங்கரிக்க பட்டு இருந்தது. மிஸ்டர் லூதர் வந்திருந்த விஷேட அதிதிகளை வரவேற்றுகொண்டும் அவர்களோடு பேசிக்கொண்டும் இருந்தார். இடைநடுவே சர்வர்கள் வைன் பரிமாறிக்கொண்டு திரிந்ததை பார்த்த ஆர்தர். அதிர்ச்சி அடைந்தான்.

“ஆஹ்ஹ்…”

“என்னடா என்னாச்சு…?” என்று மீரா கேட்க அவன் பேச்சு மூச்சின்றி கையை நீட்டி வைனை காட்டினான். அவ்வளவு தான்…

“ஐயையோ பார்ட்டி என்னாலே வைன் இருக்குமே… இதுங்க ரெண்டுக்கும் தான் வைன் ஆகாதே…” என்று புலம்பி கொண்டே பின்னாடி திரும்பி பார்த்தாள்.

அங்கே ஜெனியும் கில்கமேஷும் டிடானியாவின் நண்பிகளோடு பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் டிடானியா அதில் கலந்து கொள்ளாது எதையோ யோசித்து கொண்டே முடியை விரலால் சுருட்டி கொண்டிருந்தாள்.

“இவங்களுக்கு விஸ்கி தானே ஒத்துவராது.. இது வெறும் வைன் தானே…” என்று ஏதோ இல்லாத புதிய விடயத்தை கண்டுபிடித்தது போல ஆர்தர் பேசினான். அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டிவிட்டு..

“இதுங்களுக்கு வைன் என்றால் என்ன விஸ்கி என்றால் என்ன எல்லாமே ஒண்ணுதான்… அவங்க ரொமான்ஸ் பண்ணுறதெல்லாம் நமக்கு ஒரு பிரச்சினை இல்லை… ஆனா இவ்வளவு பேர் இருந்தா.   அது அவங்களுக்கு தான் அவமானம் … லூதர் அங்கிள் என்ன நினைப்பாரு..”

“இப்போ என்ன பண்ணலாம்…?”

“பேசாம அவங்கள கூப்பிட்டு விஷயத்தை சொல்லிடுவோம்.. சொன்னா புரிஞ்சிக்கிற வயசு தானே…”என்று ஆர்த்தரிடம் சொல்லி விட்டு ஜெனியை தனியாக அழைத்து சென்றாள் மீரா.

“என்னடி.. எதுக்காக இப்படி இழுத்து கிட்டு வர்ரே…”

“ஒன்னுமில்லை மா தாயே.. எல்லாம் உன்னோட நல்லதுக்கு தான்.. அங்க பார்த்தியா?  “

“அங்க என்ன இருக்கு..”

“லூசு… இந்த ஹால் முழுக்க சர்வரமார் கைல வைனை வெச்சிக்கிட்டு சுத்துறாங்க.”

“ஆமா அதனால என்ன?”

“ஐயோ… உனக்கு எப்படி புரியவைப்பேன்… அன்னிக்கி பிளைட்ல பண்ணி தொலைச்ச மாதிரி பண்ணிடாதே அவ்வளவு தான் சொல்லுவேன்..”என்றதும்.

“அன்னிக்கி நான் என்ன பண்ண…..” என்று கேட்டவளுக்கு சட்டென விடயம் புரியவே வெட்கமாகி போய்விட.

“சாரிடி… நான் இதெல்லாம் தொட்டு கூட பார்க்க மாட்டேன்… போதுமா…” என்றாள் சிறுபிள்ளைபோல..

அதே போல் ஆர்தரும் கில்கமேஷை தனியாக அழைத்து சென்று…

“அரசரே.. உங்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்தை நியாபக படுத்த தான் இந்த பக்கம் இழுத்துட்டு வந்தேன்..”

“என்னது… மோதிரத்தை பற்றி ஏதாச்சும் செய்தி கிடைத்ததா?”என்று கேட்டான் கில்கமேஷ்.

அதை கேட்டு தலையில் கைவைத்து ஆர்தர்…

“அட யார்ரா இவன்… டாய்லட் போனா கூட இதை பத்தியே தான் யோசிப்பியா.. இது பார்ட்டியை என்ஜோய் பண்ணி ஜாலியா இருக்குற நேரம்  நம்ம ஜோலியை பாக்குற நேரம் இல்ல…. நீ இங்க என்ன வேணாலும் பண்ணு.. டான்ஸ் ஆடு பாட்டுப்பாடு.. எதுவேணாலும் பண்ணிக்க.. ஆனா அதோ தெரியுதே வைன் அதை மட்டும் குடிச்சிடாதே….”என்றான்.

அதை பார்த்து கொண்டே கேகே,

“ஒரு வேளை அது அன்னிக்கி குடிச்ச விஸ்கி மாதிரி ஏதாச்சும் ஒண்ணா… இல்ல  அதே தானா?”

“பரவாயில்லையே ! கரெக்ட்டா புரிஞ்சி வெச்சிருக்கே…சரி அது பேரு வைன்…யார் தந்தாலும் வாங்கி குடிச்சிடாதே…புரிஞ்சிதா?”என்று கேட்டான்.

அதற்கு கில்கமேஷும் ம்ம் என்று தலை ஆட்டினான்.

“அப்பாடா…. நாம இன்னிக்கி தப்பிச்சோம்…” என்று மூச்சு விட்டு கொண்டே தூரத்தில் நின்ற மீராவுக்கு கைகளால் காரியம் முடிந்தது என்ற சைகையை காட்டி அங்கிருந்து நகர்ந்தான். அடுத்து அங்கிருந்த சவுண்ட் சிஸ்டத்தில் கிரீச் என்ற சத்தத்தை அடுத்து மிஸ்டர் லூதர்  ஒலிவாங்கியில் பேச ஆரம்பித்தார்.

“லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.. இங்க என்னோட கம்பெனியோட இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு பண்ணி இருக்குற இந்த பார்ட்டிக்கு வந்திருக்கிற எல்லோருக்கும் தாங்ஸ் அண்ட் வெல்கம்… நல்ல படியா பார்ட்டியை என்ஜோய் பண்ணுங்க… அதோட இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு முக்கியமான நபரை உங்க எல்லோருக்கும் அறிமுகப்படுத்த போறேன்” என்று அறிவித்துவிட்டு செல்ல எல்லோரின் கரகோசங்களுக்கு மத்தியில் டான்ஸ் ஆரம்பித்தது…

***************

வெளியில் நின்று கொண்டிருந்த ராபர்ட்டை மித்ரத் உள்ளே வருமாறு அழைத்தான்.. ராபர்டுக்கு நெஞ்சு திக் திக் என்றது..

“என்னது திடீரென நம்மள உள்ளே கூப்பிர்ரான்.. ஒருவேளை நாம போன் வெச்சு ரெகார்ட் பண்ணுறத்தை பார்த்துட்டானா…”என்று யோசித்து கொண்டே நிற்க மறுபடி அவன் ராபர்ட் என்று அழைக்க தயங்கி தயங்கி உள்ளே சென்றான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“ச்சே.. இவனுங்க என்ன பேசுறாங்கன்னு கேக்க முடியாம போய்டுச்சே… போன் ரேகாடரை ஆச்சும் வெச்சிட்டு வந்துடலாம்” என்றெண்ணியவன் போனை சைலன்டில் போட்டு ரேகாடரை ஆன் செய்து அங்கிருந்த மறைவான ஓரிடத்தில் போனை வைத்து விட்டு…

“ச்சே.. இவனுங்க என்ன பேசுறாங்கன்னு கேக்க முடியாம போய்டுச்சே… போன் ரேகாடரை ஆச்சும் வெச்சிட்டு வந்துடலாம்” என்றெண்ணியவன் போனை சைலன்டில் போட்டு ரேகாடரை ஆன் செய்து அங்கிருந்த மறைவான ஓரிடத்தில் போனை வைத்து விட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *