உத்தம தியாகிகள்

  • 41

உத்தம நபித்தோழர்களே!
உன்னத உயிர்த் தியாகிகளே!
இஸ்லாத்தின் காவலாளர்களே!
இன்னுயிரீத்த உத்தமர்களே!

உங்கள் பாதச்சுவட்டின் ஓசை
தினம் ஒலிக்கிறது – சுவர்க்கத்திலே
ஆனாலும் உங்கள் அழுகுரல்களும் விம்மல்களும்
தினம் தினம் ஒலிக்கிறது – நம் சிந்தையிலே!

காபிர்கள் செய்த கொடுமைகளை
பொறுத்தே நின்றீர்கள் – ஈமானுக்காய்

பிலால் இப்னு ரவாஹாவே!
பாலைவன மணலில் கிடத்தி
பாறாங்கல்லை நெஞ்சிலே வைத்த போதிலும்
சொன்னீர்கள் – இறைவன் ஒருவனென்றே!

யாசிர் ரழியல்லாஹு அன்ஹுவே!
இருகால்களும் இரு ஒட்டகங்களிலும் கட்டி
உயிர் பிரியும் வேளையிலும்
சொன்னீர்கள் – இறைவன் ஒருவனென்றே!

ஸுஹைப் இப்னு ஸினானும்
விரட்டப்பட்டார்கள் தன் தாயினால்
இறைவன் ஒருவன் என்று சொன்னதற்காக!

வீரத்தியாகி சுமையாவே!
இஸ்லாத்தின் விரோதி அபூஜஹ்ல்
ஈட்டி கொண்டு உங்களை தாக்கும் போதிலும்
சொன்னீர்கள் – இறைவன் ஒருவனென்றே!

அம்மார் ரழியல்லாஹு அன்ஹுவே!
உங்களையும் விட்டுவிடவில்லை அவர்கள்
சித்திரவதைப்படுத்தினார்கள்
தண்ணீரில் மூழ்கடித்தே!

கப்பாப் இப்னு அரத்தும்
சுடப்பட்டார்கள் இரும்பினால்
இறைவன் ஒருவன் என்று சொன்னதற்காக!

இஸ்லாத்தின் இன்னுயிர் நாடிகளே!
இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறோம் – தினம்
உங்களிடத்தில் வீற்றிருந்த பொறுமையும் ஈமானியமும்
நமக்கும் கிடைக்க வேண்டும் என்று

உங்களை சந்திக்க வேண்டும் நாளை – சுவர்க்கத்திலே
நாங்களும் உத்தம தியாகிகளாக!

Sasna Baanu Nawas
Thihariya.
வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

உத்தம நபித்தோழர்களே! உன்னத உயிர்த் தியாகிகளே! இஸ்லாத்தின் காவலாளர்களே! இன்னுயிரீத்த உத்தமர்களே! உங்கள் பாதச்சுவட்டின் ஓசை தினம் ஒலிக்கிறது – சுவர்க்கத்திலே ஆனாலும் உங்கள் அழுகுரல்களும் விம்மல்களும் தினம் தினம் ஒலிக்கிறது – நம்…

உத்தம நபித்தோழர்களே! உன்னத உயிர்த் தியாகிகளே! இஸ்லாத்தின் காவலாளர்களே! இன்னுயிரீத்த உத்தமர்களே! உங்கள் பாதச்சுவட்டின் ஓசை தினம் ஒலிக்கிறது – சுவர்க்கத்திலே ஆனாலும் உங்கள் அழுகுரல்களும் விம்மல்களும் தினம் தினம் ஒலிக்கிறது – நம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *