காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 33

  • 10

உள்ளே போனவன் கடைகண்ணால் ஃபோன் வைத்த இடத்தில் தான் இருக்கிறதா என்று நோட்டமிட்டான். அவன் நினைத்தது போல தப்பாக எதுவும் மாட்டிக்கொள்ளவில்லை.

“சார், என்னை கூப்பிடீங்களா?” என்று பணிவாக கேட்டான்.

ஆஹ்ஹ்.. ஆமா… ராபர்ட்.. நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும்… இவங்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியமான பென்ட்ரைவ் ஒன்னை மறந்து ஹோட்டல்லியே வெச்சிட்டு வந்துட்டேன். நீ போய் அதை எடுத்துட்டு வா…

என்றதும்.. ராபர்ட்டுக்கு வந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இருந்தாலும் வெளிக்காட்டி கொள்ளாமல்..

“என்னது சேர் நானா…?”

“இவங்க கூட இன்னும் சில முக்கியமான விஷயங்களை டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கு. சோ என்னால வர முடியாது… அதனால.. இந்தா என்னோட ரூம் சாவி… ஹோட்டலுக்கு போய் என்னோட ரூமை திறந்து.. உள்ளே இருக்குற கபோர்டில் லாக்கரில் போட்டு வெச்சிருக்கேன்.. கொண்டு வந்திடு… ஹா லாக்கர் சாவி கபோர்டிலேயே இருக்கு…” என்று கூறி  சாவியை கொடுத்தான்.

அதனை வாங்கி கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டான் ராபர்ட்.

********************************

எல்லோரும் ஆளுக்கொரு ஜோடியாக டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தனர்… வழக்கம் போல மீராவும் ஆர்தரும் டான்ஸ் ஆட அதே சாக்கில் மீரா ஜெனியை கில்கமேஷ் மீது தள்ளிவிட்டாள். அவளை கீழே விடாது பிடித்து கொண்டான் கில்கமேஷ்… வழக்கம் போல அந்த இரண்டு நிமிடங்களும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே கழிய நடனம் ஆடிக்கொண்டே அவன் அருகில் வந்த ஆர்தர்…

“எவ்வளவு நேரம் தான் இப்படி பார்த்து கொண்டே இருப்பீங்க… ஆடுங்க…” என்று சொன்னான்.

அதனை கேட்டு ஜெனி…”அ.. நாம ரெண்டு பேரும் ஆடுவோமா…?”என்று கேட்டாள்.

இவர்கள் ஆடுவது போல் எல்லாம் அவனுக்கு ஒரு ஸ்டெப் கூட  வராது….

“எனக்கு இப்படியெல்லாம் தெரியாது”என்றான் கில்கமேஷ்.

“நான் சொல்லிதர்றேன்…” என்றவள் ஒவ்வொரு ஸ்டெப்பாக சொல்லிக்கொடுத்தாள்.. அவனும் அதேபோல் செய்தான்.. இவற்றை எல்லாம் வெறுப்போடு ஒரு ஓரமாக நின்று பார்த்து கொண்டிருந்த டிடானியா முகத்தை சுளித்து விட்டு வேறு புறமாக சென்றுவிட்டாள்

*****************

ரிசப்ஷனிஸ்ட்  பெண்ணுக்கு ஏற்கனவே மித்ரத் போன் பண்ணி சொல்லி இருக்க வேண்டும். இவன் போனவுடன் மித்ரத் அறைக்கு வழிகாட்டி விட்டாள்.

“தாங்ஸ்”என்ற வார்த்தையுடன் மூன்றாம் மாடியில் இருந்த மித்ரத்தின் அறைக்கு முன்னால் போய் நின்றான் ராபர்ட். அப்போது நேரம் 9.30 ஆகிவிட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே போனவன் முதலில் அங்கிருந்த மேசை மற்றும் ஏனைய இடங்களில் எல்லாம் மோதிரத்தை தேட ஆரம்பித்தான்.

அந்த மோதிரத்தை எங்க தான் வெச்சு தொலைச்சான்…எவ்வளவு நல்ல சான்ஸ் இது.. ஒரு வேளை கபோர்டில் இருக்குமோ… என்றெண்ணி கொண்டு கபோர்டை நெருங்கும் போது ஒரு சத்தம் கேட்டது.

முதலில் யாரோ வருகிறார்கள் என்று எண்ணி பயந்தவன் சத்தம் ஜன்னல் வழியாக கேட்கவும் சற்று எட்டிப்பார்த்தான். யாரோ கறுப்பு உருவம் ஒன்று கயிற்றை பிடித்து கொண்டு வெளிச்சுவர் வழியாக ஏறி வந்து கொண்டிருந்தது. முன்னாடி கேட்ட சத்தம் அந்த கயிற்றின் முனையில் இருந்த ஹூக்கினை சுவரில் வீசிய சத்தம் என்பதும் புரிந்தது..

“யாராக இருக்கும்?…..” என்று யோசிக்கும் போதே ஏறி வந்தவனின் கைகள் ஜன்னலை தொட்டுவிட அப்படியே பின்வாங்கி அங்கிருந்த திரைசீலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டான் ராபர்ட்… உள்ளே வந்தது முழுக்க முழுக்க கறுப்பு ஜாக்கெட் கறுப்பு பேண்ட் அணிந்து முகத்தினையும் கறுப்பு முகமூடி ஒன்றால் மறைத்து இருந்த ஒருத்தன். திரைச்சீலை வழியாக அவனை பார்த்த ராபர்ட் நிச்சயமாக இவன் ஒரு திருடன் தான் என்று முடிவுக்கு வந்தான்.

வந்தவன்  ரூம் கதவு திறந்து இருந்ததை பார்த்து திடுகிட்டதும் ராபர்ட்டுக்கு புரிந்தது… மெதுவாக அந்த ரூம்கதவை உள்ளார தாழ்ப்பாள் போட்டு விட்டு பாத்ரூமிற்குள் யாராவது இருக்கிறார்களா என்பதையும் கவனமாக ஆராய்ந்தான் அந்த திருடன். பாக்கெட்டில் கையை விட்டு  ஒரு சாவிக்கொத்தை தூக்கினான்… ஒரிஜினல் கபோர்ட் சாவி ராபர்ட் கையில் இருந்தது. வந்த உடனே கபோர்ட் சாவியை இழுத்து கையில் எடுத்து கொண்டதே அவன் தான்… கடைசியாக எடுப்போம் என்று அப்படி செய்திருந்தான். ஆனால் வந்தவன் வைத்திருந்த சாவிக்கொத்தை பயன்படுத்தி கதவை திறக்க முயன்றான்.

“பலே திருடனாக இருப்பான் போல இருக்கே.. இவன் கையில் மோதிரம் அகப்பட்டு விடக்கூடாது..” என்று எண்ணியவன் திடீரென வேறு எதையும் யோசிக்காது  பாய்ந்து சென்று அவனை பிடிக்க முயற்சித்தான். வந்த திருடன் பயங்கரமாக பயந்திருக்க வேண்டும்… திடீரென தாக்கப்பட்டதால் தன்னை விடுவித்து கொள்ள கடுமையாக முயற்சித்தான்…

“ஹே.. யார்… நீ… எதுக்காக இங்க.. வந்த…” என்கிற ராபார்ட்டின் குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்த திருடன் அவனை தள்ளி விட்டு ராபர்ட் எழுந்திருக்க முன் ஜன்னல் வழியாக தப்பித்து விட்டான். கீழே விழுந்த ராபர்ட் கொஞ்ச நேரம் அதிர்ந்து போய் கிடந்தான். கடைசியாக திருடனை பிடித்த போது ஏதோ ஒன்று அவனை யோசிக்க வைத்தது…

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

உள்ளே போனவன் கடைகண்ணால் ஃபோன் வைத்த இடத்தில் தான் இருக்கிறதா என்று நோட்டமிட்டான். அவன் நினைத்தது போல தப்பாக எதுவும் மாட்டிக்கொள்ளவில்லை. “சார், என்னை கூப்பிடீங்களா?” என்று பணிவாக கேட்டான். ஆஹ்ஹ்.. ஆமா… ராபர்ட்..…

உள்ளே போனவன் கடைகண்ணால் ஃபோன் வைத்த இடத்தில் தான் இருக்கிறதா என்று நோட்டமிட்டான். அவன் நினைத்தது போல தப்பாக எதுவும் மாட்டிக்கொள்ளவில்லை. “சார், என்னை கூப்பிடீங்களா?” என்று பணிவாக கேட்டான். ஆஹ்ஹ்.. ஆமா… ராபர்ட்..…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *