கறல் படிந்துபோன இலட்சியத்தை தட்டி மீட்டி உயிரூட்டும் முயற்சி.

  • 17

இலட்சியம்  என்ற ஆழமான தீரா தாகமும் உத்வேகமும் உன் வாழ்நாளில் நீ எதேனும் சாதித்ததுண்டா என்ற உரத்த கனத்த கேள்விக்கனைகளை எழுப்புகிறது.  உள்ளகத்தே சாதி என தூண்டி அம்பு எய்து அச்சம் அசமந்தமெனும் கொடிய ஒட்டுண்ணிகளை துவம்சம் செய்து கவனயீனத்தை பலிதீர்க்க எத்தனிக்கிறது.

கடவாய்ப்பல் சிரிப்பில்  இவ்வுலகம் உன்னை ஏழனமாய் பார்த்து கோழையென பலிதூற்றமுன் உன் புகழ் ஓங்காவிடினும் ஒலிந்திடாது உயிர்ப்புடனிருக்கச்செய்ய புறப்படு என அகவறையுள்ளே அசரீரி ஓங்கி இடியாய் ஒலித்து நிற்கிறது.

உலகியல் வாழ்வின் பொன்னான அர்த்தங்களையும் அதுனுள் மறைந்து பொதிந்திருக்கும் உண்மைகளையும் பொறுமையுடனும் ஆற அமர்ந்து செவிதாழ்த்தி கேட்டு புரிந்து செயற்பட்டிட இந்நவனாகரீக போலி உலகின் போக்கினால் கவரப்பட்ட கைதி நானும் இச்சமூகமும்தான் ஒருபோதும் முயன்றதில்லையே.

மானிடனாக தன்னை ஒரு வரையரையுள்ளும் உலகத்து ஆசைகளை நிராசையாக்கியும் அர்ப்பணிப்புகளையும் அவலங்களையும் அதிகப்படுத்தி உறுக்கமான இலட்சிய அனலில் தன்னை அமிழ்த்தி உரமூட்டி இவ்வுலகின் மறை புதிரை புரிந்து தெளிந்த சிலர் சாதனையின் உச்சம் தொட்டு தன்னை கோழையென நோக்கியோர் மூக்குடையச்செய்து மனிதப்புனிதராய் வாழும் தற்கால மெய்ஞ்ஞானம் அறிந்த நீயும்தான் சாதித்திட காத்துக்கிடக்கும் உன் வாழ்வியலில் எடுத்தியம்புவதில் இனியேனும் தாமதிப்பதுதான் ஏனடா???? என என்னை நானே கேள்விக்குட்படுத்துகிறேன் குற்றவாளியாய்……..

றிஸ்வான் சுஹைப்
வியூகம் வெளியீட்டு மையம்

இலட்சியம்  என்ற ஆழமான தீரா தாகமும் உத்வேகமும் உன் வாழ்நாளில் நீ எதேனும் சாதித்ததுண்டா என்ற உரத்த கனத்த கேள்விக்கனைகளை எழுப்புகிறது.  உள்ளகத்தே சாதி என தூண்டி அம்பு எய்து அச்சம் அசமந்தமெனும் கொடிய…

இலட்சியம்  என்ற ஆழமான தீரா தாகமும் உத்வேகமும் உன் வாழ்நாளில் நீ எதேனும் சாதித்ததுண்டா என்ற உரத்த கனத்த கேள்விக்கனைகளை எழுப்புகிறது.  உள்ளகத்தே சாதி என தூண்டி அம்பு எய்து அச்சம் அசமந்தமெனும் கொடிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *