திசை மாறிய தீர்ப்புக்கள்

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 06

  • 94

இப்படியே நாட்கள் நகர, அன்று சுந்தருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி..

“சுந்தர் சுந்தர்” கலங்கிய கண்களோடு ஓடி வந்தாள் வத்சலா…

“என்னம்மா? என்ன நடந்த?

சுந்தர்…

சொல்லு வத்சலா..

எங்க.. எங்க பொஸ் பார்த்துட்டாரு. அவருக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சு?

என்ன சொல்ற நீ?

ஆமாம் சுந்தர். நானும் நீங்களும் தனிமையில இருக்குறத எங்க பொஸ் பார்த்துட்டாரு..

கடவுளே! இனி என்னாச்சு? பதறிப் போனான் சுந்தர்.

“ரெஜிஸ்டர் மெரேஜ் ன்னு சொல்லிட்டாரு சுந்தர்” இந்தப் பதிலை எதிர்ப்பார்க்காதவன் பதறிப் போனான். ஏற்கனவே தனக்கென்று வாழும் அழகு மனைவி, ஒருவருடமாவது பூர்த்தியாகாத அன்புக் குழந்தை, ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சகோதரிகள், அவர்களின் படிப்பு, திருமணம் என எல்லாமே அவனுக்குள் வந்து போயிற்று. சவூதி கிழம்பி வந்த போது கண்ணீர் பாய்ந்தோட விம்மி விம்மி அழுத மனைவியின் வதனம் தேம்பி அழச் செய்தது சுந்தரத்தை. விடிந்தால் திருமணம் என்றிக்க, அந்த இரவே அவன் நிலைமை எண்ணி கண்ணீர் விட்டது. அவனாலோ அவன் நண்பர்களாலோ ஏதும் செய்ய முடியாதளவுக்கு சவூதி திட்டமும் அவ்வாறு தான் வகுக்கப் பட்டிருந்தது.

எப்படியோ இரண்டாவது மனைவிக்கும் கணவனாகிப் போனான் சுந்தர். தனக்காக வாழும் இரண்டு மனைவியருக்காகவும் தேய்ந்து போனதவன் வாழ்க்கை.

வத்சலாவுக்கு வாழ்க்கைப் பட்டு இரண்டு வருடங்கள் பறந்து விட்டன. தாய் நாட்டிலிருந்து ஒரே அழைப்பு இவனுக்கு. “டெடி எப்ப வருவீங்க, எனக்கு என்ன கொண்டு வருவீங்க” குட்டி மகள் மூன்று வருடப் பிள்ளையாய் தந்தையின் வரவை, அன்பை கேட்டுக் கொண்டே இருந்தது.

“டெடி அடுத்த மாசம் வருவேன் செல்லம்” பொய்யே தெரியாத சுந்தரத்துக்கு இப்பொழுது எல்லாமே பழகி விட்டது. இங்கு தன்னை நம்பி வந்த வத்சலாவின் நிலைமையும் பாவமாயிருக்க இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்தான்.

“ஏங்க… என்ன செய்றீங்க?

சொல்லு வத்சலா..

இவ்வளவு நேரம் போன் ரிங் ஆவுறது விளங்கல்லயா?

யாரும்மா?

உங்க வீட்டிலுருந்து தான்” ஓடிச்சென்று மொபைலை எடுத்தவன் அப்படியே தரையில் சாய்ந்தான்..

என்னங்க? என்ன ஆவிட்டு

மனைவி வத்சலாவின் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளாமல் கதறி அழுதான் சுந்தர்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

இப்படியே நாட்கள் நகர, அன்று சுந்தருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.. “சுந்தர் சுந்தர்” கலங்கிய கண்களோடு ஓடி வந்தாள் வத்சலா… “என்னம்மா? என்ன நடந்த? சுந்தர்… சொல்லு வத்சலா.. எங்க.. எங்க பொஸ் பார்த்துட்டாரு.…

இப்படியே நாட்கள் நகர, அன்று சுந்தருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.. “சுந்தர் சுந்தர்” கலங்கிய கண்களோடு ஓடி வந்தாள் வத்சலா… “என்னம்மா? என்ன நடந்த? சுந்தர்… சொல்லு வத்சலா.. எங்க.. எங்க பொஸ் பார்த்துட்டாரு.…

6 thoughts on “திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 06

  1. Does your site have a contact page? I’m having a tough time locating it but, I’d like to send you an e-mail. I’ve got some creative ideas for your blog you might be interested in hearing. Either way, great website and I look forward to seeing it grow over time.

  2. Today, I went to the beachfront with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is completely off topic but I had to tell someone!

  3. You can definitely see your skills within the paintings you write. The sector hopes for more passionate writers such as you who are not afraid to say how they believe. Always follow your heart.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *