திசை மாறிய தீர்ப்புக்கள்

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 07

  • 12

என்னங்க? என்ன ஆவிட்டு

மனைவி வத்சலாவின் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளாமல் கதறி அழுதான் சுந்தர்.

கணவனின் நிலைமை கண்டு பதறிப் போன வத்சலா மீண்டும் மீண்டும் அவனை அழுத்தி காரணத்தை கேட்டுக் கொண்டிருந்தாள்.

“நான் அவசரமா ஶ்ரீலங்கா போவனும்

அதிர்ந்து போனாள் வத்சலா

என்ன சொல்றீங்க?

எங்க அப்பா இறந்துட்டாரு. நான் அவசரமா போவனும் வத்சலா”

கணவனின் கவலைக்கான காரணத்தை புரிந்து கொண்டவள். அவரை ஆயத்தப்படுத்தி வழியனுப்பி வைப்பதில் முனைப்பாக இருந்தாள். இவ்வாறு தாய்நாட்டுக்கு அவசரமாய் கிளம்பி வந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தான் இவனுக்கு இந்த சோதனையும், வேதனையும்.

மனைவி ராதாவுடன் இங்கிருக்க தாய்நாடு வருவதான வத்சலாவின் திடீர் அழைப்பு அவனை சங்கடப் படுத்தாமல் இருக்குமா என்ன? சிந்திக்கலானான். தேநீர் கோப்பையுடன் நின்றிருந்த மனைவி ராதாவை பார்த்த பிறகு தான் விடிந்து விட்டது என்ற நினைப்பு வர அவசர அவசரமாய் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ஒரு உறுதியான முடிவுடனே வீட்டை விட்டு வெளியேறிப் போனான்.

மனைவி வத்சலாவுக்காக அயார்போர்ட் செல்லும் நிலைமையில் சுந்தர் இருக்கவில்லை. நண்பன் ரவிக்கு அழைப்பு செய்த சுந்தர்

“டேய் எங்க இருக்கடா? நான் அவசரமா உன்ன பார்க்கனும்

வீட்டுல தான்டா

ஆஹ் அப்போ கீழ ரோட்டுக்கு வாயேன் கொஞ்சம்.என்னடா என்ன விஷயம்?

சொல்றன் வாயே..

ஹம்ம்ம் “

ரவியின் முன்னால் மோட்டார் வாகனத்தை நிறுத்தியவனின் முகம் கண்டு அதிர்ந்து போனான் ரவி

டேய் என்னடா?

இங்க வா சொல்ல

நண்பனின் கையைப் பற்றிக் கொண்டிருந்த சுந்தரின் கைகள் கொதித்துக் கொண்டிருந்தது. அவனின் பதற்றம், தினறிய பேச்சு, எல்லாமே ரவிக்கு வித்தியாசமாயிருக்க பிரமை பிடித்தவன் போல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என் வத்சலா ஶ்ரீலங்கா வாராள் டா..

உன் வத்சலா வா? யாரு அவள்?

ஆமாம் டா” நடந்ததெல்லாம் நண்பனிடம் ஒப்புவிக்க, ரவியால் எதையும் நம்ப முடியாமல் இருந்தது.

பற்றியிருந்த நண்பனின் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன், சுந்தரத்தை விட்டு தூரமானான்.

டேய் ரவி..

ரவி…

ரவி.. டேய்..

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

 

என்னங்க? என்ன ஆவிட்டு மனைவி வத்சலாவின் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளாமல் கதறி அழுதான் சுந்தர். கணவனின் நிலைமை கண்டு பதறிப் போன வத்சலா மீண்டும் மீண்டும் அவனை அழுத்தி காரணத்தை கேட்டுக் கொண்டிருந்தாள். “நான்…

என்னங்க? என்ன ஆவிட்டு மனைவி வத்சலாவின் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளாமல் கதறி அழுதான் சுந்தர். கணவனின் நிலைமை கண்டு பதறிப் போன வத்சலா மீண்டும் மீண்டும் அவனை அழுத்தி காரணத்தை கேட்டுக் கொண்டிருந்தாள். “நான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *