திசை மாறிய தீர்ப்புக்கள்

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 08

  • 11

டேய் ரவி..

ரவி…

ரவி.. டேய்..

என்னடா? கோவ வெறியோடு திரும்பிப் பார்த்தான்.

என் நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்க ரவி பிளீஸ்..

டேய் நான் சவூதியில இருக்குறப்போ உனக்கு எத்துன தடவ சொல்லி இருப்பன்? கட்டின மனைவிக்கு துரோகம் செய்ய உனக்கெல்லாம் எப்புடிடா மனசு வருது?

இப்போ அதெல்லாம் பேசி என்ன பிரயோசனம் ரவி? எனக்கு ஹெல்ப் பண்ணுடா பிலீஸ்..” சின்னவன் போல் சிணுங்கினான் சுந்தர்.

“சரி சரி சொல்லு…

வத்சலா ஶ்ரீலங்கா வாராள்டா.

கடவுளே! இப்போ என்ன செய்ய போறாய்?

அதுதான்டா ஒரே குழப்பமா இருக்கு. டேய் ரவி நீ தான்டா அவள அயார்போர்ட் போய் கூட்டிட்டு வரனும். கூட்டிட்டு வந்து ரூம் ஒன்னு எடுத்து தங்க வைடா. பாவம்டா அவள்.

நீ எங்கன்னு கேட்டா நான் என்னடா சொல்ல?

ஏதாவது சொல்லி சமாளிச்சிடு ரவி பிளீஸ்”

நண்பனின் வார்த்தையை மறுக்க முடியாத ரவி, “அழகான மனைவி, அன்பான குழந்தைன்னு இருக்குறப்போ உனக்கு என்ன கேடுடா?” வாயால் முணுமுணுத்துக் கொண்டே அவ்விடம் அகன்றான்.

இங்கு வத்சலா அயார்போர்டில் சுந்தருக்காக காத்துக் காத்து சோர்வடைந்து போயிருந்தாள். ரவியைக் கண்டதும் தன்னை சுதாகரித்துக் கொண்டு,

“எங்க சுந்தர்…

ஆஹ் அது வந்து ஏதோ அவசர வேலயா வெளிய போய் இருக்கான். அதுதான் உன்ன கூட்டிட்டு வர சொல்லி என்ன அனுப்பினான்”

ரவியின் இந்தப் பதில் கணவனுக்காய் காத்திருந்த வத்சலாவுக்கு கவலையாய் போயிற்று. என்றாலும் காட்டிக் கொள்ளாமல் அவனோடு நடைபோட்டாள்.

வத்சலாவுக்காக சுந்தர் ஏற்பாடு செய்திருந்த அறையில் அவளை விட்டு விட்டு தன்பாட்டில் நகர்ந்தான் ரவி.

அந்த நான்கு சுவருக்குள் தன்னந்தனி தவித்தாள் வத்சலா. தன் நிலைமை எண்ணி கண்ணீர் வந்ததவளுக்கு. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள் தம்பி, தங்கையின் வாழ்க்கைக்காக வெளிநாடு சென்று நினைத்ததொன்று, நடந்ததொன்றாக வெந்து போனாள். “எல்லாமே இருவரும் சேர்ந்து செய்வோம்” என்று அவளுக்காதரவாயிருந்த சுந்தருக்கு ஏற்பட்ட இழப்பு, அவனின் அப்பாவுடைய மறைவு என எல்லாம் எண்ணி வருந்தினாள். தான் ஶ்ரீலங்கா வந்திருப்பதை தன் வீட்டினர் அறிந்தால் என்ன நடக்குமோ என்று பயந்து போனாள்.

காலச்சக்கரம் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது. வத்சலா ஐந்துமாதக் கர்ப்பினியாக இருந்தாள். சுந்தர் எப்போதாவது வருவதும் போவதும் நான்கு, ஐந்து நாட்கள் வத்சலாவுடன் கழிப்பதும் அப்படியே காலங்கள் கடந்தன.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

டேய் ரவி.. ரவி… ரவி.. டேய்.. என்னடா? கோவ வெறியோடு திரும்பிப் பார்த்தான். என் நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்க ரவி பிளீஸ்.. டேய் நான் சவூதியில இருக்குறப்போ உனக்கு எத்துன தடவ சொல்லி இருப்பன்?…

டேய் ரவி.. ரவி… ரவி.. டேய்.. என்னடா? கோவ வெறியோடு திரும்பிப் பார்த்தான். என் நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்க ரவி பிளீஸ்.. டேய் நான் சவூதியில இருக்குறப்போ உனக்கு எத்துன தடவ சொல்லி இருப்பன்?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *