திசை மாறிய தீர்ப்புக்கள்

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 09

  • 10

காலச்சக்கரம் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது. வத்சலா ஐந்துமாதக் கர்ப்பினியாக இருந்தாள். சுந்தர் எப்போதாவது வருவதும் போவதும் நான்கு, ஐந்து நாட்கள் வத்சலாவுடன் கழிப்பதும் அப்படியே காலங்கள் கடந்தன.

சுந்தர் நிலை தடுமாறினான். பொருளாதாரப் பிரச்சினை வேறு தலை தூக்கியது. முதல் மனைவியிடம் பொய் சொல்வது, நேரம் கடந்து வீட்டுக்கு வருவது, குடும்ப விவகாரங்களில் மனைவியை மாத்திரம் கலந்து கொள்ளச் செய்வது, என எல்லாமே சர்வசாதாரணமாய் போயிற்று அவனுக்கு.

எந்த நேரமும் தன் நினைப்பிலும், தங்களுடனும் கலகலப்பாய் இருந்த கணவர் ஏன் இவ்வளவு மாறி விட்டார் என கலங்கிப் போனாள் ராதா. ஆனாலும் கணவனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் சுந்தருக்கான ஊன்றுகோலாய் நின்றாள். எனினும் தன் கணவன் மேல் அவளுக்கு துளியும் சந்தேகம் வரவில்லை.

ராதாவின் இந்த பிணைப்பு சுந்தரையும் வருத்தாமலில்லை. ஏன் தனக்கு இப்படியொரு கலங்கம் ஏற்பட்டது என்ற எண்ணமே சங்கடமாய் போயிற்று அவனுக்கு.

கால ஓட்டத்தின் இடையிலே வத்சலா மிகவும் பாதிக்கப் பட்டாள். கர்ப்பமாயிருந்த அவளை வைத்தியசாலைக்காவது அழைத்துச் செல்ல முடியா பாவியாயிருந்தான் சுந்தர். சுந்தர் ஏன் தன்னை அவன் வீட்டுக்கு கூட்டிப் போவதில்லை என்று தினமும் சிந்திக்கலானாள்.  சுந்தரிடம் கேட்டு விடலாம் என்று நினைத்தாலும் சங்கடமாயிருக்கும் அவளுக்கு.

“வத்சலா… வத்சலா” அழைத்தது சுந்தர் தான்.

என்னங்க?

இன்னக்கி உங்களுக்கு செக்கப்புக்கு போய் வருவோமா?

சரிங்க” இருவரும் கிளம்பி புறப்பட்டனர். வாகனத்தில் ஏறி அமர்ந்தது தான் தாமதம் சுந்தரின் மொபைல் அலறிக் கொண்டே இருந்தது. ஆனால் கவனிக்காதவன் போல் பேசாமலிருந்தான்.

“ஏங்க யாருன்னு பாருங்களேன்” வத்சலா சொல்லியும் அவன் வாங்கிக் கொண்டதாய் விளங்கவில்லை.

வைத்தியசாலைக்கு உள் சென்றதும் மீண்டும் மொபைல் அலற வத்சலாவை உள்ளே விட்டு விட்டு வெளியிறங்கி வந்தான். கணவனின் இந்த நிலைமை வத்சலாவுக்கு சிறிது சந்தேகத்தை கிளறி விட்டது. செக்கப்பை முடித்து விட்டு வெளியே வந்தாள். சுந்தர் யாருடனோ தூரமாய் கதைத்துக் கொண்டிருப்பதை கண்டவள் மெதுவாக அவன் பக்கம் நகர்ந்தாள்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

காலச்சக்கரம் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது. வத்சலா ஐந்துமாதக் கர்ப்பினியாக இருந்தாள். சுந்தர் எப்போதாவது வருவதும் போவதும் நான்கு, ஐந்து நாட்கள் வத்சலாவுடன் கழிப்பதும் அப்படியே காலங்கள் கடந்தன. சுந்தர் நிலை தடுமாறினான். பொருளாதாரப் பிரச்சினை…

காலச்சக்கரம் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது. வத்சலா ஐந்துமாதக் கர்ப்பினியாக இருந்தாள். சுந்தர் எப்போதாவது வருவதும் போவதும் நான்கு, ஐந்து நாட்கள் வத்சலாவுடன் கழிப்பதும் அப்படியே காலங்கள் கடந்தன. சுந்தர் நிலை தடுமாறினான். பொருளாதாரப் பிரச்சினை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *