திசை மாறிய தீர்ப்புக்கள்

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 12

  • 7

இப்போ எல்லாம் என் மேல பிரியம் இல்ல உங்களுக்கு. என்ன, நான் சொல்றதுகள வாங்கிக்கவே மாட்டீங்க, உன் அம்மா ஞாபகம் வருது எனக்கு” சின்னவள் போல் தேம்பித் தேம்பி அழுதவளின் வார்த்தைகள் அவனை சங்கடப் படுத்த, “அப்படி இல்லம்மா” என்ற ஒற்றை வார்த்தையோடு மனைவியை வாரி அணைத்துக் கொண்டான்.

இப்படி இருதரப்பும் முரண்பட்டுக் கொள்வது, பிறகு சமாளிப்பது என போதுமென்றாகி விட்டது சுந்தருக்கு. ஆயினும் தன் வாழ்க்கையில் இப்படியொரு சோதனையை சந்திக்க நேருமென்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆம் அன்று புதன்கிழமை. தன்னருமை மகனுக்கு சிறிது சுகயீனமாய் உணர கொஞ்சம் தூரத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள் வத்சலா. யாரும் தனக்கு தெரிந்த முகங்கள் இல்லாதிருக்க ஒரு மூலையில் சென்றமர்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் தனக்கு மிகவுமே பரீட்சயமான ஒருவர் சுமாராக நான்கு வயதுக் குழந்தையுடன் தூரத்தே நின்றிருப்பதை கண்டாள்.

“யாராக இருக்கும்?” அவளுக்கு மிகவுமே வேண்டப்பட்டவள் தான். ஆம் அவளே தான். வத்சலாவால் நம்ப முடியவில்லை. “எவ்வளவு காலம் கடந்து தன்னுயிர் நண்பியை சந்திக்க வேண்டியிருக்கிறது?” ஆனந்தத்தால் வத்சலாவின் கண்கள் கலங்கி விட, குழந்தையை தூக்கிக் கொண்டு ஆசையோடு தன் நட்பை நாடி சென்றாள். தனக்கென்று யாருமே இல்லையே என்ற வாட்டத்துக்கு ஒத்தடமாய் திருப்தியோடு அவள் அருகாமை நகர்ந்தாள்.

இங்கு வத்சலாவுக்கு வேண்டப்பட்ட அவள் நண்பியும் இந்த சந்திப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. பிள்ளையுடன் தடுமாறிக் கொண்டிருந்த தன் நண்பியை தட்டிவிட, வத்சலாவைக் கண்டதும் சந்தோஷமே உருவாய் அவளை இருகப் பற்றிக் கொண்டாள்.

“ஹே வத்சலா… என்னால நம்ப முடியல்லடி. உண்மையாவே இது நீயா?

என்னாலயும் நம்ப முடியாமத் தானிருக்கு. எப்படி இருக்காய் டி?

ஏதோ இருக்கன் டி. நீ சொல்லேன், உன்னோட புள்ளயா இது?

என்ன கேள்விடீ இது? என்னோடது தான். அது சரி ஏதோ இருக்கேன் னு சொல்றியே? என்னடீ? ஏதும் பிரப்லமா?

வத்சலாவின் கண்கள் குளமாகி விட்டன?

ஹே என்ன நடந்த டீ? சொல்லேன்..

நான் ஏமாந்துட்டன் டீ..

என்ன சொல்றாய் வத்சலா?”

தான் வெளிநாடு சென்றதிலுருந்து, தன் இன்றைய நிலை வரை அத்தனையையும் மனம் விட்டு சொல்லி முடித்தாள். அவள் நண்பியால் இந்தக் கவலையை வாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது.

“எனக்கு இப்போ யாருமே இல்லடீ, என் குடும்பமும் இல்லாம, கட்டியவரும் பெரிசா என்னோட இல்லாம ரொம்ப கஷ்டப் பட்றன்

அப்படி சொல்லாத உனக்குத்தான் இப்போ நான் இருக்கனே..”

தன் நண்பியை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“இந்த ஆம்புளகள” ஏதோ ஒரு ஆவேஷம் அவள் நண்பியிடம் வெளிக்கிளம்ப இருவரினதும் கணவன் சுந்தர் தானென அப்பொழுது தெரியாது.

ஆம் வத்சலாவின் உயிர் நண்பி வேறு யாருமல்ல, சுந்தரின் முதல் மனைவி ராதாவுடனான உரையாடல் தானிது..

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

இப்போ எல்லாம் என் மேல பிரியம் இல்ல உங்களுக்கு. என்ன, நான் சொல்றதுகள வாங்கிக்கவே மாட்டீங்க, உன் அம்மா ஞாபகம் வருது எனக்கு” சின்னவள் போல் தேம்பித் தேம்பி அழுதவளின் வார்த்தைகள் அவனை சங்கடப்…

இப்போ எல்லாம் என் மேல பிரியம் இல்ல உங்களுக்கு. என்ன, நான் சொல்றதுகள வாங்கிக்கவே மாட்டீங்க, உன் அம்மா ஞாபகம் வருது எனக்கு” சின்னவள் போல் தேம்பித் தேம்பி அழுதவளின் வார்த்தைகள் அவனை சங்கடப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *