திசை மாறிய தீர்ப்புக்கள்

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 13

  • 14

ஆம் வத்சலாவின் உயிர் நண்பி வேறு யாருமல்ல, சுந்தரின் முதல் மனைவி ராதாவுடனான உரையாடல் தானிது..

“நீ எதுக்கும் கவலபடாத வத்சலா, என்ன இருந்தாலும் எனக்கு போன் பண்ணு, தனிய இருக்குறதா யோசிச்சா என் வீட்டுக்கு வா, என்ன இருந்தாலும் என்கிட்ட சொல்லு ஓகேயா?

கடவுள் எனக்கு ஆறுதலா உன்ன தருவான்னு நான் கனவுலயும் நம்பல்ல ராதா, உண்மையிலேயே இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாம் நலவுக்கு தான்டீ, வந்த காரியத்த முடிச்சிட்டு கவனமா வீடு போ.

சரி டீ நான் போய் வாரன்”

இருவரும் பிரியாவிடை பெற்று நகர, தன்னுயிர் நண்பியின் நிலை குறித்து மிகவும் நொந்து போனாள் ராதா. வீட்டுக்கு வந்தவள் வழமையான கலகலப்பின்றி ஏதோவொன்றை பறிகொடுத்தாற் போல் அமர்ந்திருப்பதை கண்ட சுந்தருக்கு என்னமோ என்றாகி விட்டது.

‘ராதா என்னம்மா எந்த சந்தோஷமும் இல்லாம இருக்க?

ஒன்னுமில்லங்க, இந்த ஆம்புளகள நம்பவே கூடாது.” மனைவி அவ்வாறு சொன்னதும் தூக்கி வாரிப் போட்டது சுந்தருக்கு.

‘நான் உங்கள சொல்லல்லங்க, என் பெஸ்ட் பிரன்ட் வத்சலாவா எவ்வளவு காலத்துக்கு அப்புறம் இன்னக்கி சந்திச்சன். பாவம் அவள் நிலம ரொம்ப பரிதாபமா இருந்திச்சு’ என கதை சொல்லத் துவங்கினாள். சுந்தருக்கு கை, கால்கள் எல்லாம் நடுங்கத் துவங்கி விட்டன. மனைவி ராதாவின் வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலையாட்டிக் கொண்டிருந்தான். “இந்த மாதிரி ஆம்புளகள் இருக்கவே படாதுங்க” மனைவியின் ஆதங்கம் அவனை வியர்த்துப் போடச் செய்தது.

“சரிம்மா எனக்கு சரியான களைப்பா இருக்கு நான் கொஞ்சம் சாய்ந்து கொள்றன்” ராதாவின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து எழுந்து சென்றான்.

என்றாலும் மனைவி ராதாவின் வார்த்தைகள் அவனுக்கு பெரும் இடைஞ்சலாயிருந்தது. “கடவுளே! ராதா சொல்ற அந்தப் பொண்ணு என் வத்சலாவா மட்டும் இருந்திடவே கூடாது” என மனதால் வேண்டிக் கொண்டேயிருந்தான். தான் செய்ததெல்லாம் தவறென்று அறிந்தும் குறித்த விடயத்தில் தடுமாறிப் போனான். அதற்குள் வீட்டு லேன் லைன் அலற ராதா யாருடனோ சிரித்துக் கொண்டே கதை வளர்ப்பது கேட்டது சுந்தருக்கு. மெதுவாக எழும்பி எட்டிப் பார்த்தான், மனைவியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்,

“சரி வத்சலா கண்டிப்பா வரனும்” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த ராதா, “என்னங்க” என கணவனை தேடி குதூகலமாய் அறைக்குள் வந்தாள்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ஆம் வத்சலாவின் உயிர் நண்பி வேறு யாருமல்ல, சுந்தரின் முதல் மனைவி ராதாவுடனான உரையாடல் தானிது.. “நீ எதுக்கும் கவலபடாத வத்சலா, என்ன இருந்தாலும் எனக்கு போன் பண்ணு, தனிய இருக்குறதா யோசிச்சா என்…

ஆம் வத்சலாவின் உயிர் நண்பி வேறு யாருமல்ல, சுந்தரின் முதல் மனைவி ராதாவுடனான உரையாடல் தானிது.. “நீ எதுக்கும் கவலபடாத வத்சலா, என்ன இருந்தாலும் எனக்கு போன் பண்ணு, தனிய இருக்குறதா யோசிச்சா என்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *