திசை மாறிய தீர்ப்புக்கள்

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 14

  • 22

“சரி வத்சலா கண்டிப்பா வரனும்” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த ராதா, “என்னங்க” என கணவனை தேடி குதூகலமாய் அறைக்குள் வந்தாள்..

மனைவி தன்னை நாடி வருவதனை ஊகித்துக் கொண்டே சுந்தர் ஓடிச் சென்று கட்டிலில் சாய்ந்து கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்தான்.

“என்னங்க.. என்னங்க” அறைக்குள் வந்தவள், கணவனை தட்டி எழுப்ப ஒன்றுமே தெரியாதவன் போல் கண்களை கசக்கிக் கொண்டு மனைவியைப் பார்த்தான்.

“என்னடீ?

என்னங்க நான் சொன்னனே என் பிரன்ட் வத்சலா..

அதுக்கு என்ன இப்போ?

இல்லங்க அவள் இன்னக்கி எங்க வீட்டுக்கு சாப்பாட்டுக்கு வாராளாம். இப்போ தான் போன் பண்ணினாள். நீங்க கடைக்கு போய் சமைக்க ஏதும் எடுத்துட்டு வாரீங்களா?” மனைவி ராதாவின் ஆரவாரம் சுந்தரை தினற வைத்திட்டு.  “இவ்வளவு சந்தோஷமாய் வரவேற்கும் அந்த வத்சலா என்னுடையவளாய் இருந்தால் ராதா தாங்கிக் கொள்வாளா?” நினைத்துப் பார்க்கவும் முடியாமல் இருந்தது சுந்தருக்கு.

என்னங்க, என்ன யோசிச்சிட்டு இருக்க?

அது.. அது ஒன்னுமில்ல ராதா. நான் தேவயானது எல்லாம் வாங்கித் தந்துட்டு முக்கியமான தேவையொன்னா வெளிய போறன். வரக் கொஞ்சம் தாமதம் ஆவும். நீ உன் பிரன்ட் அ நல்லா கவனிச்சி அனுப்பு ஓகே யா..

அப்புடி இல்லங்க, நீங்களும் இருந்தா நல்லா இருக்கும். நான் நீங்க வரும்வர அவள விட்டுக் கொள்றன். கொஞ்சம் நேரகாலத்தோட வர ட்ரை பண்ணுங்க.

ஹ்ம்ம் சரிம்மா” இதற்கு மேல் எதுவும் பேசாது வாய் மூடி அகன்றான் சுந்தர்.

ராதா தன் நண்பிக்கு பிடித்த உணவுகளை விரும்போடு செய்வதில் மும்முரமாக, தேவையானதெல்லாம் வாங்கிக் கொடுத்த சுந்தர் மெதுவாக தலைமறைவானான்.

இங்கு வத்சலாவும் மிகுந்த ஆர்வத்தோடு தன் நண்பியின் இல்லம் செல்ல தயாராகிப் புறப்பட்டாள். அவளின் உள்ளம் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் தித்திக்க எத்தனையோ நாட்களுக்குப் பின் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதனை உணர்ந்து கொண்டாள். ஆனால் இந்த சந்தோஷம் நீண்ட நேரத்துக்கு நிலைக்கப் போவதில்லையென அவளுக்குத் தெரியாது. கடவுளின் விதி அவளின் இதழ் நிறைந்த புன்னகைக்கு முத்திரை குத்திவிடக் கூடாது.

“ராதா… ராதா… கதவைத் தட்டியது வத்சலா தான்.

ஹே இரிடீ வாரன்” சமையலறையில் இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருந்தவள் முன் ஹோலுக்கு விரைந்து கதவை திறந்தாள். தாயின் பின்னால் ஓடி வந்த வாணி

அழகுக் குரலில் “வாங்க ஆன்ட்டீ” என வத்சலாவை வரவேற்க, கையில் இருந்த இனிப்புப் பண்டத்தை வாணியிடம் கொடுத்தாள் வத்சலா.

இங்கு நட்புக்கள் இருவருக்கும் அவ்வளவு சந்தோஷம். இருவர் முகங்களும் ஆனந்தத்தால் நிறைந்திருக்க, வத்சலா தான் பேச்சுப் போட்டாள்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“சரி வத்சலா கண்டிப்பா வரனும்” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த ராதா, “என்னங்க” என கணவனை தேடி குதூகலமாய் அறைக்குள் வந்தாள்.. மனைவி தன்னை நாடி வருவதனை ஊகித்துக் கொண்டே சுந்தர் ஓடிச் சென்று கட்டிலில்…

“சரி வத்சலா கண்டிப்பா வரனும்” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த ராதா, “என்னங்க” என கணவனை தேடி குதூகலமாய் அறைக்குள் வந்தாள்.. மனைவி தன்னை நாடி வருவதனை ஊகித்துக் கொண்டே சுந்தர் ஓடிச் சென்று கட்டிலில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *