திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 16

  • 7

அதற்குள் சுந்தரமும் இவ்வளவு தாமதமாகி  வத்சலா போயிருப்பாள் என்ற நினைப்பில. மனைவி ராதாவை சமாளிக்கும் திட்டத்தோடு வீட்டுக்குள் நுழைகின்றான்.

“அப்பாஹ்! வந்துட்டீங்களா? இவ்வளவு நேரமா உங்களுக்காகத் தான் காத்துட்டு இருக்கோம்” மனைவி ராதா பரவசத்தில் மகிழ, “இந்த வத்சலா இன்னும் போவல்லயா?” படபடத்தது சுந்தருக்கு.

“வத்சலா வத்சலா…” தன் நண்பியின் நாமத்தை சொல்லி கூப்பாடு போட்டுக் கொண்டே ராதா அறைக்குள் செல்ல நடுங்கத் துவங்கி விட்டான் சுத்தர்.

ஆனால் இங்கு தன் கணவனே தன்னவளதும் கணவனென்பதை அறிந்த வத்சலா தன் நட்புக்கு தான் துரோகம் செய்து விட்டோமே என்ற ஆத்திரத்தில் மீண்டும் ராதாவின் வதனத்தை காண அருகதையற்றவளாய், அழுது கொண்டே வீட்டின் பின் வாயிலால் கிழப்பிப் போயிருந்தாள்.

“வத்சலா.. வத்சலா” மூளை முடுக்கெல்லாம் கூட வத்சலாவை காணாது தேடிய ராதாவுக்கு எதுவும் புரியாமலிருந்தது.

“என்னங்க இந்த ரூம் ல தான் இருந்தாள், அதுக்குல்ல எங்க போனாள் னு தெரியல்ல” சுந்தருக்கு விடயம் தெளிவாகி விட்டது.

“அவள் என்கிட்ட சொல்லாம போயிருப்பாளா? நான் ஏதும் தவறா நடந்து கொண்டேனா?” ராதா குழப்பிப் போக, இனியும் தாமதிக்க விரும்பாமல் வண்டியை எடுத்துக் கொண்டு வத்சலாவைக் காண விரைந்தான் சுந்தர்.

“இவருக்கு என்ற ஆவிட்டு? எங்க இவ்வளவு அவசரமா கிளம்பிப் போறாரு?”

“என்னங்க, என்னங்க?” ராதா அழைத்தும் வாங்கிக் கொள்ளாமல் பறந்தான் சுந்தர். ராதாவுக்கு எல்லாமே ஏதோ தப்பாக நடப்பது போல் இருந்தது.

தன் கணவன் இவ்வளவு பதற்றம் கொள்ள என்ன நடந்ததென்பதே அவளுக்கு பெரும் சந்தேகமாக இருக்க, அடுத்த வீட்டு முச்சக்கர வண்டிக்கு வர சொல்லி சுந்தர் சென்ற திசையிலே அவனைப் பின் தொடர்ந்து பயனமானாள் ராதா..

சுந்தர் தன் வத்சலாவின் நினைப்பில் பதறிக் கொண்டிருந்தான். “நான் எல்லா உண்மையையும் உன்கிட்ட சொல்லி விட்றன் வத்சலா, என்ன மன்னிச்சிக்க, என்ன வேணாம் னு மட்டும் சொல்லிடாத” தனக்குத் தானே கதைத்துக் கொண்டு, சோகமே உருவாய் பயணத்தை தொடர்ந்தான்.

ஆனால் தன் மூத்த மனைவி ராதா தன்னைப் பின் தொடர்ந்து வருவாளென சுந்தர் கனவிலும் நினைத்திருக்கவில்லை

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அதற்குள் சுந்தரமும் இவ்வளவு தாமதமாகி  வத்சலா போயிருப்பாள் என்ற நினைப்பில. மனைவி ராதாவை சமாளிக்கும் திட்டத்தோடு வீட்டுக்குள் நுழைகின்றான். “அப்பாஹ்! வந்துட்டீங்களா? இவ்வளவு நேரமா உங்களுக்காகத் தான் காத்துட்டு இருக்கோம்” மனைவி ராதா பரவசத்தில்…

அதற்குள் சுந்தரமும் இவ்வளவு தாமதமாகி  வத்சலா போயிருப்பாள் என்ற நினைப்பில. மனைவி ராதாவை சமாளிக்கும் திட்டத்தோடு வீட்டுக்குள் நுழைகின்றான். “அப்பாஹ்! வந்துட்டீங்களா? இவ்வளவு நேரமா உங்களுக்காகத் தான் காத்துட்டு இருக்கோம்” மனைவி ராதா பரவசத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *