திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 19

  • 14

ஆம் சுரேஷும் வயதுகளால் வளர உயர்தரம் வரை வந்துவிட்டான். வாணிக்கு பெண் பார்க்கும் படலமும்  ஆரம்பித்து விட்டது. அந்த காலத்துக்குள் உண்மையில் சுரேஷ் அப் பேரழகியை பார்த்திருக்கக் கூடாது. சாதாரண தரத்தில் திறமை சித்தி கொண்ட தன் மகன் உயர்தரமென்று வந்ததும் உயர்ந்த பாடசாலையில் பயில வேண்டுமென்று சுந்தர் நினைத்தமையினால் வந்த விளைவு தான் அது.

முன்பு போல் தன்னோடு தன்னுயிர் தம்பி நெருங்கிப் பழகாமல் ஒதிங்கிருக்கும் நெருடல் வாணியை விட்டு வைக்கவில்லை. எத்தனையோ தடவைகள் ‘நீ முன்னப் போல இல்ல ரொம்ப மாறிட்டாய்’ ன்னு சொல்லியிருந்தும் சுரேஷில் மாற்றங்கள் காணா அவள் உள்ளம் வருத்தம் கொண்டது. ஆயினும் அனைத்துக்கும் காரணம் அந்த பேரழகி தானென்று வாணிக்கு தெரியாது.

ஆம் அவள் பெயர் வசீகரா. பார்க்கப் பெறிய இடத்துப் பிள்ளை போல் இருப்பாள். அவளுக்கென்று பிரத்தியேக பிரமாண்டமான கார் பாடசாலை தேடி வரும். போவது வருவது எல்லாம் அந்தக் காரில் தான். அதையும் விஞ்சிய அவளழகு யாரையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கச் செய்யும். நீண்ட தடிப்பமான கூந்தலை அடுக்காய் பிண்ணி, நேர்த்தியாக ஆடையணிந்து, சிறிதாய் கொஞ்சமாய் தொங்கும் காதணி அணிந்து, பார்க்க மிகவுமே அழகாயிருப்பாள். ஆனால் யாரைக் கண்டும் அவள் சஞ்சலம் கொண்டதில்லை. எந்த ஆடவருடனும் வரையறை தாண்டி பழக்கம் வைத்ததுமில்லை.

“வசீகரா.. வசீகரா..

ஆ இரிடீ வாரன்” நட்புக் கும்பலில் அவள் தனித்துவமாய் தானிருந்தாள்.

சுரேஷ் கற்கும் அதே வகுப்பு வசீகராவுக்கும் உரியது. என்றும் இதழ் வாடாமல் சிரித்துக் கொண்டே எதையும் செய்யும் அவள் வதனம் கண்டே அவளுக்கென்று நிறைய சகபாடிகள் அந்த வகுப்பிலிருப்பார்கள்.

அந்த சூழல், அங்குள்ளவர்கள் எல்லாம் சுரேஷூக்குப் புதிதாய்ப் போக யாருடனும் பெரிதாக கதை வளர்க்காமல் தன்பாட்டிலிருந்தான்.

‘நம்ம கிலாஸ் ல புதிசா ஒரு பையன் வந்திருக்கான் டீ’ எல்லோர்ப் பார்வையும் அவள் பக்கமிருந்தும் வசீகரா அவனைக் கண்டு கொள்ளவில்லை.

பொதுவாக பெரிய பாடசாலைகளில் ஓரளவுக்கேனும் பகிடிவதை இருக்கும். சுரேஷின் கம்பீரம் பகிடிவதை செய்யாதோரையும் சீண்டிப் பார்க்க வைக்கும். சரி அந்த நட்புக் கூட்டத்தில் சுரேஷை பகிடி செய்ய பொருத்தமானவர் யார்? “இவனுக்குன்னா கேர்ள்ஸ் ல யாராவது தான் ரெக்கிங் பண்ண போடனும்”

“வசீகரா முன்னால வா

ஹே புதுப் பையா நீயும் தான் முன்னால வா” அடக் கடவுளே! போயும் போயும் இந்த சுரேஷுக்கு பகிடிவதை செய்ய இவளா தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்? இனித் துவங்கும் இவர்களின் சமாச்சாரம்..

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

 

ஆம் சுரேஷும் வயதுகளால் வளர உயர்தரம் வரை வந்துவிட்டான். வாணிக்கு பெண் பார்க்கும் படலமும்  ஆரம்பித்து விட்டது. அந்த காலத்துக்குள் உண்மையில் சுரேஷ் அப் பேரழகியை பார்த்திருக்கக் கூடாது. சாதாரண தரத்தில் திறமை சித்தி…

ஆம் சுரேஷும் வயதுகளால் வளர உயர்தரம் வரை வந்துவிட்டான். வாணிக்கு பெண் பார்க்கும் படலமும்  ஆரம்பித்து விட்டது. அந்த காலத்துக்குள் உண்மையில் சுரேஷ் அப் பேரழகியை பார்த்திருக்கக் கூடாது. சாதாரண தரத்தில் திறமை சித்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *