திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 21

  • 9

வத்சலா ஏதோ நெருடலாய் உணர, திரும்பித் திரும்பி சுரேஷினை நோட்டமிட்டாள். அவனின் வாடிய வதனம் அவளையும் தான் சங்கடப்படுத்தியது. எப்படியாவது சுரேஷிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென துடித்தாள்.

அன்றைய நாள் இப்படியே முடிய, அடுத்த நாள் காலை சுரேஷ் பாடசாலை வரும் போது வசீகரா மட்டும் தான் வந்திருந்தாள். அவளைக் கண்டதும் கோவமாய் வந்தது அவனுக்கு. ஆயினும் காட்டிக் கொள்ளாமல் மெதுவாக அவ்விடம் அகன்று போக முற்பட்டவனை,

“ஹே சுரேஷ்..” தடுத்தது அவள் தான்.

“சுரேஷ் ஒரு நிமிடம் பிளீஸ்” முன்னெடுத்த காலை பின்னால் வைத்து திரும்பிப் பார்த்தான்.

“சுரேஷ் அது வந்து, ஐ யம் ரியலி சொறி. நான் வேணும்னே அப்படி நடந்துக்க இல்ல, நான் உங்கள பகிடி பண்ண முடியாதுன்னு சொல்லி இருந்தா இங்க இருக்குறவங்க என்ன தப்பா பார்த்திருப்பாங்க, தட் மீன் எனக்கும் உங்களுக்குள்ளயும் ஏதோ இருக்குன்னு நெனச்சிருப்பாங்க. பிளீஸ் பண்ணி எதயும் மனசுல வெச்சிக்காதிங்க

இட்ஸ் ஓகே” எளிமையான புன்னகையுடன் அவ்விடம் அகன்றவனின் கட்டழகு அப்பொழுது தான் அவளுக்கு விளங்கியது.

“ஹேன்ட்சம் கய்” தன்னை அறியாமல் அவள் நா உச்சரிக்க, சுரேஷ் மீது ஒருவித அன்பு உருப்பெற்றது. இடைக்கிடை அவனை பார்ப்பதும், அவன் எழிலை ரசிப்பதும், அவன் புகழாரம் உரைப்பதும் பழகிப் போகிட்டு வசீகராவுக்கு.

அவள் நட்புக்களுக்கும் இவ்விடயம் தெரிந்திருக்க, “இவள் வசீகராவா தானா?” என அதிசயித்துப் போனார்கள். சுரேஷுக்கும் அவளின் செயற்பாடுகள் வித்தியாசமாய் தானிருந்தது. ஆனால் எல்லாம் தன்னுயிர் சகோதரியிடம் கொட்டித் தீர்ப்பவன் இந்த விடயத்தை மட்டும் முழுதாக மறைத்தான். அவள் அழகிய உருவம் அவன் உள்ளத்திலும் தான் அழியாத இடம் பிடித்திருந்தது.

எத்தனையோ பெண்களால் மயக்க முடியாத இவனும், எண்ணற்ற ஆண்களால் வசப்படுத்த முடியாத இவளும் தமக்குள் தம்மை மறந்து, இருவர் அழகிலும் உறைந்து போனார்கள்.

இடைவேளை நேரம் “சுரேஷ், சுரேஷ்” அழைத்தது வசீகரா தான்..

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

வத்சலா ஏதோ நெருடலாய் உணர, திரும்பித் திரும்பி சுரேஷினை நோட்டமிட்டாள். அவனின் வாடிய வதனம் அவளையும் தான் சங்கடப்படுத்தியது. எப்படியாவது சுரேஷிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென துடித்தாள். அன்றைய நாள் இப்படியே முடிய, அடுத்த…

வத்சலா ஏதோ நெருடலாய் உணர, திரும்பித் திரும்பி சுரேஷினை நோட்டமிட்டாள். அவனின் வாடிய வதனம் அவளையும் தான் சங்கடப்படுத்தியது. எப்படியாவது சுரேஷிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென துடித்தாள். அன்றைய நாள் இப்படியே முடிய, அடுத்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *