திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 23

  • 18

இந்த சூழ்நிலையில் தான் அன்று சுரேஷின் செவிகளில் அந்த பேரிடி வந்து விழுந்தது. ஆத்திரமும் ஆவேஷமும் மேலிட கத்திக் கதறினான்.

ஏன்ட அம்மா யாரு? நான் இந்த வீட்டு புள்ள இல்லயா.. சொல்லுங்க அப்பா? ஏன்ட அம்மா எங்க இருக்காங்க?

“சுரேஷ்”

ஆறுதலாய் அவனைப் பற்றினாள் சுந்தரின் மூத்த மனைவி ராதா..

“அம்மா, அம்மா ன்னு வாய் நிறைய உங்களத் தானே கூப்பிடுவன்? எனக்கு எந்த குறையும் நீங்க வைக்கல்லம்மா. நான் உங்க புள்ள இல்லயா? எனக்கு சொல்லுங்கம்மா, நான் உங்க புள்ள இல்லயாமா?” ஒப்பாரி வைத்தழுதான்.

இவ்வளவுக்கும் சுந்தர் எதுவும் பேசவில்லை.. வீடே குழம்பிப் போயிருந்தது.

“அழாத தம்பி” பங்கில் இணைந்த கொண்ட மூத்தவள் வாணியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். “நான் உன் சொந்த தம்பி இல்ல அக்கா, அப்படியிருந்தும் எதுக்கு என்மேல இந்தளவு பாசம் காட்டின? சொல்லு அக்கா, சொல்லு..”

“இப்படி சின்னவன் போல அழாத தம்பி, பிளீஸ்..

நான் என் அம்மாவ தேடி போகப் போறன்” ஆத்திரம் ஆவேசமாய் மாறிப் போனது.

“உன் அம்மா இங்க இல்ல” வாய் மூடி இருந்த சுந்தர் எடுத்த எடுப்பிலேயே சொல்லி விட்டான். “ஏன் என் அம்மாவ என்ன செஞ்சீங்க? என்கிட்ட இதுக்கு மேலயும் சொல்லாம இருக்க ஏலாது. சொல்லுங்க..

சுரேஷ் கொஞ்சம் அமைதியாகு. இந்தா முதல்ல இந்தத் தண்ணிய குடி. அப்புறம் ரிலக்ஸ் ஆஹ் பேசலாம்” அவனைத் தேற்றினாள் ராதா.

முன் சோபாவில் உடைந்து போய் அமர்ந்தவனை, ஆறுதல் படுத்த யாராலும் முடியவில்லை.

“அம்மா, அம்மா” என அவன் புலம்பிக் கொண்டிருந்தான். இதற்கு மேல் எதையும் மறைக்க விரும்பா சுந்தர் மெதுவாக வாய் திறந்தான்.

“இவங்க தான் உன்னோட அம்மா” சுந்தரின் மொபைலில் கிடந்த வத்சலாவின் புகைப்படத்தை அவள் அன்பு மகன் அன்று தான் காண்கிறான்”

இதழ் வாடா புன்னகையுடன் தன்னை தன் தாய் பார்த்துக் கொண்டிருப்பதான உணர்வு மேலிட, அவனின் கம்பீரம் தோற்றுப் போகிறது. “நீங்க இப்படி அழகா இருப்பீங்களா அம்மா? என்னவிட்டு எங்க போனீங்க?” புகைப்படத்துடன் பேசிக் கொண்டிருந்தவனுக்கு விளக்கம் கொடுக்கிறான் சுந்தர்.

தந்தையின் வார்த்தைகளில் இருந்த சுயநலமும், தப்பான காரியங்களும் சுரேஷை மேலும் வதைக்க, அப்போ என் அம்மாவ கொலை செஞ்ச படுபாவி நீங்க தானே?” ஆவேசமாய் கத்திக் கொண்டு எழுந்தான்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

 
 

இந்த சூழ்நிலையில் தான் அன்று சுரேஷின் செவிகளில் அந்த பேரிடி வந்து விழுந்தது. ஆத்திரமும் ஆவேஷமும் மேலிட கத்திக் கதறினான். ஏன்ட அம்மா யாரு? நான் இந்த வீட்டு புள்ள இல்லயா.. சொல்லுங்க அப்பா?…

இந்த சூழ்நிலையில் தான் அன்று சுரேஷின் செவிகளில் அந்த பேரிடி வந்து விழுந்தது. ஆத்திரமும் ஆவேஷமும் மேலிட கத்திக் கதறினான். ஏன்ட அம்மா யாரு? நான் இந்த வீட்டு புள்ள இல்லயா.. சொல்லுங்க அப்பா?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *