திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 24

  • 7

தந்தையின் வார்த்தைகளில் இருந்த சுயநலமும், தப்பான காரியங்களும் சுரேஷை மேலும் வதைக்க, அப்போ என் அம்மாவ கொலை செஞ்ச படுபாவி நீங்க தானே?” ஆவேசமாய் கத்திக் கொண்டு எழுந்தான்.

“அப்படியெல்லாம் பேசாதடா, உங்க அம்மாவோட மரணத்துக்கு அப்புறம் இன்னக்கி வரயும் நான் நானாகவே இல்லடா. நான் செஞ்ச தப்புக்கு கடவுள் என்ன தண்டிச்சிட்டுத் தானிருக்கான். மனசுவிட்டு சிரிச்சு ரொம்ப நாள் ஆவிட்டுட்டா.. என்ன செய்யப் போனாலும் உங்க அம்மா ஞாபகம் தான் வரும். எனக்கு எப்படி சொல்லன்னு தெரியல்ல. இந்த அப்பா பாவி தான். படுபாவிடா நான். ஆ.. ஆனா நான் இப்படியெல்லாம் எதிர்பார்க்கல்ல, நான் எதிர்பார்க்கல்லடா..” மகனின் கையைப் பிடித்துக் கொண்டு மனதில் இருக்கும் பாரம் குறைய அன்று தான் மனம் விட்டு அழுதான் சுந்தர்.

“அப்பா..” தந்தையைப் பற்றிக் கொண்டு இருவருமாய் அழ வீடே சோகமாய்க் கிடந்தது.

“சுரேஷ் உனக்கு நான் இருக்கன்ல, இப்படி அழாதப்பா, இந்த அம்மாவால தாங்க ஏலாம இருக்கு” ராதாவின் கனிவு கலந்த வார்த்தை அவனை இன்னும் அழ வைத்தது.

“நான் உங்க வயித்தில பிறக்காத புள்ளயா இருந்தும், எனக்கு எந்த வேற்றுமையும் நீங்க காட்டல்லம்மா, எங்க அம்மா இருந்திருந்தாக் கூட இவ்வளவு நல்லா என்ன பார்த்திருப்பாங்களான்றது சந்தேகம். உங்க இந்த நல்ல மனசு எப்பவும் உங்கள கைவிடாதும்மா,

வாணி நீ கூட உன் சொந்த தம்பியா என்ன பார்த்துக் கொண்டீயே! என் கூடவே இருந்து என் எல்லா விஷயங்களிலயும் பக்கபலமா இருந்திருக்காய், என்னால எதயும் மறக்க முடியல்ல. என்னால மறக்கவும் முடியாது”

இந்த சோக மாநாடு முடியாது நீள, அறைக்குள் சென்ற சுரேஷ் தன் அறைக்கதவை பலமாய் சாத்திக் கொண்டான். அவனை தடுக்க ராதா முன் வந்த போதும் “அவனக் கொஞ்சம் தனிய விடு ராதா” என்ற சுந்தரின் வார்த்தைக்கு தலையாட்டி நின்றாள்.

வீட்டு நிலைமையும், எது தனது மகனுக்கு தெரியக் கூடாதென நினைத்தேனோ அது தெரிந்து விட்ட சோகமும் சுந்தரை வெகுவாகத் தாக்க ஓர் மூலையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான்.

இங்கு காலையிலிருந்து சுரேஷுக்கு அழைப்பு செய்த வசீகரா எதற்கும் மறு பதிலில்லா நிலை கண்டு சுரேஷின் வீட்டுக்கே வந்து விட்டாள்.

வீட்டு முன் கதவு தட்டப்பட, நிறைந்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சுந்தர் தான் சென்று கதவைத் திறந்தான்.

“அங்கிள் இது சுரேஷ்ட வீடு தானே? சுரேஷ் இருக்காறா?

ஓம் நீங்க??

வசீகரான்னு சொல்லுங்க” எதுவும் அறியா சுந்தர் குழப்பிப் போனான். வாயிலில் ஓர் பெண் குரல் கேட்டு ராதாவும், வாணியும் சுந்தரின் பின்னால் வந்து நின்றார்கள்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

தந்தையின் வார்த்தைகளில் இருந்த சுயநலமும், தப்பான காரியங்களும் சுரேஷை மேலும் வதைக்க, அப்போ என் அம்மாவ கொலை செஞ்ச படுபாவி நீங்க தானே?” ஆவேசமாய் கத்திக் கொண்டு எழுந்தான். “அப்படியெல்லாம் பேசாதடா, உங்க அம்மாவோட…

தந்தையின் வார்த்தைகளில் இருந்த சுயநலமும், தப்பான காரியங்களும் சுரேஷை மேலும் வதைக்க, அப்போ என் அம்மாவ கொலை செஞ்ச படுபாவி நீங்க தானே?” ஆவேசமாய் கத்திக் கொண்டு எழுந்தான். “அப்படியெல்லாம் பேசாதடா, உங்க அம்மாவோட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *