திருமணத்தை எதிர் நோக்கியவர்களுடன் ஒரு சில நிமிடங்கள்

  • 60

ஆன்மீகத் தலைமைகள் சமூகத் தலைமைகளின் கவனத்திற்கு.

தம்பதிகளிற்கான உளவளத்துணை செயன்முறைகளின் மூலம் ஆரோக்கியமானதும், மகிழ்ச்சிகரமாணதுமான குடும்ப அமைப்பு தோற்றுவிப்பதுடன் திருமணத்திற்கு தயார் படுத்துதல் அல்லது பிரச்சினை வருமுன் தவிர்த்தல், பிரச்சினை தீர்த்தல், திருமண உறவின் மூலம் அதிஉச்ச மகிழ்ச்சியை அடைதல் போன்ற விளைவுகளை தோற்றுவிப்பது அவசியமடைகிறது. இதன் மூலமே உளவளத்துணை செயன்முறையானது பூரண இடையீட்டுத்திட்டமாக குடும்ப பிரச்சினைகளுக்கு அமையும்.

அதனடிப்படையில் திருமணம் தொடர்பான உளவளத்துணை செயற்பாடுகளை தொகுத்து நோக்கும் சமயத்தில் பொதுவாக மூன்று அங்கங்களை நோக்கலாம்.

  1. Premarital counseling ( திருமணத்திற்கு முந்தியஉளவளத்துணை)
  2. Marital counseling ( திருமண உளவளத்துணை)
  3. Sexual counseling ( பாலியல் உளவளத்துணை)

இம்மூன்று செயன்முறைகளின் மூலம் பிரதானமாக உளவளத்துணை செயன்மறையில் தம்பதியினர் உள்வாங்கப்படுகின்றனர்.

கலாச்சார விழுமியங்கள் அடிப்படையிலான நாடு என்ற வகையில் இலங்கையின் முக்கிய சமூக முகவர் அங்கமாக குடும்பம் காணப்படுகிறது. இலங்கையின் பண்டைய வரலாறு தொடக்கம் குடும்பம், திருமணம் என்பது இருக்கமான உறவு நிலையாகும் சமூக அங்கீகார செயன்முறையாகவும் நோக்கப்பட்டு வருகிறது . ஆனால் அன்றிய காலகட்டத்தில் திருமண உறவு விரிசல் அதிகரிக்கின்றமை என்பவற்றின் அடிப்படையான அவதானத்தில் தயார் படுத்தப்படாத தம்பதியினர் காரணமாக இனங்காட்டப்படுகின்றர். இதனடிப்படையில் Premarital counseling ( திருமணத்திற்கு முந்தியஉளவளத்துணை) தொடர்பான முறைப்படுத்தப்பட்ட அவதானம் சமூக, சமய தலைமைகள், குடும்ப தலைமைகள், குடும்ப உறுப்பினர்கள் என பலசாராருக்கும் அதிகம் அவசியமடைகிறது.

Pre marital counselling ( திருமணத்திற்கு முந்தியஉளவளத்துணை) என்பது திருமணம் முடிப்பதற்கு எதிர்பாரத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகளை திருமணத்தின் பின்னர் கணவன் அல்லது மனைவி என்ற நிலையில் வைத்து தமது பொறுப்புக்களையும் , கடமைகளையும் ஏற்று நடப்பதற்கு உடல் , உள ரீதியில் தயார் படுத்துவதே ஆகும்.

திருமணம் என்பது அழகாகத் திட்டமிட்டு முடிந்த அளவுக்கு தகுதியுடன் செய்யும் ஒரு கருத்துள்ள நிகழ்வாகும். ‘A Practical wedding: Creative Solutions for Planning a beautiful affordable and Meaningful Celebration’ என்ற அரிய வரைவிலக்கணத்தை Meg knee என்ற அறிஞர் வழங்கியுள்ளார். அதாவது திருமணம் என்பது திட்டமிட்டு தயார்படுத்தப்பட்டதன் பின் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. அதற்கான தயார் படுத்தலே திருமணத்திற்கு முன்னறான உளவளத்துணை ஆகும்.

“திருமணத்திற்கு முன்னைய உளவளத்துணை என்பது அங்கீகரிக்கப்பட்ட உளவளத்துணையாளர்களின் மூலம் திருமணத்திற்கு தயாராகும் தம்பதியினரிற்கு உதவும் ஒருவகை உளவளத்துணை கோட்பாடாகும் (type of therapy) ” என Mayo Clinic எனும் இணைய சிகீட்சைப்பக்கம் வரையறை செய்கிறது.

இச்செயன்முறையானது ஆளிடை தொடர்பாடல் விருத்தி, தகவல் பரிமாற்றம், தவாறான தகவல்களை சீரமைத்தல், மதிப்பீடு செய்தல் போன்ற இலக்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் போது தொடர்பாடல் மேன்பாடு, மோதல் தீர்வு, திருமண எதிர்பார்ப்பு, ஆளுமை, பொருளாதாரம், பாலியல் எதிர்பாரப்பு, பிள்ளை வளர்ப்பும் குழந்தைகளும், காதல் வங்கி, ஆன்மீகம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படும்.

இதன் போது Finances (பொருளாதாரம்), Communication (தொடர்பாடல்), Beliefs and values (நம்பிக்கைகளும் விலுமியங்களும்), Roles in marriage (திருமணத்தில் பாத்திரங்களும் வகிபங்கும்), Affection and sex (கவர்ச்சியும் காமமும்), Desire to have children (பிள்ளைக்கு தயாராகல்), Family relationships (குடும்ப உறவு முறைகள்) Decision-making (தீர்மானங்கள் எடுத்தல்), Dealing with anger (கோபத்தில் உள்ளவருடன் தொடர்பாடல்), Time spent together (இணைந்து வாழ்வதற்கு நேரம் ஒதுக்குதல்) போன்ற பல தலைப்புக்களில் தம்பதியினர் அறிவூட்டப்படுவதுடன் தயார்படுத்தப்படுவர்.

இதனை செயற்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக American Association for Marriage and Family Therapy’, (AAMET) காணப்படுகிறது. இது உதவி வேண்டுபவர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் உதவி நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தின் ஆலோசனையில் கீழ்காணும் விடயங்கள் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.

  • பொருளதார நிலை (Finances)
  • தொடர்பாடல் (Communication)
  • நம்பிக்கைகளும் விழுமியங்களும் (Beliefs and valuse)
  • பாலியல் கவர்ச்சி (affection and Sex)
  • குடும்ப உறவு (Family relationships)
  • தீர்மானம் எடுத்தல் (Decision Making)
  • கோபம் பற்றிய கருத்துக்கள் (Dealing with anger)
  • இருவரும் ஒன்றாக இருக்கும் நேரம் (Time spent together)
  • கல்வியும் அனுபவமும் (Education and experience)
  • வேலை செய்யும் சூழ்நிலை (Office Treatment)

கனடிய, அமெரிக்க மக்கள் திருமணத்திற்கு முன் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உளவளத்துணையாளரை நாடி ஒரு பரீட்சை எழுதி அங்கீகார சான்றிதழுடன் திருமணம் செய்யும் அளவிற்கு இத்துறை வளர்ச்சியடைந்துள்ளது. இதனது முக்கியத்துவத்தை பல வியூகங்களில் நோக்கலாம்

பல கலாச்சாரத்தினதும் வலியுருத்தப்பட்ட விடயமாக இது காணப்படுகிறது.

பொதுவாக பல கலாச்சாரமும் இது போன்ற திருமணத்திற்கு தயாராகுதல் என்ற நிலையை அதிகம் வலியுறுத்துகின்றன. புத்த மதத்தினர் திருமணத்திற்கு முன்னர் தேவாலயத்திற்கு தரிசித்து திருமணம் தொடர்பான ஆலோசனைகளை பெரும் வழக்காரு காணப்படுவதுடன் புத்தரும் ஒரு ஆடவன் தனது மனைவியிற்கு உபகாரம் செய்வதற்கான ஜந்து காரணிகளையும் அடையாளமிடுகின்றார். மேலும் சிகாலோவாத சுத்ததில் ஒரு மனிதன் தவிர்க்க வேண்டிய 14 பிரச்னைக்குறிய நடவடிக்கைகளை அடையாளம் காட்டி கணவனது பிரதான 5 கடமைகளையும் மனைவியின் கடமைகளையும் அறிவூட்டுகிறது . மேலும் இஸ்லாமிய மதத்திலும் நபிகள் நாயகம் அவர்கள் மனைவியை தெரிவு செய்வதற்கான காரணம் என்பவற்றை நான்கு விடயங்களாக பட்டியலிடுகிறார். பொதுமையாக அனைத்து கலாச்சாரமும் வேண்டிநிற்கும் விடயமாக திருமணத்திற்கு முன்னைய ஆலோசனை அமைகிறது.

அதிகரித்து வரும் விவாகரத்தினை குறைப்பதற்கு.

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஆண்டில் நடைபெற்ற ஆய்வொன்றின் பிரகாரம் 175, 000 திருமணம் வருடாந்தம் நிகழ்வதாகவும் அவற்றில் 50% விவாகரத்து பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாளாந்தம் 400 பேர் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்தாக ஒரு புள்ளிவிபரம் கூருகிறது. மேலும் இலங்கையில் 1.5% குடிமக்கள் விவாகரத்தில் ஈடுபட்டவர்கள் காணப்படுவதாக 2018 இல் ஒரு புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது.

திருமணத்திற்கு முற்பட்ட உளவளத்துணை மேற்கொள்வதன் மூலம் தம்பதியினர் தமது பொறுப்புக்கள், கடமைகள், தீர்மானம் எடுத்தல், பொருத்தப்பாடு பார்த்தல் என்பவை தொடர்பிலான அறிவும் திறனும் மேன்படுத்தப்பட்ட நிலையத்தில் திருமண பந்தத்தில் இணைவர். இதன் மூலம் திருமண வாழ்க்கையை ஆரோக்கியமாக கொண்டு செல்வதுடன் பிரச்சினை தீர்க்கும் (conflict resolution ) திறனும் வளர்க்கப்பட்டிருக்கும். இதன் மூலம் பிரச்சினைகளை முறையாக தீர்ப்பதன் நாட்டின் விவாகரத்து விகிதம் குறையும்.

கணவன் மனைவிக்கு மத்தியிலான விருப்பு வெறுப்புக்களை பரஸ்பரம் புரிந்து கொள்வதற்கு.

மேலைத்தேய நாடுகளின் கலாச்சாரத்தில் திருமணத்திற்கு முன்னரான சந்திப்பு, காதல் தொடர்பு தொடக்கம் திருமணத்திற்கு முன்னைய உடலுறவு ( pre marital sex) வரையில் ஏற்புடையதாக பொது சனத்திற்கு மத்தியில் மாறியுள்ளது. ஆனால் நமது கலாச்சாரத்தின் அடிப்படையில் காதல் மற்றும் திருமணத்திற்கு முன்னைய தனிமையிலான சந்திப்புக்கள் கலாச்சார சீர்கேடாகவே நோக்கப்படுகின்றன. இதன் மூலம் நிச்சிய திருமண ( proposed marriage) தம்பதியினரின் முன்கூட்டிய அறிமுகமின்மை காரணமாக இருவருக்கு மத்தியிலான விருப்பு, வெறுப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு இன்மை நிகழ்கிறது.

உளவியல் நிபுணர் john Gary தனது Man are from Mars , women are from Venus எனும் நூலில் குறிப்பிடுவது போன்று கணவன் , மனைவிக்கு மத்தியிலான விருப்பு வெருப்புக்கள் வேறுபட்டு காணப்படுகின்றது. இந்நிலையில் தமக்கிடையே பொதுவான விருப்பு, வெறுப்புக்கள் (commom like and dislike ) தொடர்பான புரிந்துணர்வுடன் திருமண வாழ்வில் நுலைவது அவசியமடைகிறது. இதற்கு மதரீதியாக ஒரு நெருக்கமானவரின் (மஹ்ரமி) முன்னிலையில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமும் உண்டு. இந்த செயல்முறையை திருமணத்திற்கு முன்னைய உளவளத்துணை (Premarital counseling) சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

சிறந்த தொடர்பாடல் விருத்திக்கு

தொடர்பால் இன்றி ஆரோக்கியமான உறவு கட்டியெழுப்பப்பட முடியாது. கணவன் மனைவிக்கு மத்தியிலான ஆரோக்கியமான தொடர்பாடலே ஆரோக்ககியமான தம்பதியினர் உறவினை உருவாக்கும். தொடர்பாடல் எனும் பட்சத்தில் வெரும் வாயாடல் மாத்திரமின்றி சைக்கினை மற்றவர் பேசுவதை கேட்டல் (Active Listening), கண் தொடர்பு (Eye contact) போன்ற பல விடயங்களும் உள்ளடக்கப்படும். பொதுவாக ஆண்களின் தொடர்பாடல் முறையும் பெண்களின் தொடர்பாடல் முறையும் அதிகம் வேருபாடானவை. ஓர் ஆண் நாளொன்றிக்கு 5000 வார்த்தைகள் கதைத்தால் ஒரு பெண் 20000 வார்த்தைகள் கதைப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

இருவருக்கு மத்தியில் அழகானதும், அன்புகரமானதும், சமயோசிதமானதுமான உரையாடல் மேம்பாட்டிற்கும் one-on-one therapy போன்ற அமர்வுகளின் மூலம் திருமணத்திற்கு முன்னைய உளவளத்துணை( Premarital counseling) சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது.

பொருளாதார ரீதியான தயார்படுத்தல் மற்றும் தகுந்த எதிர்பார்ப்பு.

பொருளாதாரரீதியாக மனைவி கணவனிடம் பரந்த எதிர்பார்ப்புக்கள் வைப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம் உன்டு. குறித்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத அல்லது நிறைவேற்றிய சந்தர்ப்பத்தில் திருப்தி அளவு அதிகம் குறைவாக காணப்படும் சமயத்தில் expected need (எதிர்பார்ப்பு) satisfaction (திருப்தி)க்கு மத்தியில் இடைவெளி (gap) உண்டாவதாகவும் அந்த இடைவெளியின் அதிகரிப்பில் மோதல்/ முரண்பாடுகள் தோன்றுவதாகவும் Davies என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

இவரது குறிப்பின் பிரகாரம் மனைவியின் அதிமிஞ்சிய எதிர்பார்ப்பு திருப்தி தராத சமயத்தில் முரண்பாடுகள் உருவாகுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். இதனை தடுப்பதற்கு மனைவிக்கு துணையின் பொருளாதார நிலை தொடர்பான உன்மை நிலையை திருமணத்திற்கு முந்திய உளவளத்துணையின் மூலம் தெரியப்படுத்துவது தகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த வழிவகுக்கும். இதன் மூலம் எதிர்பார்ப்பு – திருப்திக்கு மத்தியிலான இடைவெளி (gap) பரந்த அளவில் உருவாகாது பேனலாம்.

பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயார்படுத்தல்.

Premarital counseling (திருமணத்திற்கு முந்தியஉளவளத்துணை) மூலம் தம்பதியினர் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் அனுபவமும் அங்கீகாரமும் உடைய உளவளத்துணையாளறிக்கு ‘கருதுகோல்’ வைப்பதற்கு முடியுமாக அமையும். அதன் மூலம் தம்பதியினர் முகம் கொடுக்க இருக்கும் பிரச்சினைகளையும், பொதுவான திருமணம் தொடர்பான பிரச்சினைகளையும் தம்பதியினர் மத்தியில் முன்வைப்பதன் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அதற்கான மாற்றீட்டுத்திட்டங்களை வடிவமைக்கவும் முடியுமாக அமையும்.

குடும்ப வாழ்விற்கு தேவையான திறன் , அறிவு விருத்திக்கு.

திருமண வாழ்க்கை என்பது ஒரு கலை. அதற்கு அறிவும், திறனும் அதிகம் அவசியமடைகிறது. இது Premarital counseling (திருமணத்திற்கு முந்தியஉளவளத்துணை) செயல்முறையில் தம்பதிகளுக்கு உளவளத்துணையாளரின் மூலம் திறன் பயிற்சியும் அறிவு விருத்தியும் ஏற்படுத்தப்படும்.

திருமணத்திற்கு முற்பட்ட பிரச்சினைகளின் தாக்கம் திருமண வாழ்வில் தாக்கம் செலுத்தாமல் இருக்க.

தம்பதிகளின் ஒருவர் திருமணத்திற்கு முன் காதல் தொடர்புகளில் இருந்தால் அல்லது ஒருவர் உளவியல்சார் கோளாருகளிற்கு ஆளாகிய நிலையிலோ அல்லது நடத்தைசார் பிறப்பில் இருக்கும் சமயத்தில் அவரிற்கான முறையான சிகிச்சை அழிக்கப்படாத நிலையில் திருமண உறவு திருப்திகரமாக இருக்காது. மாற்றமாக அவற்றின் தாக்கம் தம்பதிகளின் மகிழ்ச்சிகரமான திருமண உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

மேலும் இருவரில் ஒருவருக்கு பாரிய உள நோய்கள் காணப்பட்டால் திருமணவாழ்வு முழுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் அதிகமாக காணப்படும். இதற்கான ஒரு முறையான இடையீட்டு செயல்முறையின் மூலம் பொருத்தமான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். மேற்குறித்த பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கும், தம்பதியினருக்கு தம் நிலையை அல்லது தன் துணையின் நிலையின் உன்மை தன்மையை தெரியப்படுத்துவதற்கும் திருமணத்திற்கு முற்பட்ட உளவளத்துணை அதிகம் அவசியமடைகிறது.

தம்பதியினர் தமது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இது சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்கிறது. இதன் மூலம் வெரும் கட்பனா நினைவுகளுடன் திருமண பந்தத்தில் இருதரப்பினரும் இணையாமல் மெய்யான யாதார்த்த ரீதியான வாழ்வை தயார்படுத்த திருமணத்திற்கு முற்பட்ட உளவளத்துணை அதிகம் அவசியமடைகிறது.

இன்றைய நமது கலாச்சாரத்தில் பாலியல் அறிவு பெரிதும் மட்டமான நிலையிலே உள்ளது. வெரும் கற்பனைக்கதைகள் அல்லது போலி வழிகாட்டல்கள் அல்லது பாலியல் நடிப்புக்கள் (pornograpgy) மூலமாக மாத்திரமே அது இளம் தலைமுறையினறிற்கு ஊட்டப்படுகிறது. 50% ற்கும் அதிகமான தம்பதியினர் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி காணவில்லை என அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மேலும் தம்பதியினரிற்கு காணப்படும் உடல்சார் பாலியல் பிரச்சினைகள் ( sexual dysfunction ) மற்றும் உளவியல்சார் பாளியல் கோளாருகள் ( sexual deviation ) தொடர்பான விளிப்புணர்வு அவசியமடைகிளது. இவற்றை தொழில்வான்மையான உளவளத்துணையாளர் மூலம் திருமணத்திற்கு முற்பட்ட உளவளத்துணை செயல்முறையின் மூலம் செய்ய முடியுமாக அமையும்.

  • தமது எதிர்பார்ப்புக்களை பரஸ்பரம் தெரிவிக்க
  • தத்தமது துறைகளையும் கனவுகளிற்கும் பொருத்தமான துணையா என பரீட்சிக்க
  • தமது எதிர்கால சந்ததியினர் தொடர்பான திட்டமிடல் மற்றும் தயார்படுத்தலுக்க தயார்படுத்த
  • தமது பாத்திரம் ( roals) இனை முறையாக தெரிந்து கொள்வதற்கு?

என இதுபோன்ற பலவிடயங்களின் காரணமாக நமது இன்றைய நிலையில் திருமணத்திற்கு முன்னைய உளவளத்துணை அவசியமடைகிறது. வெரும் இடைத்தரகரின் வார்த்தையை மாத்திரம் வாக்காக கருதி திருமண வாழ்வில் இணைவதற்கு பகராமாக முறையான அறிவும் அங்கீகாரமும் படைத்த உளவளத்துணையாளரின் விஞ்ஞான ரீதியான துணை நடவடிக்கையை மேற்கொன்டதின் பின் திருமண நடைபெறுவது ஆரோக்கியமான குடும்ப கட்டமைப்பிற்கான ஆரம்ப முதலீடாக அமையும். இது தொடர்பான பொதுசன விளிப்புணர்வு மற்றும் அனைத்து பாத்திரங்கள் மத்தியிலான அறிவூட்டல் அதிகம் அவசியம் அடைகிறது.

Fazlan A Cader
வியூகம் வெளியீட்டு மையம்

ஆன்மீகத் தலைமைகள் சமூகத் தலைமைகளின் கவனத்திற்கு. தம்பதிகளிற்கான உளவளத்துணை செயன்முறைகளின் மூலம் ஆரோக்கியமானதும், மகிழ்ச்சிகரமாணதுமான குடும்ப அமைப்பு தோற்றுவிப்பதுடன் திருமணத்திற்கு தயார் படுத்துதல் அல்லது பிரச்சினை வருமுன் தவிர்த்தல், பிரச்சினை தீர்த்தல், திருமண உறவின்…

ஆன்மீகத் தலைமைகள் சமூகத் தலைமைகளின் கவனத்திற்கு. தம்பதிகளிற்கான உளவளத்துணை செயன்முறைகளின் மூலம் ஆரோக்கியமானதும், மகிழ்ச்சிகரமாணதுமான குடும்ப அமைப்பு தோற்றுவிப்பதுடன் திருமணத்திற்கு தயார் படுத்துதல் அல்லது பிரச்சினை வருமுன் தவிர்த்தல், பிரச்சினை தீர்த்தல், திருமண உறவின்…

11 thoughts on “திருமணத்தை எதிர் நோக்கியவர்களுடன் ஒரு சில நிமிடங்கள்

  1. I have recently started a blog, the information you provide on this website has helped me tremendously. Thank you for all of your time & work.

  2. An impressive share, I just given this onto a colleague who was doing a little analysis on this. And he in fact bought me breakfast because I found it for him.. smile. So let me reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending the time to discuss this, I feel strongly about it and love reading more on this topic. If possible, as you become expertise, would you mind updating your blog with more details? It is highly helpful for me. Big thumb up for this blog post!

  3. I simply couldn’t leave your web site prior to suggesting that I really loved the standard info a person provide for your visitors? Is going to be back regularly in order to inspect new posts.

  4. I needed to draft you a little observation to give many thanks yet again about the breathtaking basics you’ve provided above. This has been certainly pretty generous of people like you to make openly what a few people would’ve marketed for an e book to help make some profit for themselves, particularly now that you might have done it in case you considered necessary. These points also acted as the fantastic way to realize that some people have similar passion similar to my own to know a good deal more with regards to this condition. I’m sure there are several more pleasurable moments in the future for many who look over your site.

  5. Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the post I realized it’s new to me. Anyways, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently!

  6. With havin so much content and articles do you ever run into any problems of plagorism or copyright infringement? My blog has a lot of exclusive content I’ve either authored myself or outsourced but it looks like a lot of it is popping it up all over the web without my permission. Do you know any methods to help prevent content from being ripped off? I’d truly appreciate it.

  7. F*ckin’ remarkable issues here. I am very satisfied to look your post. Thanks a lot and i’m taking a look forward to contact you. Will you kindly drop me a mail?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *