திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 25

  • 19

அங்கிள் இது சுரேஷ்ட வீடு தானே? சுரேஷ் இருக்காறா?

ஓம் நீங்க??

வசீகரான்னு சொல்லுங்க” எதுவும் அறியா சுந்தர் குழப்பிப் போனான். வாயிலில் ஓர் பெண் குரல் கேட்டு ராதாவும், வாணியும் சுந்தரின் பின்னால் வந்து நின்றார்கள்.

“யாரும்மா நீ

என் பெயர் வசீகரா ஆன்ட்டீ” அனைவரையும் ஈர்க்கும் அழகான சிரிப்பு அவளை இன்னும் அழகு படுத்திக் காட்டியது.

“நீங்க வாணி தானே? உங்களப் பத்தி சுரேஷ் அடிக்கடி சொல்லுவான்.

அடிக்கடியா?

ஆமாம்” மீண்டும் அவள் இதழ் விரிந்தது.

“ஆனா உங்களப் பத்தி எதுவும் சொல்லில்லயே?” ஆச்சரியமாய் கேட்டாள் வாணி.

“சரி யாரும் உள்ள கூப்பிட மாட்டீங்களா?

அட வாயில்லயே வெச்சி பேசிட்டு இருந்துட்டோம் வாங்கம்மா..” அழைத்தது ராதா தான்.

அவளும் முகம் வாடா எழிலோடு முன் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். அவள் கண்கள் சுரேஷைத் தேடியது. ஆயினும் வீட்டில் எல்லோர் வதனங்களிலும் நிறைந்திருந்த கவலையும், அழுதமைக்கான தடயங்களும் அவளுக்கு ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருக்க மீண்டும் சுரேஷ் குறித்து விசாரிப்பது நன்றாகத் தோன்றவில்லை.

ஆனால் வாணி  வசீகராவின் நிலைமையைப் புரிந்து கொண்டவள் போல் தன் தம்பியின் அறைக் கதவை பலமாகத் தட்டினாள்.

“சுரேஷ் கதவ திற டா, வசீகரான்னு யாரோ உன்ன பார்க்க வந்திருக்கா?” இதை உண்மையில் எதிர்பார்க்கா சுரேஷ் நடுங்கிப் போனான்.

“வசீகராவா? இவள் எதற்கு இங்க வரணும்? அடக் கடவுளே நான் மாட்டிக் கொண்டு விட்டேனா?” என்ன செய்வதென்று விளக்கம் தெரியாமல், யாரோ தெரியாத ஒருத்தி போல் முகஜாடையை வைத்துக் கொண்டு நிதானமாக வந்து கதவைத் திறந்தான். எல்லோர் பார்வையும் அவன் பக்கமிருந்தது. வாணி சுரேஷை முறைத்துப் பார்ப்பதை கண்டும் காணாதவன் போல் “இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” எனும் அளவுக்கு வதனத்தை வைத்துக் கொண்டிருந்தான். ஆனால் வசீகரா சுரேஷை கண்டதும் வாய் மூடாது பேச ஆரம்பிக்க அனைவரும் வாய் திறந்து பார்த்திருந்தனர்.

“உனக்கு காலையில இருந்து எத்துன கோல் சுரேஷ்? என்னான்டு சரி பார்க்க இருந்திச்சு தானே? நான் எவ்வளவு பயந்து போயிட்டன் தெரியுமா? அதவிடு ஏன் இப்புடி முகத்துல கவலய வெச்சிட்டு இருக்க? நான் சொல்லி இருக்கன் தானே எப்பவும், என்ன இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கனும்னு சொல்லி? கொஞ்சம் சிரியேன் சுரேஷ். எனக்கு உன்ன இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு” அம்மாப் பிள்ளை போல் நின்றருந்த சுரேஷுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.

“வசீ வாய மூடு” வாயால் முணுமுணுத்தான்.

“யாரு தம்பி இவங்க?” வாணியால் விபரம் அறியாது இருக்க முடியவில்லை.

“அது.. அது வந்து

உண்மைய சொல்லு சுரேஷ். எப்பசரி எல்லாம் தெரியத் தானே போகுது” வசீகரா குறுக்கிட, சொல்லாமலேயே எல்லோரும் அவளை யாரென்று அறிந்து கொண்டனர்.

“தம்பி..” கத்திக் கொண்டு எழுந்தாள் வாணி.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அங்கிள் இது சுரேஷ்ட வீடு தானே? சுரேஷ் இருக்காறா? ஓம் நீங்க?? வசீகரான்னு சொல்லுங்க” எதுவும் அறியா சுந்தர் குழப்பிப் போனான். வாயிலில் ஓர் பெண் குரல் கேட்டு ராதாவும், வாணியும் சுந்தரின் பின்னால்…

அங்கிள் இது சுரேஷ்ட வீடு தானே? சுரேஷ் இருக்காறா? ஓம் நீங்க?? வசீகரான்னு சொல்லுங்க” எதுவும் அறியா சுந்தர் குழப்பிப் போனான். வாயிலில் ஓர் பெண் குரல் கேட்டு ராதாவும், வாணியும் சுந்தரின் பின்னால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *