திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 26

  • 9

“தம்பி..” கத்திக் கொண்டு எழுந்தாள் வாணி.

“புள்ள நல்லா தான் இருக்கு” வாணிக்கு குறுக்காய் சுந்தர் சொல்லிச் சிரிக்க அவள் வாயடைந்து போனாள்.

வாணி எதுவும் பேசாது அறைக்குள் செல்ல, வாணியின் பின்னால் ஓடினான் சுரேஷ்.

“ஹே என்னடி, உனக்கு அவளப் பிடிக்கல்லயா? சொல்லு

என்கிட்ட ஏன் இத விஷயத்த ஆரம்பத்துலயே சொல்லல்ல, உனக்கு இப்போ நான் முக்கியமில்லாம போயிட்டன் தானே?

அப்படி ஒன்னும் இல்லடி.. எனக்கு ஒரு புள்ளய புடிச்சிருக்குன்னு சொல்ல கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு புரிஞ்சிக்க பிளீஸ்”

வாணி எதுவும் பேசாது செய்து வைத்த சிலை போல் கிடந்தாள்.  அதற்குள் வசீகரா எழுந்து வாணியின் அறை தேடி வந்து விட்டாள்.

“வாணி சிஸ்டர் ஐ யம் ரியலி சொறி, நான் என்ன சரி தப்பா நடந்துட்டனா?

நோ அப்படி ஒன்னும் இல்ல, என்கிட்ட எதுவும் மறைக்காத என் தம்பி இந்த விஷயத்த சொல்லாம விட்டுட்டான். அதுதான் ரொம்ப வேதனையா இருக்கு.

ஐ யம் சொறி டீ” பதிலுக்கு இணைந்து கொண்டான் சுரேஷ். அப்பொழுதும் அவள் கல்லாகவே நின்றிருக்க, “சரி நான் என்ன செய்யனும்? சொல்லு, உன் இஷ்டத்துக்கு செய்வன்” சவாலோடு எழுந்து நின்ற சுரேஷை அதற்கு மேலும் பணிந்து போக விடாது கட்டியணைத்துக் கொண்டாள் வாணி. குழுமியிருந்த முகங்கள் அப்பொழுது தான் கொஞ்சமாய் சிரித்துக் கொள்ள, வசீகராவை தங்களுக்குள் ஒருத்தியாய் அவ் வீட்டினர் ஏற்றுக் கொள்ள நீண்ட நேரம் செல்லவில்லை.

இப்படியே காலங்கள் உருண்டோட, சுரேஷின் கல்விக் காலம் முடிந்து தொழில் உலகில் கால் வைத்திருந்தான். அவன் எல்லா நிலைமைகளுக்கும் உறுதுணையாய் இருந்தாள் வசீகரா. ஆயினும் சுரேஷுக்கு மூத்தவளாய் வாணிக்கு பொருத்தமான துணைவனை காண்பது தான் பெரும் சிக்கலாய் இருந்தது. தோல் பார்த்து விரும்பும் உலகத்தில் இவளின் கருமை நிறம் எடுபட வேண்டுமல்லவா? எத்தனையோ இடங்கள் பார்த்துப் போட்டும் பிறகு சொல்வதாய் சொல்லிச் சென்று பதில் வந்தது தான் இளவு காத்த கிளிக் கதையாகிப் போயிட்டு. இவ்விடயத்தில் வாணி மிகவுமே நொந்து போனாள். தனக்கேற்றவனை கடவுள் படைக்காது விட்டு விட்டானோ என சந்தேகம் கொண்டாள். தன்னால் தன் தம்பியின் வாழ்வு பாதித்து விடக் கூடாதென்பதே அவளுக்கு பொரும் பாதிப்பாய் இருந்தது.

“அக்கா, அக்கா எங்க நீ?” அறைக்குள் சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளை தேடி வந்தான் தம்பிக்காரன்.

“என்ன அக்கா ஒருமாதிரி இருக்க?” சுரேஷின் கேள்வி அவளின் அணைக்கட்டை உடைத்து விட தம்பியை பற்றிக் கொண்டு கதறி அழுதாள்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“தம்பி..” கத்திக் கொண்டு எழுந்தாள் வாணி. “புள்ள நல்லா தான் இருக்கு” வாணிக்கு குறுக்காய் சுந்தர் சொல்லிச் சிரிக்க அவள் வாயடைந்து போனாள். வாணி எதுவும் பேசாது அறைக்குள் செல்ல, வாணியின் பின்னால் ஓடினான்…

“தம்பி..” கத்திக் கொண்டு எழுந்தாள் வாணி. “புள்ள நல்லா தான் இருக்கு” வாணிக்கு குறுக்காய் சுந்தர் சொல்லிச் சிரிக்க அவள் வாயடைந்து போனாள். வாணி எதுவும் பேசாது அறைக்குள் செல்ல, வாணியின் பின்னால் ஓடினான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *