திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 27

  • 12

என்ன அக்கா ஒருமாதிரி இருக்க?” சுரேஷின் கேள்வி அவளின் அணைக்கட்டை உடைத்து விட தம்பியை பற்றிக் கொண்டு கதறி அழுதாள்.

என்ன அக்கா? என்ன ஆவிட்டு? இப்போ எதுக்கு அழுகுற?

என்னால எல்லோருக்கும் தொல்லையா போயிட்டு தானே?

ஏன்டீ அப்படி சொல்ற? நாங்க யாரும் கனவுல சரி அந்தமாதிரி நெனச்சில்ல, எதுக்கு இப்போ வீணா மனச போட்டு குழப்பிக் கொள்ற?

உன் விஷயமும் நடக்கனுமே தம்பி..

இப்போ அதுக்கான அவசரம் இல்ல அக்கா, நீ கவலப் படாம இரியேன் பிளீஸ்.

எங்கும் அமைதி நீள, வீடே மயானமாய் கிடந்தது.

ஆயினும் ஏதோ சொல்லி வைத்தது போல் வசீகராவின் வீட்டிலிருந்து வந்தது அவ் அழைப்பு. சுரேஷுக்கு பெரிதாக அவசரம் இல்லா விட்டாலும், வசீகராவின் வீட்டினர் அவசரப் படுத்திக் கொண்டிருந்தனர். சுரேஷ், வசீகரா சமவயதினராக இருந்த படியால் திருமணப் பேச்சு வார்த்தையையேனும் முடித்து வைக்க வேண்டுமென்பதில் வசீகராவின் குடும்பத்தினர் மும்முரமாய் இருந்தனர்.

“உங்க பையன் போல இல்லயே நம்ம பொண்ணு, கடைசியில நீங்க கைவிட்டு விட்டா அவங்க வயசு போனதும் யாரு அவங்கள கட்டி கொள்வாங்க? பொம்புள புள்ளய பெத்த அப்பா, அம்மா எல்லா விதத்துலயும் யோசிப்பாங்க இல்லயா?”

சுரேஷின் வீட்டினர் தடுமாறிப் போயினர்.

“சுரேஷ்

அப்பா…

உங்க வீட்டால போன் பண்ணி இருந்தாங்க.

எனக்கு தெரியும் அப்பா, அதுக்குன்னு அக்கா இருக்க நான் எப்படி? நான் வசீ கூட பேசிக் கொள்றன். எல்லாம் நல்லதாத் தான் நடக்கும்.

ஹ்ம்ம்ம்

இரீங்க அப்பா நான் வசீ கூட பேசிட்டு வந்துட்றன்.

சரிடா..

வசீகராவுக்கு அழைப்பு செய்தவன் தன்னவள் தன் நிலைமையை புரிந்து அனுசரித்துப் போவாளென முழுமையாக நம்பினான்.

“வசீ என்பக்க நியாயம் உனக்கு தெரியுதில்ல? அக்காவுக்கு ஒன்னும் சரி வராம நாங்க எப்படிமா? கொஞ்சம் உங்க அப்பாக்கிட்ட பேசிப் பாரன். பிளீஸ்டா.

உன் மனசுல என்ன சுரேஷ் நெனச்சிட்டு இருக்க? உனக்கு உங்க அக்கா மேல இருக்குற பொறுப்பு எங்க வீட்டுல என் மேல இருக்காதா?

அது சரி வசீ, ஆனா நான் உன்ன கைவிட மாட்டனேடீ, நீ என்ன நம்ப மாட்டியா?

நான் என்ன சொன்னாலும் எங்க அப்பா ஏத்துக்க மாட்டாங்க சுரேஷ்.

பிளீஸ் வசீ..

உனக்கு நான் முக்கியம்னா எங்க விஷயத்தப் பாரு, இல்லன்னா எங்க அப்பா அவ்வளவு காலம் என்ன வெச்சிக்க மாட்டாங்க. உன்ன பிடிக்கும்னு சம்மதம் வாங்க நான் எவ்வளவு எதிர்ப்புக்கள கடந்திருக்கன்னு உனக்கு தெரியாது சுரேஷ். இன்னும் என்ன கஷ்டத்துல போடாத.

அப்படி இல்ல வசீ.. நான் என்ன சொல்ல வாரன்னா..”

மறுமுனையில் அழைப்பு துண்டுக்கப் படுகின்றது..

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

என்ன அக்கா ஒருமாதிரி இருக்க?” சுரேஷின் கேள்வி அவளின் அணைக்கட்டை உடைத்து விட தம்பியை பற்றிக் கொண்டு கதறி அழுதாள். என்ன அக்கா? என்ன ஆவிட்டு? இப்போ எதுக்கு அழுகுற? என்னால எல்லோருக்கும் தொல்லையா…

என்ன அக்கா ஒருமாதிரி இருக்க?” சுரேஷின் கேள்வி அவளின் அணைக்கட்டை உடைத்து விட தம்பியை பற்றிக் கொண்டு கதறி அழுதாள். என்ன அக்கா? என்ன ஆவிட்டு? இப்போ எதுக்கு அழுகுற? என்னால எல்லோருக்கும் தொல்லையா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *