போக்குவரத்தும் போதித்தவையும்

  • 12

வாழ்வே ஓர் பயணம்தான். அப்படியே போய்க்கொண்டிருக்கின்றது எப்போது முடியுமென்று தெரியாமலே. இப்படி இருக்கையில் நாம்  செல்லும் பிரயாணங்கள் சுவாரஷ்யம் மிகுந்ததாகவும் பலதை பதியவிட்டு  போகக் கூடியனவாகவும் இருக்கின்றன.

பல்கலைக்கும் வீட்டிற்கும் 200km தாண்டிய தூரத்தினால் என்னவோ இப்போதெல்லாம் என் வாழ்க்கை பிரயாணமாகவே போய்க் கொண்டிருக்கின்றது.

நாம் சந்திக்கும் மனிதர்களில் பேரூந்துகளில் ரயில்வண்டிகளிலென ஏராளம் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் உள்ள எல்லோரும் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட சிலராவது ஏதோ ஒரு கருத்தை எம்முள் விதைத்து விட்டே சென்றிருப்பர்.

உண்மையில் எம் பிரயாணங்கள் சிறியதோ பெரியனவோ நாம் அமரும் ஆசனத்திற்கு அருகாமையில் இருப்பவர்களுடன் புன்சிரிப்பை பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறுமில்லை. அதற்காக கொஞ்சிக் குலாவியல்ல. நாம் யாரும் வேற்றுக்கிரகணத்திலிருந்து வந்தவர்களல்லர். மேலும் மனிதன் ஓர் சமூகப் பிராணி எனும் அடிப்படையில் கூட்டாய் வாழவே படைக்கப்பட்டிருக்கிறான். நாம் மதிக்காமல் இருந்தும் கூட  ஓர் விக்கல் வரும் போது பரிவுடன் தண்ணீர் போத்தலை நீட்டுகையில் எமக்கே எம்மைப் பற்றியோர் அழுப்பு ஏற்பட்டுவிடும். இப்படி நடந்த பலரின் கதையை நாம் கேள்விப்பட்டுத்தானே இருக்கின்றோம்.

பிரயாணங்கள் தற்காலிகமாக இருந்தாலும் அப்பொழுது உங்களுக்கு ஆறுதலாய் இருக்கப்போவது, உதவுவது எல்லாமே  அங்கிருப்பவர்கள் தான். இடையில் வாகனம் சறுக்கலாம், விபத்துக்குள்ளாகலாம் என போக்குவரத்தில் ஏராளம் தடங்கள் உண்டு. நல்ல துணையுடன் பிரயாணம் செய்வது மிகவும் ஏற்றதாயே இருக்கும்

பிரயாணத்தில் ஹெட்செட்டை அடித்துக் கொண்டு உர்ர் என்று சுற்றியிருப்பருடன் வீம்பில் இருக்காமல் பண்புடன் பழகுவதுடன் மனிதாபிமானம் கலந்து வயோதிபவர் நோயாளிகளுக்கு உதவவும் மறக்கக்கூடாது. சிறுவனை மடியில் வைத்துக் கொள்வதும் முதியோரின் பொதியை சுமக்க உறுதுணையாய் நிற்பதில் குறைவொன்றும் ஏற்படாத போதும் ஆசிர்வாதங்களும் துஆப் பிரார்த்தனைகளும் நிரம்பி வழிவதை உணரக்கூடியதாய் இருக்கும்.

நாம்  இறுதியில் கொண்டு செல்லப் போவது ஒன்றை மட்டும் தான் அது நாம் அடுத்தவருக்கு செலுத்திய அன்பு மட்டுமாகத்தான் இருக்கும்.

Binth Ameen

வாழ்வே ஓர் பயணம்தான். அப்படியே போய்க்கொண்டிருக்கின்றது எப்போது முடியுமென்று தெரியாமலே. இப்படி இருக்கையில் நாம்  செல்லும் பிரயாணங்கள் சுவாரஷ்யம் மிகுந்ததாகவும் பலதை பதியவிட்டு  போகக் கூடியனவாகவும் இருக்கின்றன. பல்கலைக்கும் வீட்டிற்கும் 200km தாண்டிய தூரத்தினால்…

வாழ்வே ஓர் பயணம்தான். அப்படியே போய்க்கொண்டிருக்கின்றது எப்போது முடியுமென்று தெரியாமலே. இப்படி இருக்கையில் நாம்  செல்லும் பிரயாணங்கள் சுவாரஷ்யம் மிகுந்ததாகவும் பலதை பதியவிட்டு  போகக் கூடியனவாகவும் இருக்கின்றன. பல்கலைக்கும் வீட்டிற்கும் 200km தாண்டிய தூரத்தினால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *